Wednesday, September 3, 2014

ஞாயிறு தினங்களின் பொழுது சாயும் போது




ஞாயிறு தினங்களின்
பொழுது சாயும் போது
ஏங்கித் தவித்திடும் மனதை என்ன சொல்ல
பந்து தொலைந்தாலே வந்து போகும் அழுகை
உன்னைத் தொலைத்துவிட்டு
நான் என்ன செய்வேன்

நீ நிறம் மங்கா நினைவாக
என்றும் இருப்பாயே
சிக்கனமாக காதல் செய்ய மனம்
அறியவில்லை

நீ விலகினால்
மிக நான் தவிப்பது
குளிர்நாள் போர்வை
அன்பின் பார்வை
நான் நேசிக்க  வெகுநாள்
கழியனும்
குறைமாதக் குழந்தை
கூறும் அகங்கை

மரக்கன்றை ஊன்றி வைத்தேன்
என்னுள்ளே மெல்ல வளரவே

தரங்கெட்ட ஊரில் உன்னை
கரம் கொண்டே நான் காப்பேன்
நாட்கள் போகட்டும்

திரைப்படம்: பூவரசம் பீப்பீ
இசை:அருள்தேவ்
வரிகள்; ஹலிதா சமீம்














Wednesday, August 6, 2014

அங்கே இப்போ என்ன செய்கிறாய்




அங்கே இப்போ
என்ன செய்கிறாய்?ஆடை மாற்றித் தூங்கச்செல்கிறாய்
என்னைத் தூங்கப்போகச் சொல்கிறாய்
போகிறேன்

போகிறேன் ஓ ஓ
என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ
துழாவிப் பார்க்கத்தோன்றுதே

விரல் நுனி அனுப்பிடும்
விசாரணை சுகமே
பதில் ஒலி வரும் வரை
படும் வலி சுகமே

உயிரில்லையே விரல்களுக்கு
நோகின்றதே அது எதுக்கு (??)
ஆனாலும் ஏன் சுகமிருக்கு
நெஞ்சே சொல்

நிறம் எது மணம் எது
பிடிக்குது உனக்கு
கரும் நிறம்
கடல் மணம்
பிடிக்குமே  எனக்கு
நான் காலையில் எழுந்ததுமே
தானாகவே தலை திரும்பும்
உன் செய்தியை மனம் விரும்பும்
ஏனோ ஏனோ




திரைப்படம் : இரும்பு குதிரை
வரிகள் : தாமரை
இசை : ஜி.வி. ப்ரகாஷ்
பாடியவர்கள்: விஜய்ப்ரகாஷ், எம்.எம்.மானஸி. முக்தா

Last 25 songs posted in Thenkinnam