ஞாயிறு தினங்களின்
பொழுது சாயும் போது
ஏங்கித் தவித்திடும் மனதை என்ன சொல்ல
பந்து தொலைந்தாலே வந்து போகும் அழுகை
உன்னைத் தொலைத்துவிட்டு
நான் என்ன செய்வேன்
நீ நிறம் மங்கா நினைவாக
என்றும் இருப்பாயே
சிக்கனமாக காதல் செய்ய மனம்
அறியவில்லை
நீ விலகினால்
மிக நான் தவிப்பது
குளிர்நாள் போர்வை
அன்பின் பார்வை
நான் நேசிக்க வெகுநாள்
கழியனும்
குறைமாதக் குழந்தை
கூறும் அகங்கை
மரக்கன்றை ஊன்றி வைத்தேன்
என்னுள்ளே மெல்ல வளரவே
தரங்கெட்ட ஊரில் உன்னை
கரம் கொண்டே நான் காப்பேன்
நாட்கள் போகட்டும்
திரைப்படம்: பூவரசம் பீப்பீ
இசை:அருள்தேவ்
வரிகள்; ஹலிதா சமீம்
0 Comments:
Post a Comment