Thursday, March 28, 2013

ஞாயிறு என்பது கண்ணாக

 
 
ஞாயிறு என்பது கண்ணாக 
திங்கள் என்பது பெண்ணாக 
செவ்வாய் கோவை பழமாக 
சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசியபடியே கொடுக்க வந்தேன்படம்: காக்கும் கரங்கள்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்தர்ராஜன், பி.சுசீலா

Monday, March 18, 2013

ஒரு ஜீவன் அழைத்தது

 
ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்


முல்லைப்பூ போல உள்ளம் வைத்தாய் 
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய் 
நெஞ்சில் கள்ளம் வைத்தாய்
நீயில்லை என்றால் என் வானிலென்றும் 
பகல் என்ற ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் 
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே


உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் 
மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் எந்தன் 
நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இன்று கண்டேன் 
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல 
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா 
நிழல் தந்து விலகுமா
இனிமேலும் என்ன சந்தேகமா?படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

Saturday, March 16, 2013

தோட்டம் கொண்ட ராசாவே

தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மா காவல் இருப்பா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா


மேட்டை விட்டு காட்டு வெள்ளம் கீழிறங்கி வந்ததே
தோட்டமும் துலங்குது
வீட்டை கட்டி வேலி கட்டி வாழ வெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது
கட்டிவெல்லம் போல ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல ராசாவைக் கேளுங்க
சிட்டுச் செல்லம்மா ஆம்பளப்புள்ள ஒன்னு பெத்து கொடும்மா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா


பூத்த மல்லி காத்தடிச்சா பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது
காத்திருந்த வண்டு ஒன்னு கால வடிவாச்சுது
வேளை வந்து சேர்ந்தது
பொட்டு வச்ச பார்த்தா தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா அம்மையைப் போல
கட்டித்தங்கமே தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா


கண்டெடுத்த ரத்தினத்தை மண் தொடச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க
கண்ணுபடப் போகுதையா பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க
நல்லதொரு காலம் அலையில ஆடுங்க
ஒன்னுக்குள்ள ஒன்னா உறவில வாழுங்க எங்க துரையே
வாழுங்க வாழுங்க ரொம்ப ரொம்ப நாள்
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடாபடம்: பகலில் ஓரு இரவு
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்சி

Friday, March 15, 2013

கோடை கால காற்றே


கோடை கால காற்றே - திரைப்பாடல்.காம்

கோடை கால காற்றே
குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினந்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலைப்பூக்களே

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே
புது சோலைப்பூக்களே

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பென் மலையருவி பன்னீர் தூவி
பொன்மலையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே
புது சோலைப்பூக்களேபடம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது - thiraipaadal.com


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே


படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Thursday, March 14, 2013

ஆயிரம் மலர்களே மலருங்கள்ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ 
நெருங்கி வந்து சொல்லுங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோபடம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்; ஜென்சி, SP.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்

Wednesday, March 13, 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே 
அம்மாவை வணங்காது உயர்வில்லையே 
நேரில் நின்று பேசும் தெய்வம் 
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது 


அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி 
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா 
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் 
புரிகின்ற சிறுதொண்டன் நான் தானம்மா 
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் 
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே 
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் 
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே 
அதை நீயே தருவாயே 


பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம் 
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா 
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் 
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா 
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி 
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா 
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் 
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா 
உன்னாலே பிறந்தேனே படம்: மன்னன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

Tuesday, March 12, 2013

இதயம் போகுதே எனையே பிரிந்தே 

Ilaiyaraaja - Idhayam Poguthe - Schubert symphony no 8 1st movement (D 759)

 இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மணம் வீசுமோ

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன் போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ

மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
காதல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்


டம்: புதிவார்ப்புகள்
சை: இளைராஜா
பாடல்: ங்கை அரன்
பாடிவர்: ஜென்சி   

Monday, March 11, 2013

அடி என்னடி ராக்கம்மா (சோகம்)அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பல கோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் கலந்தடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்க்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம்
அது தடம் கொஞ்சம் புரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

படம்: பட்டிக்காடா பட்டணமா 
இசை: MS விஸ்வநாதன் 
பாடியவர்: TM சௌந்தரராஜன்
வரிகள் : கண்ணதாசன்

Sunday, March 10, 2013

தூது செல்ல ஒரு தோழி இல்லையென
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழிபன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி

வெந்நீர் நதியை பன்னீர் நதியாய்
பேசலாகுமோ தலைவி

இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி

கடை இருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே
கலக்கம் வாராதோ தோழி


முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்த்தை
மெளனத்தில் அறிந்தாள் தோழி

காவிரிக்கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்த தலைவி

காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி

படம்: பச்சை விளக்கு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

Saturday, March 9, 2013

இது ஒரு நிலாக்காலம்

 
 
இது ஒரு நிலாக்காலம் 
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாதுபடம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.ஜானகி

Friday, March 8, 2013

நாளை இந்த வேளை பார்த்து

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்


படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: வாலி
பாடியவர்: பி.சுசீலா

Thursday, March 7, 2013

என்ன என்ன வார்த்தைகளோஎன்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை


உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணி துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா


நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லை பனி போல நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொலவதா
 
 
படம்: வெண்ணிற ஆடை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா

Wednesday, March 6, 2013

பாடிப் பறந்த கிளிபாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடல்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Tuesday, March 5, 2013

மலையோரம் வீசும் காத்துமலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டுதானம்மா

வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள்மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவை நாளும் தேடும் வானம் நான்

குத்தாலத்து தேனருவி சித்தாடைதான் கட்டாதா
சித்தாடைய கட்டியே கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்


படம்: பாடு நிலாவே
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Monday, March 4, 2013

அடி என்னடி ராக்கம்மாஅடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி

அடி என்னடி ராக்கு
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி

அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை 
உன் கழுத்துக்கு பொருத்தமடி 
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை 
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும் 
அவ கண்ணுக்கு வருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும் 
அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து 
என் கையாலே கட்டி விடவா
என் அத்தை அவ பெத்த என் சொத்தே
அடி ராக்கம்மா கொத்தோடு முத்து தரவோ

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி

தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி 
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி 
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை 
தினம் தினம் நடக்குதடி
ஆஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா 
கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன் 
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி
கல்யாண வைபோகமே

படம்: பட்டிக்காடா பட்டணமா 
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: TM சௌந்தரராஜன்
வரிகள் : கண்ணதாசன்

Sunday, March 3, 2013

அழகே அழகு
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே


படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

Saturday, March 2, 2013

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான்விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய


வீதியெங்கும் வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன மின்ன
வெண்ணிலாவும் நின்று பார்த்தது
வெள்ளிமீன்கள் வைரமின்னல்
ஒன்று சேர்ந்து நின்றதென்று
கண் மயக்கும் காட்சியானது
என்ன மாயமோ என்ன ஜாலமோ
என்று எண்ணித் தொட்டுப் பார்த்தது
தொட்ட வேளையில் ஷாக்கடித்ததோ
பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது
வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பார
வானம் கண்டது வாடி நின்றது
மேகம் தன்னை தூது விட்டது
விடிய விடிய


சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள
பன்னிரெண்டு மணி அடித்தது
பழைய வருஷம் போனதிங்கு
புதிய வருஷம் பூத்ததென்று
ஊர் முழுக்க வெடி வெடித்தது
இன்பம் என்பது இங்கு வந்தது
துன்ப நாட்கள் ஓடிப் போனது
இந்த பூமிதான் இந்த நாளிலே
சொர்கமாக மாறிப் போனது
நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
வான் தேடுது போராடுது
தன் கூட வா என்றது
விடிய விடிய


படம்:அஞ்சலி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி

Friday, March 1, 2013

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி


படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Last 25 songs posted in Thenkinnam