Monday, March 11, 2013

அடி என்னடி ராக்கம்மா (சோகம்)



அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பல கோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் கலந்தடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்க்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம்
அது தடம் கொஞ்சம் புரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

படம்: பட்டிக்காடா பட்டணமா 
இசை: MS விஸ்வநாதன் 
பாடியவர்: TM சௌந்தரராஜன்
வரிகள் : கண்ணதாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam