Sunday, March 10, 2013

தூது செல்ல ஒரு தோழி இல்லையென




தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி







பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி

வெந்நீர் நதியை பன்னீர் நதியாய்
பேசலாகுமோ தலைவி

இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி

கடை இருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே
கலக்கம் வாராதோ தோழி


முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்த்தை
மெளனத்தில் அறிந்தாள் தோழி

காவிரிக்கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்த தலைவி

காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி









படம்: பச்சை விளக்கு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தென்றல் வீசும் பாடல்...

Last 25 songs posted in Thenkinnam