Wednesday, January 25, 2012

நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை

நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை
நாலாயிரம் பொன் வாங்கலியோ
நாலாயிரம் பொன் வாங்கலியோ
நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை
நாலாயிரம் பொன் வாங்கலியோ
நாட்டியக்குதிரை வாங்கலியோ

சாட்டையைப்போல காலு
சவுரியப்போல வாலு
சாட்டையைப்போல காலு காலு
சவுரியைப்போல வாலு வாலு
நீட்டமான குதிரை வாட்ட சாட்டமான குதிரை

ஆட்டம் ஆடுமோ ஓஓ
ஆகா ஆடும் ஆளைப்போலேஆடும்
பாட்டு பாடுமோ ஓ ஓ
ஆகா பாடும் பலபல குரலில் பாடும்
ஓட்டம் ஓடுமோ
ஆகா ஓடும்
ஓட்டம் ஓடுமோ
ஆகா ஓடும்
முன்னும் பின்னும் ஓடும்
குதிர முன்னும் பின்னும் ஓடும்
கூடக்குறைய விலை சொன்னாலும்
ஆடச்சொல்லு பார்த்திடலாம்
கொஞ்சம் பாடச்சொல்லு
கேட்டிட்டலாம்


சம்மந்தமா விலை சம்மதமா
ச்ம்மந்தந்தான்
ஆடு
ஏக் தோ தீன்
துள்ளித்துள்ளி துள்ளி
ஆடும் வெள்ளி மூக்கு
குதிரையாட்டம் பாரு பாரு
பலே ஜோர்
கட்டிக்கட்டி தீனிபோட்டு
முட்டிக்காலு தட்டிப்போய்
கழுதையானேன்
லல்ல்லாலல்லாலா
ஆங்
ஆடு ஆடு
அடிப்பேன்
லா லல லாலா
ரரர ராரா ரரா

ஆகா பேஷ் பேஷ்
குதிரை
அற்புதமான குதிரை
நாலாயிரம் பொன் எங்கே

இந்தா கொண்டா

கொள்ளும் பில்லும் கடலையும்
இந்தக்குதிரை திங்காது
கொள்ளும் பில்லும் கடலையும்
இந்தக்குதிரை திங்காது
இந்தக்குதிரை திங்காது
கோதுமை அல்வா பாதாம் கீரு
கொண்டுவான்னு கேக்கும்
கோதுமை அல்வா பாதாம் கீரு
கொண்டுவான்னு கேக்கும்
இதுகொண்டுவான்னு கேக்கும்
அய்யோ குதிரையா கேக்கும்
சர்தாம்மா

என் குதிரை என் குதிரை
இசை: எம்.டி.பார்த்தசாரதி
பாடியவர் : சுந்தரி பாய்,பார்த்தசாரதி
திரைப்படம் : சந்தரலேகா

Tuesday, January 24, 2012

என் உயிர் என்னை விட்டு

என் உயிர்
என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ

கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ
நீ என் உடலுக்குள் உயிரல்லவா
ஒரே உயிர் நாமல்லவோ
உடல் வாழவே ஓ
உயிர் போகுமோ
இருதயம் தூளான பிறகு
இடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு
இனி எந்தன் வாழ்வே வீணோ
வெறுமையோ

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று
விழுந்தது என்ன
மலைதான் கொண்ட
அருவிகள் ரெண்டும்
அழுவதுமென்ன
(மண்ணில்)

When you go when you leave
Then you take a little piece of me with you
There's a hole in my soul
Cause you take a little piece of me with you (x2)

உன் கண்ணில் தானே
நான் பார்த்துக்கொண்டேன்
கண்ணே போனால்
நான் என்ன காண்பேன்
உன் செவியில் தானே
நான் ஒலிகள் கேட்டேன்
செவியே போனால்
யார் பாடல் கேட்பேன்
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க
காற்றுக்கு விரல் இல்லை
கண்ணீரைத் துடைக்க
வாழ்வினை இழந்த பின் வாழ்வா
ஓ நீ வா
(மண்ணின் மேல்)


நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை
எங்கே உடையும் யார் சொல்லக்கூடும்
இலையோடு வழியும்
மழைநீரைப்போல உடலோடு ஜீவன்
சொல்லாமல் போகும்
உயிரே நான் என்ன ஆவேன்
உணர்வே இல்லாத கல்லாகிபோவேன்
மரணத்தை வெல்ல வழி இல்லையா
நீ சொல்
(மண்ணின் மேல்)

இசை: விஷால் - சேகர்
பாடியவர்: சின்மயி
திரைபடம்: ரா. ஒன்முழுப்பாடலும் கேட்பதற்கு http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Ra%20One/En%20Uyir%20Ennai%20-%20TamilWire.com.mp3

Tuesday, January 17, 2012

எல்லையில்லாத இன்பத்திலே

எல்லையில்லாத இன்பத்திலே
எல்லையில்லாத இன்பத்திலே-நாம்
இணைந்தோம் இந்த நாளே
இமையும் விழியும் போலே-நாம்
இணைந்தோம் அன்பினாலே
எல்லையில்லாத இன்பத்திலே


மலரும் பூவெல்லாம் ஆவலினாலே
மருவும் தேன்வண்டை தேடல் எதனாலே
அழகின் ஓவியமே
என்னாசைபோலே ஆருயிர் நாயகி
ஆனதனாலே

எல்லையில்லாத இன்பத்திலே
இமையும் விழியும் போலே
நாம் இணைந்தோம் அன்பினாலே

ஆடிடுவோம் அன்பினாலே- நாமே
ஓடையிலே துள்ளும் மீன்களைபோல
ஆடிடுவோம் அன்பினாலே
ஆசையாய் நிலவின் ஜோதியினாலேஏஏ
ஆஆஆ
ஆசையாய் நிலவின் ஜோதியினாலே
அல்லியும் உன் போலே சிரிப்பதைப்பார்
நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே
ஏஏஏ
பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை

ஆடிடுவோம் அன்பினாலே- நாமே
ஓடையிலே துள்ளும் மீன்களைபோல
ஆடிடுவோம் அன்பினாலே

கண்ணாலே பேசும் என் கண்ணா
உன் நேசம்
என்னாளும் வாழ்வில் இனி மாறாத பாசம்
பென்ணே உன் போலே
நதி சங்கீதம் பாடி
தன்னாலே ஓடுது பார் கடல் தன்னை நாடி

மின்னாத செம்பும் பொன்னாதல் போலே
ஒன்றாகும் காதல் ஒரு ரசவாத லீலை
கண்ணாலே பேசும் என் அன்பே
உன் நேசம்
என்னாளும் வாழ்வில் இனி மாறாத பாசம்


திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள்
பாடியவர் : p.லீலா , சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள் :கு.ம. பாலசுப்ரமணியம்
இசை: ஜி.ராமநாதன்
http://google.saregama.com/music/pages/listen_popup?mode=listen_popup&query=INH100631037

Thursday, January 12, 2012

காதல் ஒரு தேவதையின் கனவா

http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Marina.html


காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா

காதல் நம்மைத் தூக்கிச் செல்லும் சிறகா
காலடியில் சறுக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா
( காதல் ஒரு )

காதல் அனல் தரும் வெயிலா
புனல் தரும் மழையா
பயம் தரும் புயலா
இந்த காதல்
வனம் தரும் அகிலா
மறைந்திடும் திகிலா
மாயம் தானா
காதல்
மின்னலின் துகளாம்
மிரட்டிடும் இருளாம்
மாயவன் செயலா
இந்தக் காதல் மலர்களின் திடலாம்
முட்களின் தொடலா
காயம் தானா

காணல் அலையா
வெறும் காட்சிப் பிழையா
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா
தூண்டில் வலையா
நெஞ்சைத் தாக்கும் கொலையா
இருந்தும் வாழ வைக்கும் மருந்தா
விருந்தா
( காதல் ஒரு)

காதல் கனவதன் கனவா
தவங்களின் தவமா
வரங்களின் வரமா
இந்தக் காதல்
கடவுளின் இனமா
அசுரனின் குணமா
விடைகள் இல்லை

காதல் பிறவியின் பயனா
துரத்திடும் கடனா
உளரிடும் திறனா
இந்தக் காதல்
இம்சையின் மகனா
ரசித்திடும் முரணா
சொல்வார் இல்லை

பூக்கள் கடையா
உயிர் வாங்கும் கதையா
இது வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்றாய் மோதும் படையா
ஞான நிலையா
பொய் பேசும் கலையா
தூரல் நின்று பின்பும் தூறும் நிலையா

(காதல் ஒரு)

பாடியவர்: ஹரிச்சரண்
இசை : கிரீஷ்
திரைப்படம் : மரினா
வரிகள் : நா.முத்துக்குமார்

Tuesday, January 10, 2012

நீயில்லை நான் இல்லை

உன் ஜீவன் நானென்று
உன் நெஞ்சம் காதில் சொல்ல
சொல்ல ஓ..
என் ஜீவன் நீயென்று
என் காதல் சொல்ல
சொல்ல

நீ இல்லை நான் இல்லை
நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சும்
கை கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக
நீ பூக்கும் நேரம்
என்னோடு
நான் இன்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசம் எல்லாம்
நீயாகினாய்
தேகம் நீயா ஜீவனும் நீயா
நீயல்லாம் நானென்று வியக்கிறேன்

அதிகாலையில் என் போர்வையாய்
உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே
என் கூந்தலில் இனி உன் மீசையோ
அடி உன் சேலையில் இனி என் வாசமோ
தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்
தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்
உன்னாலே உயிர் வாழ்கிறேன்

அதிசயங்கள் பார்த்தாலோ
மழலையாகும் உன் நெஞ்சம்
அந்த நொடி என்கண்கள்
உன்னைப்பார்த்து
பூ பூக்குமே

தேவையென்று நான்கேட்க
தேவனாக மாறுகின்றாய்
போதுமென்று நான் சொல்ல
பக்தனாக ஏங்குகின்றாய்
அன்னை தந்தை கண்டதில்லை
உன் போல் சொந்தம் ஏதுமில்லை
அன்பே சிவமாம் அறிந்ததில்லை
உன்னை அன்றி தெய்வமில்லை

உன் மூச்சில்
நானிருக்க
என் மூச்சில்
நீயிருக்க
உயிரது பிரிந்தாலும் நாம் வாழுவோம்
பாடியவர்கள் : ஜானகி ஐயர் , எஸ்.பி பி
படம்: பயம் அறியான்
இசை: p.c. சிவன்
வரிகள்:மோகன் ராஜன்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGPCS0003'&lang=en

Tuesday, January 3, 2012

விதைத்த விதை தளிராய் எழுந்து

விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது

காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது
பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு
போனால் என்ன
மனம்தானே ஒன்று
போகும் பாதை அது சேரும் இன்று
வேறென்ன நாம் சொல்வது

(விதைத்த)

பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு
நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு
மேலும் மேலும் பல காதல் கோலம்
தோன்றும் காலம் இது காதல் காலம்
ஆனந்தமே ஆனந்தமே

(விதைத்த)

பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி , சசிரேகா
இசை: இளையராஜா
திரைப்படம்: எத்தனை கோணம் எத்தனை பார்வை

ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ

மெட்டி மெட்டி
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும்
வான் மீதோ
மெட்டி மெட்டி

ஓ சின்னப்பூவே நீ அழவோ
வண்ணக்காலில் தீ இடவோ
துள்ளி ஓடும் வெள்ளி பீடம்
கொள்ளி தேடும் நாளிதோ
இல்லம் ஊமையானதோ
இருள் தேடிப்போனதோ
கண்ணீர் ஆறே ஓடும்
மெட்டி மெட்டி

(ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ)

ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே
மெட்டி ஓசை காவியமே
அன்பின் வேதம் அன்னையாகும்
இன்ப நாதம் காலிலே
முள்ளில் பாதம் போனதோ
முகம் ஜோதியானதோ
சொல்லே இல்லை பாட

மெட்டி மெட்டி

((ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ)

பாடியவர்கள் : ப்ரம்மானந்தம், சசிரேகா
படம்: மெட்டி
இசை: இளையராஜா

பாடலை இங்கே கேட்கலாம்.

Last 25 songs posted in Thenkinnam