Tuesday, January 17, 2012

எல்லையில்லாத இன்பத்திலே

எல்லையில்லாத இன்பத்திலே
எல்லையில்லாத இன்பத்திலே-நாம்
இணைந்தோம் இந்த நாளே
இமையும் விழியும் போலே-நாம்
இணைந்தோம் அன்பினாலே
எல்லையில்லாத இன்பத்திலே


மலரும் பூவெல்லாம் ஆவலினாலே
மருவும் தேன்வண்டை தேடல் எதனாலே
அழகின் ஓவியமே
என்னாசைபோலே ஆருயிர் நாயகி
ஆனதனாலே

எல்லையில்லாத இன்பத்திலே
இமையும் விழியும் போலே
நாம் இணைந்தோம் அன்பினாலே

ஆடிடுவோம் அன்பினாலே- நாமே
ஓடையிலே துள்ளும் மீன்களைபோல
ஆடிடுவோம் அன்பினாலே
ஆசையாய் நிலவின் ஜோதியினாலேஏஏ
ஆஆஆ
ஆசையாய் நிலவின் ஜோதியினாலே
அல்லியும் உன் போலே சிரிப்பதைப்பார்
நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே
ஏஏஏ
பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை

ஆடிடுவோம் அன்பினாலே- நாமே
ஓடையிலே துள்ளும் மீன்களைபோல
ஆடிடுவோம் அன்பினாலே

கண்ணாலே பேசும் என் கண்ணா
உன் நேசம்
என்னாளும் வாழ்வில் இனி மாறாத பாசம்
பென்ணே உன் போலே
நதி சங்கீதம் பாடி
தன்னாலே ஓடுது பார் கடல் தன்னை நாடி

மின்னாத செம்பும் பொன்னாதல் போலே
ஒன்றாகும் காதல் ஒரு ரசவாத லீலை
கண்ணாலே பேசும் என் அன்பே
உன் நேசம்
என்னாளும் வாழ்வில் இனி மாறாத பாசம்


திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள்
பாடியவர் : p.லீலா , சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள் :கு.ம. பாலசுப்ரமணியம்
இசை: ஜி.ராமநாதன்
http://google.saregama.com/music/pages/listen_popup?mode=listen_popup&query=INH100631037

1 Comment:

வல்லிசிம்ஹன் said...

அருமையான மனதை வருடும் பாட்டு.
நன்றி கயல்.

Last 25 songs posted in Thenkinnam