Tuesday, January 10, 2012

நீயில்லை நான் இல்லை

உன் ஜீவன் நானென்று
உன் நெஞ்சம் காதில் சொல்ல
சொல்ல ஓ..
என் ஜீவன் நீயென்று
என் காதல் சொல்ல
சொல்ல

நீ இல்லை நான் இல்லை
நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சும்
கை கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக
நீ பூக்கும் நேரம்
என்னோடு
நான் இன்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசம் எல்லாம்
நீயாகினாய்
தேகம் நீயா ஜீவனும் நீயா
நீயல்லாம் நானென்று வியக்கிறேன்

அதிகாலையில் என் போர்வையாய்
உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே
என் கூந்தலில் இனி உன் மீசையோ
அடி உன் சேலையில் இனி என் வாசமோ
தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்
தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்
உன்னாலே உயிர் வாழ்கிறேன்

அதிசயங்கள் பார்த்தாலோ
மழலையாகும் உன் நெஞ்சம்
அந்த நொடி என்கண்கள்
உன்னைப்பார்த்து
பூ பூக்குமே

தேவையென்று நான்கேட்க
தேவனாக மாறுகின்றாய்
போதுமென்று நான் சொல்ல
பக்தனாக ஏங்குகின்றாய்
அன்னை தந்தை கண்டதில்லை
உன் போல் சொந்தம் ஏதுமில்லை
அன்பே சிவமாம் அறிந்ததில்லை
உன்னை அன்றி தெய்வமில்லை

உன் மூச்சில்
நானிருக்க
என் மூச்சில்
நீயிருக்க
உயிரது பிரிந்தாலும் நாம் வாழுவோம்
பாடியவர்கள் : ஜானகி ஐயர் , எஸ்.பி பி
படம்: பயம் அறியான்
இசை: p.c. சிவன்
வரிகள்:மோகன் ராஜன்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGPCS0003'&lang=en

4 Comments:

வல்லிசிம்ஹன் said...

அருமை. எங்கிருந்து கண்டு பிடிக்கிறீர்கள் கயல் ,,இந்த முத்துக்களை!!!! இந்தப் படம் பெயர் கூடக் கேள்விப்பட்டது இல்லை. வரிகள் சுகமோ சுகம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி அப்படியே எதாச்சும் கேட்டுட்டே இருக்கும் போது சிக்குது ..:)

ஆடுமாடு said...

முத்து,

வரிகள்: மோகன்ராஜன்
இசை: பி.சி.சிவன்

இப்படியிருக்கணும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ நன்றி மாத்திட்டேன்:))

Last 25 songs posted in Thenkinnam