Wednesday, September 30, 2009

ஈரம் - மழையே மழையே தூவும் மழையே



விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

மை மை மழையே

உன் ஆடைப்ட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைகிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே..)

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

Tuesday, September 29, 2009

யாரோடு யாரோ - யோகி




யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்ன பேரோ
நேற்று வரை நீயும் நானும்
யாரோ யாரோ தானோ

ஒர் ஆளில்லா வானில்
கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ

இது என்ன மாயம்
சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ

நதி வந்து கடல்மீது சேரும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போது
மழை வந்து வெயிலோடு கூடும்போது
யாரோடு யாருமிங்கே

(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)

இதயங்கள் சேரும்
நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்ப்பது இல்லையே

நீரோடு வேரும்
வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே

ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே
புது முகவரி தேடுதோ

வாய்மொழியும் இல்லாமல்
வழியும் சொல்லாமல்
பாசக்கலவரம் சேர்க்குதோ

ஒரு மின்மினியே
மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன நியாயம் கூறு
விதிதானே


பறவைக்கு காற்று
பகையானால் கூட
சிறகுக்கு சேதம் இல்லையே

துளையிட்ட மூங்கில்
தாங்கிய இரணங்கள்
இசைக்கின்றபோதும் இன்பமே

சிறு விதையும் இல்லாமல்
கருவும் கொள்ளாமலே
இங்கு ஜனனமும் ஆனதே

ஒரு முடிவும் இல்லாமல்
முதலும் இல்லாமல்
காலம் புதிர்களைப் போடுதே

அட அருகம்புல்லின் நுனியில் ஏறி
நிற்கும் பனி போலே
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)


படம்: யோகி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: சிநேகன்

ஈரம் - சாரல் ஏன் அது ஏன்



சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அது ஏன்
என் கனவை கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறிப்போவதேனடி
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
பிரிவின் வலியோ கொடிது உயிரே

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

Monday, September 28, 2009

ஈரம் - தரை இறங்கிய பறவைப் போலவே



தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக் குறைந்து போகிறேன்
அட இது என்ன முடங்கிச் சேர்கிறேன்
நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

நதியில் மிதக்கு ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உனர்வு அல்லவா
காதல் பேச்சில் பொய் பூசுவாய்
மயங்கும் வேளையின் மைப்பூசுவாய்
விலக நினைத்தால் கண் வீசுவாய்
தவித்தேன் தவித்தேன் கிடந்துத் தவித்தேன்
கிடந்துத் தவித்தேன்..

எது எது எனை வருடிப்போவது
எது எது எனைத் திருடிப்போவது
எது எது எனை முழுதும் சாய்ந்தது
நெறுப்பும் பனியும் நெருங்குகிறது
நிருதிரு வென விழித்துப்பார்க்கிறேன்
திசை அனைத்திலும் உன்னை காண்க்றேன்
நொடிக்கொருமுறைத் துடித்துப்போகிறேன்
எனதுப்பெயரும் மறந்து நடக்கின்றேன்
நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

அருகில் இருந்தால் உன் வாசனை
தொலவில் இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே
இதமாய் உள்ள என் காதலே
முழுதாய் மாறுது என் வானிலை
இருவரில் யாரும் யாரோ இல்லை
கனவும் நினைவும் இணைந்து வருதே
வருதே வருதே..

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: சுசித்ரா

Sunday, September 27, 2009

நீ காற்று நான் மரம்



நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
(நீ காற்று..)

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
(நீ காற்று..)

நீ வானம் நான் நீலம்
உன்னி நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
(நீ காற்று..)

படம்: நிலாவே வா
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

Saturday, September 26, 2009

என் ஜன்னலில் தெரிவது



என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா?
நான் சாலையில் தொலைத்தது இவளை தானா?

நான் கண்டதும் காண்பதும் கனவு தானா?
என் கடவுளின் முகவரி எதிரில் தானா?

வானில் போன வெண் புறா
மேகம் சென்று தேய்ந்தது
வீட்டில் வந்து பார்த்ததும்
தோட்ட புல்லை மேயுது

வீதி பக்கம் போனது
விதியே கொண்டு சேர்த்தது
கடைசி தகவல் சொல்லுது
காதல் ஒன்று பூக்குது
(என் ஜன்னலில்..)

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்

Friday, September 25, 2009

நினைத்தாலே இனிக்கும் - பனாரஸ் பட்டு கட்டி



பனாரஸ் பட்டு கட்டி
மல்லிப்பூ கொண்டை வச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனசை கெடுத்தா
அவ முந்தான பூவ கண்டு
என் உயிரு புட்டுக்குச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னுடைய பேச்சினிலே ரிங்டோன்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன் விழியின் ஓசையிலே டாஸ்மார்க்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
மயிலே உன் மாராப்பில் மல்கோவா டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ ப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ ஃப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

பளபளக்குது உன் மேனி கண்ணாடி டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
ராத்திரி நீ கண் முளிச்சா நட்சத்திரம் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
பக்கத்திலே நீ வந்தா பல்ஸ் ரேட்டு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னை பார்த்த நாள் முதலா ஃபுல் மீல்ஸு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி

Thursday, September 24, 2009

வெள்ளிமலை மன்னவா



எஸ்.வரலட்சுமி

பழம்பெரும் நடிகை, பின்ணனி பாடகி அமரர் எஸ்.வரலட்சுமி அவர்கள் 22.09.09 அன்று சென்னையில் காலமானார் அவர்களீன் ஆத்மா சாந்தியடைய தேன் கிண்ண நேயர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அவருடைய கணீரென்ற குரலுக்கு அடிமையாகதவர் யாரும் இலர். இந்த பச்சைகுழந்தைக்கு என்ற பாடல் அனைவராலும் கவர்ந்தது. இதோ இந்த ஒலிதொகுப்பு வானொலியில் ஒலிப்பரப்பட்டது அதை பதிவு செய்து உங்களூக்காக வழங்குகிறேன். இந்த சிறிய ஒலித்தொகுப்பை எஸ்.வரலட்சுமி அவர்களின் தீவிர ரசிகர் திருப்புர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இந்த ஒலித்தொகுப்பின் மூன்று முத்தான பாடல்களூம் என்னை கவர்ந்தது.

சிங்கார கண்ணா உன் >> ஏடுதந்தானடி >> வெள்ளிமலை மன்னவா

Get this widget | Track details | eSnips Social DNA



மேலே உள்ள பாடல்கள் மற்றும் தகவல்கள் பதிவிறக்கம் இங்கே

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு
(தென்கிழக்கு..)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையே
உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
(தென்கிழக்கு..)

செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே
(தென்கிழக்கு..)

படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா

Wednesday, September 23, 2009

செவன் ஓ க்ளாக்



தூசி தட்டி எடுத்து ஒலிபரப்பட்ட பாடல் தொகுப்பு சில பாடல்களை நானே கேட்டதில்லை நீங்க எங்கே கேட்டிருக்க போறீங்க இந்த தொகுப்பில் என் மனதை கவர்ந்த பாடல் “செவன் ஓ க்ளாக் தான்” எல்லாமே அபாரம் கேட்டு மகிழுங்கள்.

1.மைத்துனரே மைத்துனரே,மாமியார் மெச்சிய மருமகள்
2.ஆறரவில் ஓர் அறிவு,மகனே கேள்,டி.எம்.எஸ்
3.மெட்டி ஒன்று,மாமியாரும் ஒரு வீட்டு மருகள், எஸ்.சி.கிருஷ்னன்,ரத்னமாலா
4.பூந்தமல்லியிலே கருந்தேள் கண்ணாயிரம்,எஸ்.பி.பி,மனோராமா,சதன்,ஷியாம்,பிலிப்ஸ் கண்ணதாசன
5.கல்யானம் செய்து பார்த்திடுவோம்,கல்யாணம் பன்னிப்பார்,ராமகிருஷ்னா,கண்டசாலா
6.டீ வாஙக டீ,கல்யானபரிசு,சீர்காழி கோவிந்தராஜன்,ஏ.எம்.ராஜா,பட்டுகோட்டைகல்யாணசுந்தரம்.
7.சுண்டெலிக்கும் கைதிகண்ணாயிரம்,கே.வி.மகாதேவன்,மருதகாசி
8.தப் தப் தப்புன்னு துணியை,லவகுசா,திருச்சி லோகநாதன்,எல்.ஆர்.ஈஸ்வரி,மருதகாசி
9.பெண்ணும் பறவையும்,கல்லும் கனியாகும்,டி.எம்.எஸ்,எல்.ஆர்.ஈஸ்வரி
10.கெட்டிக்கரியின் பொய்யும்,கன்னன் என் காதலன்
11.செவன் ஓ க்ளாக்,கலியுக கன்னன்,எஸ்.பி.பி
12.ரொம்பநல்லாத்தான் சொன்னாரு,கூடி வாழ்ந்தால் கோடி நண்மை, டி.எம்.எஸ்
13.ஆடும் கலையே பாடும் தமிழே,கடவுள் தந்த செல்வம்,டி.ஆர்.மகாலிங்கம்,சங்கர் கனேஷ்
14.வாழவிடு இல்லே வழியவிடு,கன்னித்தாய்,தாராபுரம் சுந்த்ரராஜன்,மனோரமா,கே.வி.மகாதேவன்,கண்ணதாசன்

சூப்பர் பாடல்கள் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

என் மன வானில்



என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவென துள்ளி குதிக்கும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால்
உங்கள் துள்ளல் தானாய் அடங்கிவிடும்

உங்களை போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறது
தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
(என் மன..)

இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களே அவனே கொடுத்தான்
மனிதத்தில் இதை யாரும் அறீவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே என்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மணல் நிலம் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே கட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேரென்ன வேண்டும்
(என் மன..)

பொருளுக்காய் பாட்டை சொன்னார்
பொருளற்ற பாட்டே ஆகும்
வாடினேன் அதை நாடும் நானும்
பொதுவில பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திட ராகம் இதுதானே
வாழ்க்கை என்னும் மேடைதனில்
நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும்
பார்வை இன்றி
(என் மன..)

படம்: காசி
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Tuesday, September 22, 2009

வினோதமானவளே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வினோதமானவளே
வினோதமானவளே

வினோதமானவளே
என் வினோதமானவளே
நான் கவிதை சொன்னேன்
அதை உளரல் என்கிறாய்
உளருவதை நீ
கவித என்கிறாய்
வினோதமானவளே
என் வினோதமானவளே
(வினோதமானவளே..)

வினோதமானவனே
என் வினோதமானவனே
நீ நள்ளிரவில்
தொலை பேசி செய்கிறாய்
குட் மார்னிங் சொல்லி
நீயும் சிரிக்கிறாய்
வினோதமானவனே
என் வினோதமானவனே
(வினோதமானவளே..)

என்னுடைய பிறந்த நாளை
ஊருக்கே நீ சொல்லுகிறாய்
அன்றைக்கு விடுமுறை விடவே
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்
வினோதமானவனே..

ஒற்றை ஜடை போட்டு வைத்து
கூந்தல் கலைத்து கொல்லுகிறாய்
அதை மீண்டும் ரெட்டை ஜடையாய்
என்னை பின்ன சொல்லுகிறாய்
வினோதமானவளே

நீ ஒரு நாள் என்னை
கிராமத்து உடையில்
வர சொல்லி பார்க்கிராய்
நீ மறுநாள் என்னை
மேர்கத்தி உடையில்
வர சொல்லி ரசிக்கிறாய்
என் வினோதமானவனே

வெட்கம் வந்தால் என் நகத்தை
நீயும் கடிப்பாய்
அன்பே அன்பே
என் வினோதமானவளே
என் வினோதமானவளே

வினோதமானவனே
என் வினோதமானவனே

அதிகாலை ஐந்து மணிக்கு
நீயும் சென்று குளித்திடனும்
மறுபடியும் ஏழு மணிக்கு
என்னுடன் சேர்ந்து குளித்திடனும்

வினோதமானவனே
உடை மாற்றும் அறையில் நீயும்
அனுமதி இன்றி நுழைந்திடனும்
கதவை நான் சாத்தி விட்டால்
திறக்க சொல்லி கெஞ்சிடனும்

வினோதமானவளே
உன் சேலை தலைப்பா
கூடாரம் போல
எந்தன் முகம் மூடுகிறாய்
உன் கண்மையை எடுத்து
என் முகம் முழுதும்
பூசி வைத்து சிரிக்கிறாய்
என் வினோதமானவளே

ஒற்றை முத்தம்
நானும் கேட்டால்
பத்து கொடுப்பேன்

என் வினோதமானவளே
என் வினோதமாவளே..

படம்: லவ்லி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
வரிகள்: கபிலன்

Monday, September 21, 2009

உப்புக் கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது


உப்புக் கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கணணி ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தச் சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பிச் செல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதித் தாள போல வீணே நாளும் தேயிற - நான்
தேர்வுத் தாள கண்ணீரால ஏனோ எழுதுற
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் - உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் - உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்

(உப்புக் கல்லு......)

மீசை வைத்த அன்னை போலே உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வைப் பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும் - உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் - கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே

(உப்புக் கல்லு......)

படம் : கருப்புசாமி குத்தகைக்தாரர் (2007)
இசை : தினா
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ
பாடல் :

சில்வர் நிலவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சில்வர் நிலவே
அழகிய சில்வர் நிலவே
உந்தன் பெயரை
தேசிய கீதமாய் பாடுவேன்
(சில்வர்..)

ஷேக்ஸ்பியரின் புத்தகத்தை
செந்தமிழில் சொன்னால்
அது நீ நிவேதா
ஐம்பதடி தாஜ் மஹாலை
ஐந்தடியில் செய்தால்
அது நீ நிவேதா
அட தங்கத்திலே
ஆப்பிள் செய்து
அங்கத்திலே ஒட்ட வைத்தால்
நீ நிவேதா
அந்த சூரியனை
ஃப்ரிட்ஜு குள்ளே
வைத்திருந்து கொண்டுவந்தால்
நீ நிவேதா

ஒரு கிலோ ரோஜா
உன் கன்னம் ஆச்சா
அதிலே உம்மா தரலாமா
(சில்வர்..)

மூலிகை பெற்றோல்
அது மெய்யோ பொய்யோ
டைனாசர் வாழ்ந்ததென்பது
மெய்யோ பொய்யோ
நான் உன்மேல் நெஞ்சுக்குள்ளே
கொண்ட காதல்தான்
அது மெய்யடா
அது மெய்யடா

செவ்வாயில் தண்ணீர் உண்டு
மெய்யோ பொய்யோ
இன்னொரு பூமி உண்டு
மெய்யோ பொய்யோ
நான் உன்னை காதலிக்கும்
காதல் மட்டும்தான்
அது மெய்யடி
முழு மெய்யடி

பைனாப்பிள் மரத்தில்தான்
அதில் வேர்கள் கூட
உன்னை போல இனித்திடுமே

சீனாவின் கண்ணாடி
அது உடைந்திடாது
உன்னை போல வளர்ந்திடுமே

நம் கை திரி அளவுதான்
நம் இதயம் உள்ளது
அதில் கடலின் அளவுதான்
இந்த காதல் உள்ளது

அச்சச்சோ அச்ச்சச்சோ கிஸ் மீ டா
அச்சச்சோ அச்சச்சோ கிஸ் மீ டா

வானவில் வண்ணம் எத்தனை
மறந்தே போனேன்
வங்க கடல் எங்கிருக்கு
மறந்தே போனேன்
உன் பெயர் உன் முகம்
உன்னை தவிர
வேரெதுவுமே நினைவில்லையே

நெற்றி பொட்டை எங்கே வைப்பது
மறந்தே போனேன்
காலுக்கு கொலுசா வளையா
மறந்தே போனேன்
உன் விழி உன் குரல்
உன்னை தவிர
அட என்னையே நினைவில்லையே

அந்த ஆகஸ்ட் 15
அன்று என்ன என்று
நினைவில் இல்லை
உன்னாலே

என் பெற்றோரின் பெயர்கூட
இன்று நினைவில் இல்லை
நினைவில் இல்லை
உன்னாலே

அட நிலவின் நிறம் என்ன
அதை மறந்தேண்
நீ சொல்லு

அது சிவப்பென்று நினைக்கிறேன்
இது சரியா
பதில் சொல்லு

நீ சொன்னால் நீ சொன்னால்
நிவேதா
சரிதான் சரிதான்
நிவேதா
(சில்வர்..)

படம்: லவ்லி
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து

Sunday, September 20, 2009

காதோடு தான் நான் பாடுவேன்



காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடு தான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

படம் : வெள்ளி விழா (1970)
பாடியவர் : எல். ஆர். ஈஸ்வரி
இசை :
பாடல் :

ஐனா சபை நடுவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஐனா சபை நடுவே
நம் காதல் கதையை பேசு
உலக கொடிகள் நடுவே
நம் காதல் கொடியினை ஏத்து
(ஐனா..)

போட்டு வைத்த திட்டம் எல்லாம்
வெற்றி பெற போகுதே
கூட்டணிகள் வைத்து கொள்ள
உள்ளம் ரெண்டும் துள்ளுதே
வோட்டு போட உதடுகள் துடிக்குதே
(ஐனா..)

உல்லாச பயணி போல நீ
என்னை சுத்தி சுத்தி பார்ப்பதென்ன
அங்கங்கே உந்தன் கண்கள் வழியிலே
பிடிவாதம் செய்வதென்ன

அபாய வளைவுகள் நீ
என்னை விழ வைத்து ரசிப்பதென்ன
அழகான கனவுகளில் என் மனம்
உன்னோடு வசிப்பதென்ன

என் பெண்மை
தவம் வரம்
இரண்டும் நீதானே

என் காதல்
வலி சுகம்
இரண்டும் நீதானே

கொலுசு என்னை கிள்ள
புது மெட்டி கேட்டு துள்ள
ஓடி நானும் வந்தேன்
உன் இடத்தில் சொல்ல
(ஐனா..)

அலாரம் வைக்காமலே நான்
உன்னை முத்தத்தில் எழுப்பிடுவேன்
காப்பிக்கு முன்பு உந்தன்
அழகினை கண்ணாலே கோதிடுவேன்

நீராட போகும் முன்னே
நான் உந்தன் வேர்வைக்குள் குளித்துடுவேன்
நீ சிரித்தும் சிரிப்புகளை
கூந்தலில் பூவாக சூடிடுவேன்

பூவே உன் இதழ்
அதை பறிக்க தருவாயா
கசங்காமல் அதை அதை
திருப்பி தருவாயா

காதலாலே வாழ்வோம்
நம் காதலாகி வாழ்வோம்
பத்திரிக்கையில் எல்லாம்
தலைப்பு செய்தி ஆவோம்
(ஐனா..)

படம்: லவ்லி
இசை: தேவா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஹரிணி
வரிகள்: வாலி

Saturday, September 19, 2009

கேட்டதெல்லாம் நான் தருவேன்



//ஹாட் சம்மர் மார்னிங் >> ஓ மைனா ஓமைனா >> உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் >> கேட்டதெல்லாம் நான் தருவேன் >> அம்மாடி என்ன உறவு >> ஆடிக்கு பெண்ணே ஆவணி >> முத்துபோல் சிரிப்பென்னவோ >> ஒரு முத்தாரத்தில் மணிவிளக்கே மாந்தளிரே >> அடி ஏண்டி அசட்டு பெண்ணே >> மாறியது நெஞ்சம் மாற்றியது இன்னும் என்ன சொல்ல.//

Get this widget | Track details | eSnips Social DNA


ஆமாங்க கேட்பதெல்லாம் நான் தருவேன் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு திக்கு தெரியாத காட்டிலே அலைந்து பாடல்கள் கேட்பது போல் இருக்குங்க. என்னவொரு இனிமையான தெரிவுகள் தேன் கிண்ணத்துக்கே என்று உருவாக்கியது போல் உள்ளது. பாடல் வரிகள் என் பதிவில் எழுதாதற்க்கு மன்னிக்கவும் ஏனென்றால் இது ஒரு பெரிய ஒலித்தொகுப்பு எல்லாபாடல்களூக்கும் வரிகள் எழுதினால் பதிவு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமாக ஆகிவிடும் அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த பாடல்களின் வரிகள் இணையத்தில் குவிஞ்சு கிடக்குங்க ஆகையால் இந்த ஒலித்தொகுப்பைஇங்கே பதிவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

சந்தியா சந்தியா



சந்தியா சந்தியா
சம்மதம் சொல்வாயா
சந்தியா சந்தியா
சஞ்சலம் கொல்வாயா
நென் நெஞ்சின் ஆசை சொல்லவா
நெஞ்சோடு மூடி கொள்ளவா
(சந்தியா..)

கங்கையா நீ காணலா
இது காதலா வெறும் வேஷமா
வேர்களா நீ பூக்களா
என் வெண்ணிலா பதில் பேசுமா
சொல்லாத சொல்லுக்கு
பொருள் ஒன்றுக்கு கிடையாது
நான் கொண்ட நேசத்தின்
திறன் என்ன தெரியாது
(சந்தியா..)

காதலே என் காதலே
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்
மேகமாய் நான் வாழ்ந்தவன்
தனி தீவிலே என்னை பூட்டினாய்
விடிகாலை நேரத்தில்
குயிலுக்கு உற்சாகம்
எதிர் கூவல் கேளாமல்
என் நெஞ்சில் ஒரு சோகம்..
(சந்தியா..)

படம்: நினைவிருக்கும் வரை
இசை: தேவா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

Friday, September 18, 2009

ஓ வெண்ணிலா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூமீதிலே தூங்கும் பூந்தென்றலா
(ஓ வெண்ணிலா..)

தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா
போராடிடும் வாழ்க்கைதான் காதலா
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்
தவங்கள்தான் காதலா
(ஓ வெண்ணிலா..)

சிலுவை தந்த போதும்
சிறகை போல நினைக்கும்
மேகம் போல மிதக்கும்
காதலே காதலே
காதல் ரோஜா
முள்ளாய் மாறும்
சூடும் கூட மறந்தாய்
சூரியன் கூட நினைப்பதென்ன
காதல் பேசினாய்
(ஓ வெண்ணிலா..)

உன் காதல் உள்ளம்
தாஜ் மஹாலில் வண்ணம்
என் நெஞ்சை நீதான்
திறந்தாய் திறந்தாய்
காதல் நெஞ்சை
ஏனோ மறைத்தாய்
உன்னில் நீயே ஒளிந்தாய்
ஜன்னலை மட்டும் திறந்துவைத்து
வாசலை ஏன் அடைத்தாய்
(ஓ வெண்ணிலா..)

படம்: நினைவிருக்கும் வரை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

Thursday, September 17, 2009

அன்பே நீ மயிலா குயிலா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓ சந்தியா
ஓ ஜானி
ஓ சந்தியா

அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா
(அன்பே..)

இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
(இயற்கையின்..)
ஓ ஓ ஓ ஓ ஓ சந்தியா

அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நான் சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

சஹாரா குளிர்க்கிறதே
டர்ஜிலிங் சுடுகிறதே
(சஹாரா..)
எறிகின்றேன் குளிர்கின்றேன்
ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா
நீ யாரு தெரியவில்லை

அழகிலே தேவதை நான்
அன்பிலே ராட்சசி நான்
பெண் செய்யும் காதலிலே
இம்சைகள் அதிகம்தான்
ஓ ஓ ஓ ஓ ஓ என் காதலா
(அன்பே நீ..)

காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா
(காதல்..)
காதலை நீ பெருவதென்றால்
கண்ணை மூடி நில்லு
காதலை நீ தருவதென்றால்
கட்டி பிடித்து கொல்லு

தருகையில் பெற வேண்டும்
பெருகையில் தர வேண்டும்
காதலில் மட்டும்தான்
இரண்டுமே ஒன்றாகும்
ஓ ஓ ஓ ஓ ஓ என் காதலா
(அன்பே நீ..)

படம்: நினைவிருக்கும் வரை
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி மேனன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

Wednesday, September 16, 2009

நான் சத்தம் போட்டு தான்



இந்த தேன் கிண்ணத்தில் ஒவ்வொரு டீஸ்பூனாக சுவைத்து சுவைத்து, திரையிசை ஜாம்பவான் திரு.டி.எம்.சவுந்திரராஜன், வெள்ளைகுயில் சுசீலாம்மா இருவரின் இனிய குரல்களின் ஊர்வலம் வரும் அதிகபட்ச பாடல் தொகுப்பு கேட்டு பரவசமாகுங்கள் அன்பர்களே.

பூமாலையில் ஓர் மல்லிகை >> ராதைக்கேற்ற கண்ணனோ >> அவளுக்கென்ன அழகியமுகம் >> காத்து வந்தா தலைசாயும் >> நான் சத்தம் போட்டு தான் >> முத்துப்பொன்னு வாம்மா >> கலைமகள் கைப்பொருளே >> ஜிமிக்கடி ஜிமிக்கடி ஜிகினா >> வாடிக்கை மறந்ததோனோ >> இதய ஊஞ்சல் ஆடவா >> கண்ணாடி மேனியடி >> முத்து நகையே நான் அறிவேன் >> இரவுக்கு ஆயிரம் கண்கள் >> எங்களுக்கு காலம் வரும்.

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

காஞ்சனையே காஞ்சனையே ...

காஞ்சனையே காஞ்சனையே
தீ மீது தேன் சிந்த வா வா (காஞ்சனையே)
எனது கவிதையில் முதல் வரி நீதான்
மொத்தக்கவிதையும் ஒரே ஒரு வரிதான்
இனி எந்தன்
வாழ்விலே
பெண்ணென்றால் நீ மட்டும் தான்

ஓ ..
உன் பார்வை பட்டாம்பூச்சி
என் மேல் அமர்ந்தே செல்ல
நான் அந்த பாரம் பட்டு
விழுந்தேன் விழுந்தேன் மெல்ல

ஓ..கைகள் கொடுத்து தூக்கி நிறுத்து
வீழ்த்தி சென்றவள் நீயல்லவோ
என்னை மீறி உன்னை எண்ணினேன்
ஒரு மின்னல் கீறி
இருள் அள்ளினேன்

இங்கு எந்தன் கடிகாரமும்
அதன் முட்கள் காட்டும் நொடிநேரமும்
உன்னைத்தான் சுற்றுது
இல்லையேல் முற்றுது
காதலை எங்கு போய் விற்பது? - (காஞ்சனையே)

ம்..தூங்காமல் காத்து காத்து
விழித்தே கழித்தே இரவை
ஏமாற்றம் தாளமல் தான்
தூதாய் தொடுத்தேன் நிலவை

ம்..தூக்கி எறிய தீயில் சரிய
காதல் மனமென்ன காகிதமா?
காலை மாலை இருவேளையும்
எந்தன் கனவில் வந்து நின்று சீண்டினாய்
ஒன்றும் நேரவில்லை என்று பின்- நீ
கள்ளம் சொல்லி என்னை தாண்டினாய்
ஏன் உன்னை சந்தித்தேன்
என்றே நான் சிந்தித்தேன்
என் இரு கண்களை
கண்டித்தேன் - (காஞ்சனையே)


திரைப்படம்: நெஞ்சில் ஜில் ஜில்
பாடல்வரிகள் : தாமரை
இசையமைத்தவர்: D இமான்
பாடலைப்பாடியவர்:



Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆயா ஒன்னு அடம்பிடிக்குது



Get Your Own Hindi Songs Player at Music Plugin

டகீலா
அண்ணே டகிலா அண்ணே
என்னா இது
எங்க அடி அடிங்கண்ணே

உன் அடி எது மேன்?

மோளமா பொறக்க வேண்டியவன்
மனுஷனா பொறந்துட்டான்
எது?
ஒன்னும் இல்ல
ஏம்பா டகிலா இவன் அடியே அடிப்பா...

ஆயா ஒன்னு அடம்பிடிக்குது
குவாட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்குது
கேட்குது

தாத்தா ஒன்னு தாளம் போடுது
தரிகினத்தோம்
பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது
ஆடுது

அக்கா ஒன்னு அக்கா ஒன்னு
அக்கா ஒன்னு நேக்கா பாக்குது
கலர் சொக்காவோட சோக்கா சுத்துது
சுத்துது

தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது
அது பின்னி மில்ல விலைக்கு பேசுது
பேசுது

அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது
ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது
போடுது

பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு
பாப்பா ஒன்னு பளப்பளக்குது
பாப்பா பவுடர் போட்டு பௌசா காட்டுது
காட்டுது

எல்லாருமே சேர்ந்து பாடுவோம்
சேர்ந்து தாளத்தோட அசைஞ்சு ஆடுவோம் ஆடுவோம்
ஆயா ஒன்னு அ ஆ ஆயா ஒன்னு
அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு..
கசகசாகச..


படம்: நினைவிருக்கும் வரை
இசை: தேவா
பாடியவர்: கிருஷ்ணராஜ்
வரிகள்: கபிலன்

Tuesday, September 15, 2009

சிங்கப்பூர் மச்சான் சிரிக்க சிரிக்க



நான் மலரோ தனியாக >> சொந்த மாமனுக்கும் >> உன்னை ஒன்று கேட்பேன் >> மனிதன் பிறந்தது குரங்குக்குதான் என்று சொன்னது தப்பா >> சிங்கப்பூர் மச்சான் சிரிக்க சிரிக்க >> கொஞ்சி கொஞ்சி பேசி >> காதலென்னு ஆற்றினிலே >> ஒரு நாள் இரவு >> பொன்மகள் வந்தாள் >> நான் உன்னை வாழ்த்தி >> வென்றிடுவேன் உன்னை >>

Get this widget | Track details | eSnips Social DNA


ஒன்றுமே புரியவில்லலையா? எல்லாமே தேன் மதுர கீதங்களின் பல்லவிதான். புதுப்பாடல்கள் நடுவே ரிலாக்சுக்காக இந்த ஒலிக்கோப்பில் ஒரு ரவுண்டு வந்துடுங்களேன்.

பதிவிறக்கம் இங்கே

ஆசையில் ஒரு கடிதம்



ஆசையில் ஒரு கடிதம்
வரைந்ததே ஓர் இதயம்
எழுதினால் தலையெழுத்தை
மாற்றியே விதி எழுதும்

ஒரு மேகம் தூது அனுப்ப
அது இடியை அங்கு இறக்க

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை
(ஆசையில்..)

குளத்துக்குள்ளே ஒரு கல்லெறிந்தேன்
அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்
குளக்கரையே உடைய கண்டேன்
விதியே இது தகுமா?
பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்
கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ
சரியோ இது சரியோ
தவறுகள் மூட்டிய நெருப்பினிலே
தாலியின் மஞ்சள் கருகுவதோ

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை
(ஆசையில்..)

நதி வளையும் வழி தெரிவதுண்டு
விதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்துக் கொண்டால் அதில் ருசியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
பால் குடத்தில் ஒரு எரும்பு விழ
பல்லியென்று அதை வெருப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் உன்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை மன்னிக்குமா

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை
(ஆசையில்..)

படம்: ஆசையில் ஓர் கடிதம்
படம்: தேவா
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

Monday, September 14, 2009

ஆதவன் - டமக் டமக்கு டமடம்மா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

படம் : ஆதவன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்

என் மனசே சே சே சே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

என் மனசே சே சே சே சே சே சே
என் மனசே சே சே சே சே சே சே
உறவொன்று என்னை உரசியதே
உதடுகள் மௌனம் உளறியதே
முதல் மழையின் ஒரு துளி தீண்டி
உயிர் தரை நனைகிறதே

என் மனசே சே சே சே சே சே சே
என் மனசே சே சே சே சே சே சே

உன் பேர் தெரிந்ததுபோதும்
உந்தன் அறிமுகம் போதும்
நான் பார்க்கும் கனவெல்லாம்
நீ இரு அது போதும்
தினமும் பார்ப்பது போதும்
நலமா கேட்பது போதும்
இனிமேல் நான் அழமாட்டேன்
எனக்கு என்ன ஒரு போதும்
சொல்ல வந்த வார்த்தை என்ன தெரியவில்லையே
தேடுகின்ற காதல் வார்த்தை மொழியில் இல்லையே
உன்னை எண்ணி மற்ந்திடும் உணர்வுகள் இனி ஏது
கடித்திட நகம் இன்றி தவிப்பது புதியது
அன்பே உந்தன் நிழலே எந்தன் முகவரி ஆனதடி

என் மனசே சே சே சே சே சே சே
என் மனசே சே சே சே சே சே சே

நிலவை பொழிகின்ற பகலா
இது ஓர் புது வித உறவா
கண்ணீரோ புன்னகையோ சம்மதம் நீ தந்தாய்
உடலின் வெளியே உயிரா
உயிரே நீ தான் அதுவா
தினம் இங்கே காதலர் தினமே
நித்தம் நீ வந்தாய்
பூக்கள் கூட உன்னை போல மென்மை இல்லையே
உன்னை போல பெண்ணை பூமி பார்த்ததில்லையே
உன்னை கண்ட முதல் நொடி எனக்கு என்னை கொடுத்தது
ரகசிய நெருப்பிது எவர் இதை அணைப்பது
காதல் இன்று என் மீது கவிதைகள் எழுதியதே

என் மனசே சே சே சே சே சே சே
என் மனசே சே சே சே சே சே சே

படம்: ஆனந்த மழை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

Sunday, September 13, 2009

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க
இது யார் என இமைகள் கேட்க
இவள் தான் உன் இதயம் என்றது காதல்
உயிரை திறந்து விடு புரியும்
உனக்குள் இருப்பது யார் தெரியும்
மனதில் எனதுருவம் விரியும் காதல்
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது
ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது
எங்கே எங்கே எங்கே
(ஒரு நாள்..)

உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி
இப்படித்தான் எவர்க்கும் இருக்கும் காதல் தலைவிதி
மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்
உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு மறந்தேன்
நீ வந்த போது நானே என்னை அறிந்தேன்
கண்ணீரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்
(ஒரு நாள்..)

ஆறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது
இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது
அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்
அடையாளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்
வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்
நூற்றாண்டு தாண்டி உன்னை கண்டு பிடித்தேன்
(ஒரு நாள்..)

படம்: ஆனந்த மழை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வாசன்

Saturday, September 12, 2009

வாசமிக்க மலர்களைக் கொண்டு



வாசமிக்க மலர்களைக் கொண்டு
வாசமிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம்
என் நெஞ்சில் வாசம் செய்பவள்
எங்கும் வாசம் செய்கிறாள்
எங்கோ வாசம் செய்கிறாள்

காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே
(காதல்..)

எண்ணங்கள் நீயில்லையா உன்
எண்ணத்தில் நான் இல்லையா
என் பாடல் உனதில்லையா அது
உன் காதில் விழவில்லையா
அன்னை மனம் கொண்ட பெண்ணே
உன்னை தினம் காண மனம் ஏங்கும்
என்னை ஒரு பிள்ளை என எண்ணிவிடு
எந்தன் மனம் தூங்கும் ஓ
நீயாக இதயத்தை தந்தாயே
காணாமல் ஏனோ நீ சென்றாயே
நானும் வாட
(காதல்..)

படம்: காதல் கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: அகத்தியன்

Friday, September 11, 2009

மின்னலைப் பிடித்து



மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
(மின்னலைப்..)

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே
(மின்னலைப்..)

நிலவின் ஒளியை பிடித்து பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டாய்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா
(மின்னலைப்..)

மின் மினி பிடித்து மின் மினி பிடித்து
கண்களில் பறித்து கண்களில் பறித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே
(மின்னலைப்..)

படம்: ஷாஜஹான்
இசை: மணிஷர்மா
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா





-------------------------------------------------------------------------------------

செப் 11 2009 அன்று தங்கள் முதலாமாண்டு திருமண நாள்

விழாவைக் கொண்டாடும்

நாமக்கல் சிபி அவர்களின் நண்பர்

விஜய்-ஸ்வர்ணா

தம்பதியினருக்காக இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!

பாடலை விரும்பிக் கேட்டவர் : நாமக்கல் சிபி

டயானா டயானா...



டயானா டயானா...
டயானா டயானா...

நீ தூங்கும் கோயிலில் ஒரு காடல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது
இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
காதலான தாயே வாழ்கவே

டயானா டயானா...
டயானா டயானா...

மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ
நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ
காணும் காட்சி யாவும் காதல் சொல்லுதே
வானம் பூமி காதல் வாசம் வீசுதே
காலத்தை வெல்கின்ற காதல்கள் வாழட்டும்
வா வெண்ணிலா

டயானா டயானா...
டயானா டயானா...

வானில் மின்னும் வெள்ளி மீனே கற்றுத் தருவாய்
காணும் கண்களுக்குள் பாவை ஆகிவிடுவாய்
பாவை இன்றிப் பார்வை கண்ணில் ஏதடி
பாவை இன்றிக் காதல் வாழ்வில் ஏதடி
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்
வா வெண்ணிலா

டயானா டயானா...
டயானா டயானா...

படம்: காதல் கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: அகத்தியன்

Thursday, September 10, 2009

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்( பொன்னையே)
பின்னையே நித்ய கன்னியே (2)
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ (2)
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)

வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
இசை : எம்.எஸ் வி
பாடியவர்: ஜேஸுதாஸ்
திரைப்படம்: கண்ணே கனியமுதே

அப்படி போடு போடு போடு



அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

உன்னோட ஊரு சுத்தி உப்பு மூட்டை ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏய் இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
(அப்படி போடு..)

ஓ என் மனசிலே நீ நினைக்கிறியே
ஏய் அழகாக என் கனவிலே நீ முழிக்கிறியே
ஏய் அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம்தானா

என் உசுருல நீ துடிக்கிறியே
ஏய் அழகி என் வயசுல நீ படுத்துறியே
ஏய் மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே
இது அதுதானா

உன்னை பார்த்த சந்தோஷத்தில்
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்னை தொட்ட அச்சத்திலே
மூனு தொடரா வேர்த்திருந்தேன்

உன்னோட கண்ணங்களை காக்கா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
(அப்படி போடு..)

திக்க வைக்கிர திணர வைக்கிறியே
நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே
நீ என்னத்தான் பத்த பைக்கிற பதங்க வைக்கிறியே
இது முறைதானா

திக்க வைக்கிர செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற சுழலவைக்கிறியே
நீ அழகா பத்த பைக்கிற பதங்க வைக்கிறியே
இது முறைதானா

ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே
ஊசி நூலும் கோர்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெரிக்குதடி

நை நைனு ஆடிக்கிட்டு
ஒன்னோடு நானும் வரேன்
நை நைனு பேசிக்கிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
(அப்பட் போடு..)

படம்: கில்லி
இசை: வித்யாசகர்
பாடியவர்கள்: கேகே, அனுராதா ஸ்ரீராம்

Wednesday, September 9, 2009

காதல் வெப்சைட் ஒன்று

காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று

காதல் வைரஸ் வந்து
கம்பியூட்டர் போலே நானும்
கன்பியூஸ் ஆனேன் இன்று

ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் இன்றி அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

செண்டிமீட்டர் தூதரும் இல்லை
நீ கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன் இடம் என்னை
ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி
நான் என்றும் உன் இடம் கைதி
நியூஸ் சேன்னல் சொல்லுமே செய்தி

அக்குபஞ்சர் நீ இல்லா
துர்கி சிக்கன் நூடலா
அன்பே ஆடை கொஞ்சம்
உந்தன் இடையிலா
டோனல்ட் டக்கின் ஜாதியா
டிஸ்னி டால்பின் ஜோடியா
அன்பே ஆடை செல்லும்
உந்தன் நாடியில்லா
(காதல் வெப்சைட்..)

ஹாட் பாக்ஸில் வைத்த ஒம்பதில்லை
இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
உன்னை உச்சம் பார்க்க கூடும்
கேளடா காதலா
தனிமைதான் ட்ராக்குலா

மிஸ்ஸிப்பி மேலே அலைகளை தாண்டி
பஸிஃபிக்கில் வந்து விழிந்தது பார்
மேஜிக்கில் இதழ் சிரிப்பினை மாற்றும்
சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்
நீ ஒரு சன் ஃப்ளவர்
கவிதையில் உந்தன் அழகினை பாட
நான் ஒரு ஷேக்ஸ்பியர்

என் அன்பே காதல் காதல்தான்
இவ்வுலகம் எழுந்து எடுத்தாலும்
லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா

இந்த சாக்ஸபோன் இரு கையில் ஏந்தி
பில் கிளிண்டன் போல வாசி
இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று
பில் கேட்ஸை போல நேசி
சொல்லடா ஓ மன்மதா
பில்லு நீ என்பதா

ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசர் போல
குளிர் தர ஒரு துணையுண்டா வா
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே
விரைவினில் வந்து ஊதாடிடுவேனே
சம்மதம் விண்டரா
இவள் அது விரல் பிடிக்கிறபோது
குவாட்டரும் லிக்கரா ஓ

என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஓர் காவியம் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும்தான் ஓ
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும்
லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ
(காதல் வெப்ஸைட்..)

படம்: தீனா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், ஹரிணி, திம்மி

Tuesday, September 8, 2009

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்



நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் போக மறக்கவில்லை
(நெஞ்சாங்கூட்டில்..)

ஏ விண்ணை தொடிகிற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்தித்தை
என்னை தேடி மண்ணில் வழ வழைத்து
உன்னை காதலிப்பதை உறைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உறைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே
லட்சம் பல லட்ச இங்கு
தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி
பாத்திரத்தை கசுவிவிட்டு பட்டினியை களைப்பாளே
அது போலே..
(நெஞ்சாங்கூட்டில்..)

சின்ன சின்ன செல்ல குறும்பும்
சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே
விறு விறுவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து
வளை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து
என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதல் என்ற விதி வழி
கைய வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்திருப்பது எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திக்கும்
அது போலே
(நெஞ்சாங்கூட்டில்..)

படம்: டிஸ்யூம்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ஜெய்தேவ், ராஜலெட்சுமி

Monday, September 7, 2009

மனசே மனசே



மனசே மனசே

மனசே மனசே எதனால்
மழை நாள் குயிலாய் அழுதாய்
மழையில் நுரையாய் உடைந்தாய்
மனசே மனசே எதனால்
மௌன சிறையில் கிடந்தாய்
மலையை தனியே சுமந்தாய்

உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா
(மனசே..)

காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே
காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே
அற்றை திங்கள் அந்நிலவில்
உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன்
ஒற்றை குயிலாய் நான் இங்கே
உன் நிலவை தின்று பிழைக்கின்றேன்
சிலருக்கு காதால் பிடிக்கவில்லை
செடி என்று அடை மழை பார்ப்பதில்லை
காதல் என்றால் வலி தானே
தவணை முறையில் இறந்தேனே
நிலவினில் உன் முகம் தினம் திம தோன்றிடும்
தீ அள்ளி வீசிடுமே
(மனசே..)

இதயம் இன்னும் துடிக்கும் காரம் கேளு கிளியே
நெஞ்சில் சட்டை பையில் உந்தன் புகைப்படம் பெண்ணே
உன்னை போலே யாரேனும் என் எதிரே போனால் வலிக்குதடி
சலலி ஓர கடையினிலே உன் பேரை படித்தால் வலிக்குதடி
நதிகளின் நுரைகளில் உன் கொலுசு
சுழி என சுழலுது என் மனசு
உயிரே உயிரே வருவாயா
உயிரை காவல் புரிவாயா
காதலன் மதுவை குடிததன் நிலமை
ஐயோ அது கொடுமை..
(மனசே..)

படம்: தம்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

Sunday, September 6, 2009

நீ கருப்போ சிவப்போ



யார் பெற்ற பெண்ணோ
இவள் யார் வீட்டு பூவோ
என் மீது கண்ணோ
அடி எனக்கென்ன ஆச்சோ

உருகுதே உயிர் உருகுதே
கொஞ்சம் திரும்பி பார்க்க கூடாதா
ஒரு தரம் விழி ஒரு தரம்
என்னை விரும்பி பார்க்க கூடாதா

நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும் தெரியாதே
நீ குயிலோ மயிலோ
குளிரோ வெயிலோ எதுவும் தெரியாதே
(நீ கருப்போ..)

உன் குலமோ குணமோ மனமோ இனமோ
எதுவும் தெரியாதே
உன் வயதோ பேரோ வீடோ தெருவோ
எதுவும் தெரியாதே
அடி அதனால் என்ன ரத்தம் கொடுத்தாய்
சித்தம் கலங்கி போச்சு

லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் நான்
என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ
(கருப்போ..)

என்னடி நொம்ப பண்ணுற?
நான் யார் தெரியுமா?

காலையில் ஷேவிங் தின தந்தி ரீடிங்
எல்லாமே மறந்ததே உன்னாலே
மாலையில் பேட்டிங் முடிந்ததும் டேடிங்
எல்லாமே மறந்ததே உன்னாலே
ஷூவின் மேல் சாக்ஸ் நான் மாட்டிக்கிட்டேன்
ஷர்ட்டின் மேல் பனியனை போட்டுக்கிட்டேன்
டூட் பேஸ்டை தேய்து குளிச்சேனடி நேத்து
ஏதேதோ கோளாறு எனக்கு ஆச்சு
நீ தாண்டி பெண்ணே பிரெயின் வாஷ் பண்ணே
என் பேரே என்னான்னு மறந்து போச்சு
அடி உன்னால் தானே கண்ணை விட்டு
தூக்கம் பறந்து போச்சு
(லவ் பண்ணுறேன்..)

சும்மா தான் இருந்தேன்
ஊர் சுத்தி திரிஞ்சேன்
உன் ஆசை விபத்துல தான் உண்டாச்சு
உள்ளாடும் நரம்பு வெடிச்சிடும் உடம்பு
நெய்வேலி அணல் நிலயம் என்றாச்சு
நேசம் தான் இல்லையேல் நெஞ்சை கொடு
நேசம் தாம் இல்லையேல் நெஞ்சை கொடு
விண்ணப்பம் போட்டா கையொப்பம் கேட்டா
செவ்வானம் கடலோடு சேர வேண்டும்
உன் பின்னே அறிஞ்ச முற்பாதி தெரிஞ்சா
மழை மேஹம் மழை மீது ஆட வேண்டும்
அடி உன்னை நானும் விட மாட்டேன்
காதல் பிறந்தாச்சு
(லவ் பண்ணுறேன்..)
(நீ கருப்போ..)

படம்: தம்
இசை: தேவா
பாடியவர்: சிலம்பரசன்

Saturday, September 5, 2009

கலக்குவேன் கலக்குவேன்



கலக்குவேன் கலக்குவேன்
கட்டம் கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு
கிளப்புவேன் கிளப்புவேன்
பட்டையைதான் கிளப்புவேன்
பாட்டெடுத்து பாரு

அட எட்டு ரெண்டு வயசுல எல்லோருக்கும் மனசுல
பட்டாம்பூச்சி சிறகடிக்கும் பாரு
இந்த வயசு இப்படி அடக்கி வச்சா எப்படி
கட்டு காவல் மீற போறேன் பாரு
ஏ கலக் கலக் ஏ கலக் கலக்
ஏ கலக் கலக் கலக்கு ஏ கலக் கலக் கலக்கு
(கலக்குவேன்..)

அவனோ இவனோ அதுதான் இதுதா தவறு தப்பு
எனலாம் கிட்ட வரலாம் அட்வைஸ் தரலாம்
அடடா எது தான் தவறோ தப்போ
அதையே உடும்பாய் பிடிப்போம்
செஞ்சு முடிப்போம் கொட்டம் அடிப்போம்
அட நாமே செஞ்சாலும் தப்பு தப்பேதான்
ரைக்டு ஆகாது டா
இந்த ஏஜில் யார் வந்து அட்வைஸ் சொன்னாலும்
தலையில் ஏறாது டா
ஏ இதோ வரா ருக்கு
அவ உட்டா பாரு லுக்கு
கிக்கோ கிக் அப்ப கிட்டப்பா
ஏ கை படா ரோசா கோலி சோடா சீசா
மிஸ்ஸா மிர்ஸஸா கேளப்பா
ஏ கலக் கலக் ஏ கலக் கலக்
(கலக்குவேன்..)

ஏ தம் தம் தம்
தம் ஆரே தம்

நெருப்போ நிலவோ மலரோ அழகோ குறையோ
ஒருத்தி நெஞ்சை வருத்தி உன்னை வதைச்சா
ஏ அது தான் லவு உடனே கவ்வு இழுத்தா ஜவ்வு
ஓக்கே என்று அர்த்தம் அவ முறைச்சா
அட எமனே எதுத்தாலும் தடுத்து தற்காத்து லவ்வுக்கு அழிவில்லடா
பெண்ணை கடத்து கையோடு நடத்து கல்யாணம் நீ தான் கில்லாடிடா
வேணுமடா தெம்பு இல்ல வைக்காதடா அன்பு
லவ்வ அஞ்சாம சொல்லப்பா நான் சொன்னா நம்பு
உன் நண்பன் தானே சிம்பு அட தம் ஓடு எப்போதும் நில்லப்பா
ஏ கலக் கலக் கலக் கலக்
(கலக்குவேன்..)

படம்: தம்
இசை: தேவா
பாடியவர்: சிலம்பரசன்

Friday, September 4, 2009

வரும் வழியெங்குமே என் முகம் தோன்றலாம்

வரும் வழியெங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே
பூக்கும் இலையாகவா

என் கண் பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதி கொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் சேதியை
கடல் அலை கூறவே
உந்தன் நிலை போலவே
மனம் கொண்டாடுதே
எழுதியவர்: யுகபாரதி
பாடியவர் : ரஞ்சனி
இசை : சபேஷ் முரளி
திரைப்படம்: பொக்கிஷம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனசே மனசே குழப்பம் என்ன



மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
(மனசே..)

பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே மனசே
(மனசே..)

நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே மனசே
(மனசே..)

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழித்திருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே மனசே
(மனசே..)

படம்: நெஞ்சினிலே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து

Thursday, September 3, 2009

வாழும் வரை போராடு



வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓ..
(வாழும்..)

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
(வாழும்..)

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
(வாழும்..)

படம்: பாடும் வானம்பாடி
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

Wednesday, September 2, 2009

நான் காணும் உலகங்கள்



நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்

சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போலே பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்

பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை
அதில் புன்னகை மனம் அறிவேன்
கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை
கை தொட்டதும் உணர்வறிவேன்
குக்கூவென கூவும் குயிலகளின்
கூட்டத்தில் நான் இணைவேன்
கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை
ரெக்கை விரித்திடுவேன்
உங்கள் முகம் பார்த்ததில்லை
வரைந்ததில்லை நான்
என் முகத்தினை நீங்கள் எல்லாம்
பார்த்ததினால்தான்
உங்கள் மேடை பாடல் நான் ஓ
(நான் காணும்..)

ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளை
பூத்தது பல நினைவு
கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட
சுற்றி வரும் கனவு
கற்றவர் பேசிட காதில் கேட்டதில்
பெற்றதெல்லாம் வரவு
வாட்டிய வருமையில் எனக்குள் திறந்தது
கற்பனையின் கதவு
வாழ்விலே நான் கண்டுகொண்டேன்
தேடல்தானே
வாழ்க்கை பாடும் பாடினிலே
பாடகன் ஆனேனே
பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓ
(நான் காணும்..)

படம்: காசி
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Tuesday, September 1, 2009

ஆதவன் - ஹசிலி ஃபிசிலி என் ரசமணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி3 அக்காவுக்கு சமர்ப்பணம்:


அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மேதை நீயா
(ஹசிலி..)

படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்
வரிகள்: பா. விஜய்

Last 25 songs posted in Thenkinnam