Monday, September 21, 2009

சில்வர் நிலவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சில்வர் நிலவே
அழகிய சில்வர் நிலவே
உந்தன் பெயரை
தேசிய கீதமாய் பாடுவேன்
(சில்வர்..)

ஷேக்ஸ்பியரின் புத்தகத்தை
செந்தமிழில் சொன்னால்
அது நீ நிவேதா
ஐம்பதடி தாஜ் மஹாலை
ஐந்தடியில் செய்தால்
அது நீ நிவேதா
அட தங்கத்திலே
ஆப்பிள் செய்து
அங்கத்திலே ஒட்ட வைத்தால்
நீ நிவேதா
அந்த சூரியனை
ஃப்ரிட்ஜு குள்ளே
வைத்திருந்து கொண்டுவந்தால்
நீ நிவேதா

ஒரு கிலோ ரோஜா
உன் கன்னம் ஆச்சா
அதிலே உம்மா தரலாமா
(சில்வர்..)

மூலிகை பெற்றோல்
அது மெய்யோ பொய்யோ
டைனாசர் வாழ்ந்ததென்பது
மெய்யோ பொய்யோ
நான் உன்மேல் நெஞ்சுக்குள்ளே
கொண்ட காதல்தான்
அது மெய்யடா
அது மெய்யடா

செவ்வாயில் தண்ணீர் உண்டு
மெய்யோ பொய்யோ
இன்னொரு பூமி உண்டு
மெய்யோ பொய்யோ
நான் உன்னை காதலிக்கும்
காதல் மட்டும்தான்
அது மெய்யடி
முழு மெய்யடி

பைனாப்பிள் மரத்தில்தான்
அதில் வேர்கள் கூட
உன்னை போல இனித்திடுமே

சீனாவின் கண்ணாடி
அது உடைந்திடாது
உன்னை போல வளர்ந்திடுமே

நம் கை திரி அளவுதான்
நம் இதயம் உள்ளது
அதில் கடலின் அளவுதான்
இந்த காதல் உள்ளது

அச்சச்சோ அச்ச்சச்சோ கிஸ் மீ டா
அச்சச்சோ அச்சச்சோ கிஸ் மீ டா

வானவில் வண்ணம் எத்தனை
மறந்தே போனேன்
வங்க கடல் எங்கிருக்கு
மறந்தே போனேன்
உன் பெயர் உன் முகம்
உன்னை தவிர
வேரெதுவுமே நினைவில்லையே

நெற்றி பொட்டை எங்கே வைப்பது
மறந்தே போனேன்
காலுக்கு கொலுசா வளையா
மறந்தே போனேன்
உன் விழி உன் குரல்
உன்னை தவிர
அட என்னையே நினைவில்லையே

அந்த ஆகஸ்ட் 15
அன்று என்ன என்று
நினைவில் இல்லை
உன்னாலே

என் பெற்றோரின் பெயர்கூட
இன்று நினைவில் இல்லை
நினைவில் இல்லை
உன்னாலே

அட நிலவின் நிறம் என்ன
அதை மறந்தேண்
நீ சொல்லு

அது சிவப்பென்று நினைக்கிறேன்
இது சரியா
பதில் சொல்லு

நீ சொன்னால் நீ சொன்னால்
நிவேதா
சரிதான் சரிதான்
நிவேதா
(சில்வர்..)

படம்: லவ்லி
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam