நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் போக மறக்கவில்லை
(நெஞ்சாங்கூட்டில்..)
ஏ விண்ணை தொடிகிற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்தித்தை
என்னை தேடி மண்ணில் வழ வழைத்து
உன்னை காதலிப்பதை உறைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உறைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே
லட்சம் பல லட்ச இங்கு
தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி
பாத்திரத்தை கசுவிவிட்டு பட்டினியை களைப்பாளே
அது போலே..
(நெஞ்சாங்கூட்டில்..)
சின்ன சின்ன செல்ல குறும்பும்
சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே
விறு விறுவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து
வளை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து
என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதல் என்ற விதி வழி
கைய வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்திருப்பது எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திக்கும்
அது போலே
(நெஞ்சாங்கூட்டில்..)
படம்: டிஸ்யூம்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ஜெய்தேவ், ராஜலெட்சுமி
2 Comments:
My fav. Song. Thanks to share My frnd
//இன்னும் போக மறக்கவில்லை//
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
//லட்சம் பல லட்ச இங்கு
தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி
பாத்திரத்தை கசுவிவிட்டு பட்டினியை களைப்பாளே
அது போலே..//
லட்சம் பல லட்சம் என
தாய் மொழிவில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வெச்ச வீட்டுக்காரி
பாத்திரத்தை கழுவிட்டு பட்டினியா கிடப்பாளே அது போல...
Post a Comment