வாசமிக்க மலர்களைக் கொண்டு
வாசமிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம்
என் நெஞ்சில் வாசம் செய்பவள்
எங்கும் வாசம் செய்கிறாள்
எங்கோ வாசம் செய்கிறாள்
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே
(காதல்..)
எண்ணங்கள் நீயில்லையா உன்
எண்ணத்தில் நான் இல்லையா
என் பாடல் உனதில்லையா அது
உன் காதில் விழவில்லையா
அன்னை மனம் கொண்ட பெண்ணே
உன்னை தினம் காண மனம் ஏங்கும்
என்னை ஒரு பிள்ளை என எண்ணிவிடு
எந்தன் மனம் தூங்கும் ஓ
நீயாக இதயத்தை தந்தாயே
காணாமல் ஏனோ நீ சென்றாயே
நானும் வாட
(காதல்..)
படம்: காதல் கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: அகத்தியன்
Saturday, September 12, 2009
வாசமிக்க மலர்களைக் கொண்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment