Saturday, February 28, 2009

977. வராக நதிக்கரை ஓரம்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உருத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவே ஓடி மறைஞ்சே
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

கண்ணு டக்கு டக்கு டக்குங்குது ஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது ஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ
சொல்லு சொல்லு சொல்லுங்குது
(வராக..)

பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
(பஞ்சவர்ணகிளி..)
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு கொடு கொடு
ஓ காவேரி கரையில்
மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவனியானால் காதல் பழுக்குமடி
(கண்ணு..)
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

நீ எனை கடந்து போகையிலே
உன் நிழலா பிடிச்சுப்புட்டேன்
(நீ எனை..)
நிழலுக்குள்ள ம்ம்ம் குடியிருக்கேன் ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப்
பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
(கண்ணு..)
(வராக..)
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

976. பாம்பே மெட்ராஸ் டெல்லி
பாம்பே மெட்ராஸ் டெல்லி
இதுதான் தலைப்பு செய்தி
எதிலும் காதல் வியாதி ஓ போவியா
பைலா பாப் சம்பாடி
லைலா மஜுனு ஜோடி
லவ் மீ லவ் மீ சொல்லி லவ் ஃபோபியா

ஓ லவ் அட்டாக் முதல் முதல் பார்த்து லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் சென்ச்சூரி போடும் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் கனவுக்குள் புகுந்த லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்

காதல் வடிவம் இதயம் தான்
காசி அங்கே உதயம் தான்
காசி வழியே தீர்க்கும் நீதான் கேட்கின்றாய்
தனிமையிலே நான் ஹீட் ஆனால்
தெர்மோமீட்டர் காட்டாது கொதிக்கும்
நெஞ்சை ஆட்டும் நீ தான் ஏர் கூலர்
என்னுடனே இல்லாமல் போனால்
ஏப்ரல் ஆகிடும் செப்டம்பர்
உன்னோட நான் ஒன்றாகி போனால்
விண்டர் ஆகிடும் ஹோட் சம்மர்
என்னாளும் ஹோட் நைக்ட் ஆகும் காதல் வாழ்க
ஐஸ் க்ரீம் பார்லரில் டால்பி
சிஸ்டம் தியேட்டரில் ஒருவன் ஒருத்தி
சந்தித்தாலே லவ் அட்டாக்
சிக்ஸ்டீன் ஆனதும் பருக்கள்
முகத்தில் வந்ததும் இளைய மனதை
இரவில் தாக்கும் லவ் அட்டாக்
ஆரம்பமே அடமும் எவளும்
வந்ததே லவ் அட்டாக்
முதன் முதலா உண்டான மனிதன்
தொட்டது தானே காதல் ட்ரை
என்னாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க
(பாம்பே..)

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கோபால், கவிதா பட்வால்

Thursday, February 26, 2009

975 திகைக்கவைக்கும் திரையிசைச்சொல்திகைக்கவைக்கும் திரையிசைச்சொல்

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த வாரம் மீண்டும் நேற்று திகைக்கவைக்கும் திரையிசைசொல் ஒலித்தொகுப்பு ஒன்றை வழங்கினார் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல். நாராயாணா அவர்கள்.
பட்டாசை திரியை பற்ற வைத்து தூக்கி போடுவது போல் சும்மா அனாயசமாக போட்டுள்ளார். வானொலி நேயர்கள் மீண்டும் பழைய உற்சாகத்திற்க்கு வந்து விட்டார்கள்
என்று தெரிகிறது. ஒலிக்கோப்பை கேட்டுப்பாருங்கள் நேயர்கள் தட்டு தடுமாறி எந்த வார்த்தையை கண்டு பிடிக்கவேண்டுமோ அதை விட்டுவிட்டு என்னனென்னமோ
வார்த்தைகளை சேகரித்து குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார்கள் என்னையும் சேர்த்து தான் சொல்றேன். கேட்டுப்பாருங்கள் ஒரே தமாசாக இருக்கும் அத்துடன் மூளைக்கும்
நல்ல வேலை. ஏதோ ஒரு நல்ல மெலோடி பாட்டு கேட்டுவிட்டு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைக்கும் நேய்ர்களுக்கு இது போல் ஒலித்தொகுப்பு வந்தால் துள்ளிக்குதித்து
எழுந்து உட்கார்ந்து கொண்டு உற்சாகமாகிவிடுகிறார்கள் ஒலித்தொகுப்பு ஒரு மணி நேரம் தான் ஆணால் நேயர்களூக்கு தூக்கம் அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. தூக்கம் வரும் ஆனால் வராது. இது தான் உண்மை. இந்த ஒலித்தொகுப்பில் ஆழ்ந்து அவரின் பேச்சை கவ்னித்தாலே போதும் பாதி வேலை நமக்கு சுலபமாகி விடுகிறது.

சரிங்க விசயத்துக்கு வருகிறேன் பாடல்களை கேளூங்கள் தரவிறக்கம் செய்து கேளூங்கள் அவசரப்பட்டு ஓர் ஆர்வத்தில் கடைசியில் கேட்டு விடாதீர்கள் ஒரு ஸ்வாரசியம் இல்லாமல் போய்விடும். அப்படியே உங்கள் உணர்வுகளையும் தாருங்கள் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் உற்சாகமாக இருக்கும். தேன்கிண்ண நேயர்கள்
சார்பாக ;ஆக்கத்தை உருவாகியவருக்கு நன்றி. ஆர்.ஜி.எல். சார் வாரத்திற்க்கு ஒரு முறையாவது இதுபோல் ஆக்கம் தாருங்கள். நமது இணையதள நண்பர்களூம் தலமுடியை
பிய்த்துக்கொள்ளட்டூம் ஹி.. ஹி.. ஹி.. தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

974 முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம்முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம்

1. பூப்போல பூப்போல பிறக்கும், 2. அம்மா என்பது தமிழ் வார்த்தை, 3. அல்லித் தண்டு காலெடுத்து, 4. சிட்டுக்குருவிக்கென கட்டுப்பாடு, 5. நானொரு கோவில் நீயொரு தெய்வம்
6. பௌர்னமி நிலவில் பனிவிழும் இரவில், 7. அத்தானின் முத்தங்கள், 8. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, 9. நல்ல இடம் நீ வந்த இடம், 10.காதல் சிறகை காற்றில் விரித்து
11.தூக்கமும் கண்களை தழுவட்டுமே, 12.ஐம்பதிலும் ஆசை வரும்

Get this widget | Track details | eSnips Social DNA


முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம் என்ற தலைப்பில் வானொலி நேயர் ஒருவர் ஒரு ஆக்கத்தை சென்ற வாரம் வழங்கியிருந்தார். மேலே பாடல்கள் தான் அவை மிகவும் ரசித்து விளக்கங்கள் தந்திருந்தார். கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவர் மகிழ்ச்சியடைவார்.

நேயர்: ரேணுகா தேவி
357, மயுரி நகர் குடியிருப்பு
சின்னவேடம் பட்டி
கோவை

Wednesday, February 25, 2009

973. தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்
(தனியே..)
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே
ஓ தனியே தனியே தனியே

அக்டோபர் மாதத்தில் அந்திமழை
வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
(அக்டோபர்..)

அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
(அன்று..)
ரசணை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம் இணையக் கண்டோம்
(ரசணை..)
நானும் அவளும் இணைகையில் நிலா
அன்று பால்மழை பொழிந்தது
(தனியே..)

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி
கைக்கொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன்
(அந்த கள்ளி..)
சின்னஞ்சிறு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னஞ்சிறு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள்
வரும் வழி தெரியுது
தனியே..
(தனியே..)

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

972. ஹையோ பத்திக்கிச்சு

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஹோ கண்ணே
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஹோ கண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு சிக்கிச்சு ஓஹோ கண்ணே

ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹையோ பத்திக்கிச்சு..

ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கி கல் ஒன்றுடன்
ஒன்று உரசப் பொறி வருமே வா வா அ அ அ அ
ஐம்பொறியெல்லாம் தீப்பொறியுடன் ஆசையில்
எறியும் சரிதான் அணைவதற்குள் வா வா வா வா வா
காதல் நெருப்பு உள்ளவரை காலம் உரைவதில்லை
கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
தீதான் முதல் மெய்ஞானம்
காதல்தான் முதல் மெய்ஞானம்
தீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
(ஹையோ பத்திக்கிச்சு..)

காதல் நெருப்பை நீ வளர்த்தது
கவலைக் குப்பைகளை கொலுத்து
சுடர் வளர்ப்போம் வா வா
சுகம் வளர்ப்போம் வா வா வா வா
தீப்பந்தமே என்னை மாற்றிவிட்டாய்
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ பத்திக்கிச்சு
நெஞ்சோ சிக்கிக்கிச்சு
ஹையோ ஹையோ பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உதித் நாராயணன், வசுந்திரா தாஸ்

971. விடுகதையா இந்த வாழ்க்கை

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன


விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்?
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே


படம்: முத்து
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்

***

விரும்பிக் கேட்டவர்: அருண்

970.ஹேய் உலகமெல்லாம் எங்கள் தமிழ் பாட்டுஹேய் உலகமெல்லாம் எங்கள் தமிழ் பாட்டு
அட நிலவு சாய்ந்தாட என்ன ரேட்டு
வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு
நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
உன்னை சேலை கட்ட சொன்னா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
உன்னை சைட் வர சொன்னா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் ஷேவ் பண்ணி வந்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் வேட்டி கட்டி வந்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

கிழக்கு உலகத்தை அந்நாளில்
இந்த மேற்கு உலகங்கள் ஆண்டனவே
இன்று கிழக்கு மேற்க்காக மாரியதே
நோ ப்ராப்ளம்

ஒரு விதைக்குள் எம்மை வைத்தாலும்
மிக விரைவில் வெளியேறி வருவோமே
ஒரு விஷ்வரூபங்கள் கொள்வோமே
நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் உன்னை விட பெருசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் உன்னை விட சிறுசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் இரவுக்கு புதுசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம்

படம்: லவ் பெர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், Apache Indian

Tuesday, February 24, 2009

969 இசைப்புயலுக்கு வாழ்த்தொலி தொகுப்புஇசைப்புயலுக்கு வாழ்த்தொலி தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


”இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” தற்போது இந்த வரிகளை உச்சரிக்காத உதடுகள் இந்தியாவில் எங்கும் காணமுடியாது. ஆமாம் இசையன்பர்களே இசையை ரசிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆத்மார்த்மாக அடிமனதில் இருந்து தன்னையும் அறியாமல் மேற்கண்ட வரிகளை உச்சரிக்க வைக்கும். ஒட்டு மொத்த இந்தியாவின் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பெறுவது என்பது அந்த ஆஸ்கர் அவார்டை விட பெரிது எனலாம்.
ஏனென்றால் அனைத்து இந்திய இசைப்பிரியர்களூக்கும் ஒவ்வொருவரும் தானே பெற்றதாக உணர்கிறார்கள்.

ரஹ்மான் அவரக்ளில் துவக்க காலத்தில் இசையமைக்கும் போது சிலபேர் “என்னது ஒரே இரைச்சலாக இருக்கிறதே” என்று முணு முணுத்தவர்களூம் உள்ளனர். ஏன் வாய் திறந்து சொன்னவர்களூம் உண்டு. அவர்களையெல்லாம் தன் திறமையால் திறந்த வாயை ஒரே ஆப்பாக அடித்து மூடவைத்துவிட்டார் இப்படியும் சிலபேர் என்னவென்று சொல்ல?.
ஆமாம் “இசைப்புயல்” என்று யார் இவர்க்கு பெயர் வைத்தார்களோ அவர்கள் நீடுழி வாழனும். ஏனென்றால், ரஹ்மான் தான் இசையமைக்க துவக்க காலத்தில் இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது என்று ஒரு கேள்விக்கு ஒரு பேட்டியில் படித்த நினைவு. நான் சிறியவர்களையும், இளைஞர்களையும் கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் இசையமைக்க ஆரம்பித்தேன். எப்போதுமே இளம் உள்ளங்களில் சொல்லும் வழியில் சொன்னால் அவர்கள் மனதில் நன்றாக பதியும் என்று பேட்டி தந்தார். அது எவ்வளவு உண்மை என்று ஒவ்வொரு ரசிகர்களின் குடும்பங்களீல் உள்ள குழந்தைகளை கேட்டால் தெரியும். இது தான் உண்மை. ரஹ்மான் இசையமைப்பு இரைச்சல் தான் இல்லையென்று சொல்லவில்லை கடலின் சீற்றம், புயலின் ஆர்பரிப்பு இயற்க்கையான இரைச்சல் தான். இயற்க்கையை என்றுமே யாராலும் மாற்றமுடியாதே இது என் கருத்து. ஆணால் அந்த

இரைச்சலுக்கும் இறுதியில் ஓர் அமைதி ஏற்படுமே அதுவே இனம் புரியாத சுகம். அது போலவே பல மெலோடி பாடல்களூக்கும் இசையமைத்திருக்கிறார். ரஹ்மான் அவர்கள். அவர் மேன் மேலும் பல விருதுகள் வாங்கி உலக அளவில் பல ஆங்கில படங்களூக்கு இசையமைக்க வேண்டும் அதற்கு இறைவன் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனுங்கே ஆமாங்க நேற்று இனிய இரவில் பண்பலையிலும் அவரின் திறமையை பாராட்டி ஓர் ஒலித்தொகுப்பு வழங்கினார்
நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல் சார். நேற்று எல்லா வானொலிகளூம் இந்த பதிவு பதியும் வரையும் ரஹ்மான் அவர்களின் படப்பாடல்கள் தான் ஒலிப்பரப்பிவருகிறார்கள். எல்லோருமே அதிகபட்சம் மெலோடி அவரின் மெலோடி பிரபல பாடல்கள் தான் ஒலிப்பரப்பினார்கள். நமது அறிவிப்பாளர் தேடிப்பிடித்து அதிகம் சில ஒலிபரப்பாத பாடல்களையும் சில பிரபல மெலோடி பாடல்களையும் ஒலிப்பரப்பி தன் பங்குக்கு

தன் வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். நான் கேட்டு ரசித்த அந்த ஒலித்தொகுப்பை தேன் கிண்ண் நேயர்களான உங்களிடம் பகிர்ந்து கொண்டு ரஹ்மானுக்கு உங்களூடன் சேர்ந்து மீண்டும் வாழ்த்துக்கள் சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன். ஒலித்தொகுப்பு தரவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம் அன்பர்களே. நன்றி.

968. ஆறரை கோடி பேர்களில் ஒருவன்

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை


நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)

கண்ணீ­ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை என்னும் பொன்னகையைத்தான்
முகமெங்கும் மீட்டு வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்


என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே


ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே அன்பே ஆருயிரே


படம்: அன்பே ஆருயிரே
இசை/பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி

Monday, February 23, 2009

967. தமிழா தமிழா


உன்னால் பெருமை அடைந்தோம். நன்றிகள் & வாழ்த்துக்கள் ரஹ்மான்.தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

படம் : ரோஜா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன்
வரிகள் :

966. விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
(விடிகின்ற..)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா
(விடிகின்ற..)

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுமிதா

Sunday, February 22, 2009

965.ஆடியில சேதி சொல்லி
ஆடியில சேதி சொல்லி ஆவணியில தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவருதான்
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவருதான்
அழகு மன்னவரு மன்னவருதான்

(ஆடியில சேதி சொல்லி)

சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

(சேலை மேல)

வீரப் பாண்டித் தேருப் போல பேரெடுத்த சிங்கம்தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

பூவுக் கூட நாரு போல பூமி கூட நீருப் போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரவீரன் பொம்மி போல

(பூவுக் கூட)

சேலையோட நூலுப் போல சேர்ந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

பாடியவர்: சித்ரா
படம்: என் ஆசை மச்சான்
இசை: இளையராஜா

964. நிழலினை நிஜமும் பிரிந்திடுமா

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
(நிழலினை..)

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்கு
விதி செய்த சதியா தெரியல அம்மா
கடலும் அலையும் கடலில் தான் சேறும்
அது போல என்னையும் சேர்த்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எங்கே நான் யாரோ என்று ஆகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும்மா
மொத்த பூமி எங்கே தான் சொந்தம்மா
பத்து மாசம் உலியிருந்தேன் பக்குவம்மா
பூமிக்கு நான் வந்தது என்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாக்கி போச்சு
சரி செய்ய வழியும் தெரியல அம்மா
சூரியன் ஒடஞ்ச பகல் இல்ல அம்மா
ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா
என்னை சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதை எல்லாம் கனவாகி போயிடும்மா
தூக்கத்தில்ல உன்னை நானும் தொலைச்சேனம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
(நிழலினை..)

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், யுவன் ஷங்கர் ராஜா

Saturday, February 21, 2009

963. நாளை உலகம் இல்லை
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பாத்துக் கொள்வேன்
மண்டியிட்டு அமர்ந்து மண்னகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

நாளை உலகம்
நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் :

962. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே (கல்யாணம்தான்..)

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா
(கல்யாணம்தான்..)

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ
மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது
வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா
(கல்யாணம்தான்..)

படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், கேகே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி

961. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

Friday, February 20, 2009

960 கவிஞர் புலமைப் பித்தன் பாடல் தொகுப்புகவிஞர் புலமைப் பித்தன் பாடல் தொகுப்பு

பொதுவாகவே பாடல்களின் தகவல்கள் இணையத்தில் படம் பெயர், இசையமைப்பாளர், பாடகர் பாடகிகள் பெயர்கள் தகவல்கள் தான் அதிகபட்சம் இருக்கும். பாடாலாசிரியர் பெயர் மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை நான் பல
பாடல் இணைய தளங்களில் கண்டு இருக்கிறேன். பாடல் ஏற்றும் போதே பாடாலாசிரியர் பெயர்கள் எழுத மறந்து விடுகிறார்கள் எல்லாம் சோம்பேறித்தனம் தான். நீங்களே ஒரு எந்தவொரு இணையத்திலும் பாடல் பெயர் தேடி பாருங்கள் பாடலாசிரியர் பெயர்
விடுபட்டு போயிருக்கும். அதுஒரு பக்கம் இருந்தாலும் இப்போது வரும் புதிய பாடல்களில் அதிகபட்சம் பாடலாசிரியர் பெயர் எழுதப்பட்டு வருகிறது இது வரவேற்க தக்க விசயம். சரி சரி விசயத்துக்கு வருகிறேன். நேற்று ஒரு ஒலித்தொகுப்பு பண்பலையில் கேட்டேன். அந்த ஒலித்தொகுப்பு அடடா என்று என் புருவங்களை உயர்த்த வைத்தது. ஆமாங்க, புலவர் புலமைப்பித்தன் அவர்களைப் பற்றி நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல் சார் அருமையாக தொகுத்து வழங்கினார். எப்படி தான் அவரால் இப்படி பேச முடிகிறதோ பலதடவை என்னை யோசிக்க வைத்தது. மனுசன் மிகவும் சரளமாக அதுவும் அவருக்கே உரிய பாணியில் வழங்குவது அவரின் மகத்தான் சிறப்பு.

புலவர் புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள் எல்லோருக்கும் போல் எனக்கும் மிகவும் பிடிக்கும் மற்றவர்களை விட இன்னும் எனக்கு அதிகம் பிடிக்குக்ம் ஏனென்றால். பெரும்பாளும் அவரின் பாடல் வரிகளுக்கு என் அபிமான பாடகர் பாலுஜி பாடியிருப்பார். அவரும் துடிக்கும் கரங்கள் போன்ற அவர் இசையமைத்த படங்களூக்கு அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தந்துள்ளார்.

புலவரைப் பற்றி அறிவிப்பாளர் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் தகவல்கள் பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நமது மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு பற்றியும் அதன் அதிசயத்தை பற்றிய தகவல் ஒன்றை வழங்கினார். இளையராஜா ரசிகர்களுக்கு தெரிந்த விசயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இருந்தாலும் பண்பலை நேயர்களூக்கு அந்த தகவல் புதிது. என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா அன்பர்களே. மன்னிக்கவும் அதற்க்கு நீங்கள் ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டுதான் தீர வேண்டும். நீங்கள் கேள்விப்படாத
தகவலாக இருந்தால். கேட்டுவிட்டு உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதுங்கள்.

பலவருடங்களூக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் புலமைப்பித்தன் அவரகளை ஒரு தடவை பார்த்த நினவு. அறிவிப்பாளர் சொன்னது போல் உடுத்தும் உடை, அவரின் முறுக்கிய மீசை, தலைமுடி அது மட்டுமல்லாமல் அவரின் மனதும் மிகவும் வெள்ளை. அவரின் பாடல்கள் பலவற்றை கேட்டு வியந்து போயிருக்கிறேன். ஏன் உங்களூக்கும் இருந்திருக்கும். இந்த ஒலித்தொகுப்பில் வரும் பாடல்கள் கேட்டீர்களானால் எப்போதும் யார் கேட்டாலும் அந்த பாடல் யார் எழுதியது என்றால் நிச்சயம் அதுவா புலமைப் பித்தன் சார் எழுதியது என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். இது மாதிரி ஒலித்தொகுப்புகள் பலவற்றை பண்பலை ஒலிப்பரப்ப வேண்டும் அப்போது தான் ரசிகர்கள் மனதில் பாடலாசிரியர்கள் மிகவும் ஆழமாக பதிவார்கள். ஒலித்தொகுப்பை உருவாக்கியவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

959. நெஞ்சம் ஒரு முறை

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்வரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துரையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானா எந்தன் நெஞ்சில் முதல் சரணம்
அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை
(நெஞ்சம்..)

காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பறவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தற்பவெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும்
இந்த காதல் வந்தால் இலை கூட மாலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
(நெஞ்சம்..)

படம்: வசீகரா
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், மகாலெட்சுமி ஐயர்

958. மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா

மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்க நாசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே

புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போ
அதை தேடி நோக்கன் மனசென்னோ மறஞ்சு போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் பெரியுத்தம் நடக்குன்னு
கலகம் ஏதும் வருமோ
(மனசுக்குள்ளே..)

மலரிய மன்னங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களில் பாஷை காதிலில் பாஷை
என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு
வாழ்வது இன்று தேவதை இன்று
தேசம் இன்றும் நாளை இன்றும்
தேசம் தேடும் நீச்சம் இன்று
வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ..

அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுதே
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே
கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா
நீ மெட்டியிட்ட அடங்குமோ அறியலடா
நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சீக்குதடி
அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால்ல் ஏண்டா ஏண்டா ஏண்டா
(மனசினுள்ளில்..)

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஹாரீஷ் ராகவேந்திரா, ரேஷ்மி

Thursday, February 19, 2009

957. கண்கள் கண்டது கண்கள் கண்டது

கண்கள் கண்டது கண்கள் கண்டது காணல் நீராய் மாறியதே
கனவுகள் அடிக்கடி கோடை காற்றில் மோதிட கலங்கியதே

கண்கள் கண்டது கண்கள் கண்டது காணல் நீராய் மாறியதே
கனவுகள் அடிக்கடி கோடை காற்றில் மோதிட கலங்கியதே
மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்
காலடி அங்கே காணவில்லை
(மரத்தின்..)
ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
(கண்கள் கண்டது..)

தோற்றம் திரும்பலாம் கோர்த்து நெருங்கலாம்
நிஜத்தின் காயங்கள் மாறாதே
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே
அடுத்த நாட்கள் இங்கு பாத்திரமாக
நடந்த நாடகம் முடிகிறதே
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தான் வாழ்ந்த
நட்பு என் மனதில் நெகிழ்கிறதே
அட தொப்புள் கொடியின் உறவை தான்
என் ஞாபகம் அறிந்தது இல்லை
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதை புரியவில்லை

கால சங்கிலி மீண்டும் இணையலாம்
காதல் சங்கிலி இணையாதே
காற்று பேசிதான் விதைத்த வார்த்தைகள்
கரைந்து போனது திரும்புதே
வடித்த கவிதையை எடுத்து படிக்கையில்
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்
காதல் பல முறை கொல்கிறதே
நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே
பல இரவும் பகலும் இங்கே
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை
நெஞ்சில் துயரம் இல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதை புரியவில்லை
(கண்கள் கண்டது..)

படம்: ஒரு கல்லூரியின் கதை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கேகே, சுஜாதா

Wednesday, February 18, 2009

956 இதமான இ(ம்)சை
இதமான இ(ம்)சை

Get this widget | Track details | eSnips Social DNA


சூரியன் பண்பலையில் இனிய இரவில் பழைய பாடல்கள் வைத்து வானொலி அன்பர்கள் நிகழ்ச்சிகள் வழங்கி மூன்று மாதங்களுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படிதானே ஆர்,ஜி.எல். சார்?. தற்போது இடைக்கால அதாவது 1980 முதல் 1990 வருடங்களில் வெளிவந்த திரையிசை பாடல்கள் ஒலிபரப்பி வருகிறார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை. பழைய பாடல்கள் கேட்க முடியாமல் மிகவும் சோர்ந்து
போயிருந்த வானொலி நேயர்களூக்கு வாரம் ஒரு முறை இரவின் மடியில் நிகழ்ச்சி ஆறுதலாக இருக்கிறது. வாராவாரம் இரவின் மடியில் நேயர்களின் ஆதங்கத்தை அந்த நிகழ்ச்சிகளில் நன்றாக உணரமுடிகிறது. பழைய பாடல்களூக்கு என்று ஒரு பெருங்கூட்டமே இன்னும் இருந்து வருகின்றது. இருந்தாலும் இடைக்கால பாடல்களூக்கு என்று ஒரு மாபெருங்கூட்டம் இருக்கிறது. அதை வாராவரம் ஞாயிறு அன்று முழுவதும் ஒலிப்பரப்பி வரும் க்ளாசிக் சண்டே நிகழ்ச்சியிலும் நேயர்களின் ஆவலை அதிகம் காண முடிகிறது. அதனால் என்னவோ வார நாட்களில் இனிய இரவில் இடைக்கால பாடல்கள் ஒலிப்பரப்புவது தவிர்க்கமுடியாமல் போயிற்று போலும். அந்த இடைக்கால பாடல்கள் நிகழ்ச்சியிலும் வித்தியாசமான பாடல் தொகுப்புகள் வர ஆரம்பித்துள்ளன முதற்கட்டமாக 2 நாட்களூக்கு முன் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாடிய ஒலித்தொகுப்பு
ஒலிப்பரப்பினார்கள். அதற்க்கு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. நேயர்களை குழப்ப ஆரம்பிச்சிட்டாங்கய்யா.

ஆமாம் அன்பர்களே நேற்றைய இனிய இரவு ஒலிபரப்பு 17.02.2009 இசையன்பர்களின் மனதிற்க்கு ஒரு “இதமான இசை இம்சை” நிகழ்ச்சி வழங்கினார் நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல். நாராயணன் அவர்கள். வழக்கம் போல நேயர்களை தூங்கவிடமாட்டாம பன்னீட்டாங்க சாமி. இதுவும் ஒரு வித இதமான இம்சை தான். அருமையான ஆக்கத்தை உருவாக்கியவருக்கு எனது வாழ்த்துக்கள்.

நமது அறிவிப்பாளர் துவக்கத்திலே சொன்னது போல “உட்கார்ந்து யோசிப்பீங்களோ?” என்று நீங்களூம் கேட்பது கேட்கிறது. வழக்கம் போல பாடல்களில் ஒரு சொற்றோடரை ஒழித்து வைத்து அதை கண்டு பிடியுங்கள் என்று நமது வானொலி நேயர்களை மீண்டும் கதி கலங்க வைத்துவிட்டார் அறிவிப்பாளர். உதாரணத்திற்க்கு ஏற்கெனவே இந்த தேன்கிண்ணத்தில் சொல்லிசை சதிராட்டம், போன்ற சில ஒலித்தொகுப்புகள் வழங்கியிருக்கிறேன் அதை
கேட்டு ரசித்திருப்பீர்கள் அதே போல் தான் இந்த ஒலித்தொகுப்பு. என்ன வித்தியாசம் என்னவென்றால் அதில் பழைய பாடல்கள் தொகுப்பு இருக்கும் இதில் மத்தியகால பாடல்கள், அந்த ஒலித்தொகுப்புக்களில் அதிகம் ஏழிசை வேந்தனின் திரு. டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் அதிகம் இருக்கும். இந்த ஒலித்தொகுப்பில் எனது ஆதர்ஸ பாடகர் பாலுஜியின் பாடல்களும் சிலது இடம் பெற்றிருக்கும் இவை தான் வித்தியாசம். ஒரு பழமொழி சொல்வார்கள் கோழி குருடாயிருந்தால் நமக்கு என்ன குழம்பு ருசியாக இருக்கனும் அவ்வளவு தானே?. யார் பாடினால் என்ன நமக்கு வேண்டியது ஸ்வாரசியமான நிகழ்ச்சி அவ்வளவு தானே
நேயர்களே. நான் சொல்வது சரிதானுங்களே?

ஆமாங்க.. நுழைவாயில் கட்டும் மலர் தோரணத்திலே ஆதாராமாக இருப்பது ஒரு நூலோ அல்லது நாறோ? அது போல இந்த ஒலித்தொகுப்பின் தோரணத்திலே ஆதாரமாக ஒரு சொற்றொடரில் அழகாக கோர்த்து அமர்க்களமாக வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர். நமது இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர்கள், இசைஞானி, இசைப்புயல் ஆகியோர் இசையமைத்த பாடல்களில் வரிகளில் பல இடங்களில் சங்கதிகளை தூவி விட்டு அருமையான கீதங்களை வழங்கியிருக்கிறார்கள் இவர்கள் இதை நாம் மறுக்க முடியாது. இசையன்பரக்ள் அந்த வரிகளையும் சங்கதிகளையும் அனுபவித்து ரசித்தாலே போதும். இந்த ஒலித்தொகுப்பின் ஒழிந்து கொண்டிருக்கும் சொற்றொடரை சிரமம் இல்லாமல் அடையாளம் காணலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உடலுடன் உயிருடன் கலந்து போயிருக்கும் உணவு, உடை, இசை இம்மூன்றும் நம் வாழ்க்கையில் ஒன்றாக ஆகிவிட்டன. இசையுடன் ஒன்றாக கலந்து கொண்ட இசையன்பர்களுக்கு இன்னும் சீக்கிரம் புரியும்.

தொகுப்பில் 9 மத்தியகால பாடல்கள் உள்ளன தேன் கிண்ண நேயர்கள் மிகவும் உஷாராக இருங்கள் அறிவிப்பாளர் அவருக்கே உரிய பாணியில் அர்த்ததுடன் குழப்பியிருக்கிறார்.
அதென்ன அர்த்தமான குழப்பம்' என்கிறீர்களா? ஒலித்தொகுப்பை கேட்டுத்தான் பாருங்களேன். முதல் இரண்டு பாடல்களிலே நீங்கள் கண்டு பிடித்துவிட்டால் அறிவிப்பாளர் சொன்னது போல்
நீங்களும் இறுதியில் அறிவிக்கப்பட்ட அசகாய சூரர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடுவீர்கள். என்னங்க ரெடிதானே? அவசரப்பட்டு ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து இறுதி பகுதியில்
கேட்டு விடாதீர்கள் இந்த இதமான இம்சையின் ஸ்வாரசியம் கிடைக்காமல் போய்விடும். ரொம்ப சோதித்து விட்டேனா? நீங்களூம் கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை ஒருவரியில் எழுதிடுங்க சார்.

955. செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்

We have a romeo
We need a juliet

Yo Yo Yo
We have a romeo
All that we need is a juliet
(Yo yo..)

ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை நண்பனின் கண்ணில் காட்டுவோம்
மதம் வேண்டாம் குலம் வேண்டாம் I want only குணம்
பணம் வேண்டாம் நிறம் வேண்டாம் I just want only மனம்
மலாய் மலரோ துபாய் குயிலோ அட சென்னை கோவை நெல்லை நிலவோ

We have a romeo
We need a juliet
We have a romeo
We need a juliet
(ஏ செந்தமிழ்..)
Yo Yo Yo
We have a romeo
All that we need is a juliet

கம்ப்யூட்டர் பெண் போறாடா மௌசா மாற வேணாண்டா
டீவி ஏங்கர் பாரேண்டா அவ ஸ்பான்ஸர் கேட்ப்பாடா
கேட்வால்க் மோடல் போறாடா அவ போட்டோக்காக சிரிப்பாடா
செல் போன் பியூட்டி பாரேண்டா அவ always engagedடா
கண்ணா பின்னா ஓ ஓ கதை சொல்லாதே ஓ ஓ
சொன்னா சொன்னா ஓ ஓ செட் ஆகாதே ஓ ஓ
உன்னை அசத்தும் பெண்ணை அடைய உன் லைஃப்டைம் போதாதுடா

We have a romeo
We need a juliet
We have a romeo
We need a juliet
(ஏ செந்தமிழ்..)

I can give you a reason to stay if you can see in me your life
Your dreams realise dont walk away
Get to see watch you're leaving behind

வாடா போடா என்றென்னை வாஞ்ஜை வழியா கூப்பிடணும்
நட்பு காதல் ரெண்டையுமே அவளே தந்திடணும்
நானும் அவளும் போனாளே நீயும் அவனும் வெந்திடணும்
முத்தம் ஒன்று நான் கேட்டால் பத்தாய் தந்திடணும்
ஒன்றாய் குளியல் ஓ ஓ ஒன்றாய் உணவு ஓ
கொஞ்சம் தூக்கம் ஓ ஓ நிறைய கனவு ஓ ஓ
என்னை எனக்கே புதுசாய் காட்டும்
ஒரு வெண்ணிலவை தேடி செல்கிறேன்

We have a romeo
We need a juliet
We have a romeo
We need a juliet
(ஏ செந்தமிழ்..)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: அண்ட்ரியா, ரஞ்சித்

954. எப்படி இருந்த என் மனசு

எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறி போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
எப்படி இருந்த என் வயசு
அடி இப்படி மாறி போகிறது
உன் சொற்களில் என்ன சக்கர இருக்கிறதா
உனது சிரிப்பில் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே
அமையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே
அறிந்து அறிந்து இளமை அறிந்து விலகி போனால் நியாயமா?

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் கீதம் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

ஏய் சொட்டு சொட்டு தேனா நீ நெஞ்சில் விட்டுப்போனா
ஏங்குது என் மனம் துளி துளிதானா
திட்டு திட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்
தொடட்டும் பால்குடம் எட்டு போக வேணாம்
அழகு என்பதே பருக தானடி எனது ஆசைகள் தப்பா
நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
இணைத்து கொள்ளவே நட்பா
இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் கீதம் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்ன
என்னடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
கொக்கு வந்து போனா அது நெஞ்சில் கொல்லும் தானா
முல்லை போல இருக்கும் காதுகள் கடிக்க தோன்றுதே அன்பே
துடுக்கு போலவே இருக்கும் கைகள் கடிக்க தோன்றுதே அன்பே
நடையோ உடையோ ஜடையோ இதையோ எதுவோ என்னை தாக்குதே

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் கீதம் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, கோபிகா பூர்ணிமா

Tuesday, February 17, 2009

953. உயிரே உயிரே பிரியாதே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஓஹோ
கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே ஓஹோ
பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி த்ந்தாயே ஓஹோ
ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகில் வாழ்திட நினைத்தேன்
அரைநொடி மின்னல் போலே சென்றாயே
(உயிரே..)

புல் மேல் வாழும் பனிதான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் போர்க்களம்
உன் அருகாமை அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்
கடல் மூழ்கிய தீவுகளை கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னி மூழ்கிவிட்டேன்
(உயிரே..)

உன் கைக்கோர்த்து அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே
உன் தோள் சாய்ந்து அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு நெருப்பாய் எறிகிறதே
நிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே
(உயிரே..)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சாகர்

952. திருநெல்வேலி அல்வாடா
எடுத்து விடு மச்சி
திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா
என்னாது என்னாது
திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்
(திருநெல்வேலி..)

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாடு
முட்டைக்கு மேலே முட்டையை வச்சா
எட்டு ஆயிடும் கோபாலு
குடிக்கிறான்னு குடிக்கிறான்னு
கேவலைப்படுத்த கூடாது
500 அடிச்சாலும் அவுட் ஆகலை
டெண்டுல்கர்தான் நம்மாளு
காஞ்சிப்புரம் பாட்டுடா பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா
கோவம்ன்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பக்கோனம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாலுகாலு சக்கர என்னை செக்கு போல சுத்துற
(திருநெல்வேலி..)

டூரின் டால்கிஸ் மணலு மேலே
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டியரிங்கை போல வாழ்க்கை போகும்
ரூட்டை பார்த்து வளைஞ்சவன்
பூட்டு போட்ட லாரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லட்டிய வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துக்குழி வெண்ணைடா திருச்செந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணீக்கூட இல்லைடா
ஆளம் பார்த்து காலை வ்டு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைக்டுடா
(திருநெல்வேலி..)

படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஸ்ரீராம்

Monday, February 16, 2009

951. கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

Well My Friend
I have something to say
I want you to listen
Listen to me
This is what I have to say
Here It Goes..

தாகம் என்று சொல்கிறேன்
மரக் கன்று ஒன்றாய் தருகிறதே
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மனி ஒன்றை தருகிறாய்
உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்
(கிழக்கே..)

மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்ப்படும் உத்சவம்
என்னையும் குதூகலப் படுத்துதே
தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி
(கிழக்கே..)

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், போனி சக்கரவர்த்தி

950. காதல் என்பது கடவுள் அல்லவா

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா
வரங்கள் என்பது அலைகள் அல்லவா
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா
(காதல் என்பது..)

கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும்போது நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் வேடந்தாங்களாய் உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேனே நானே
நீ இன்றி நானாய் வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பய் கொடுக்கும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கனக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுல் கூட அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லயே

படம்: ஒரு கல்லூரியின் கதை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹாரீஷ் ராகவேந்திரா, சின்மாயி

Saturday, February 14, 2009

949 ஏழிசை வேந்தனின் இனிய கீதங்கள்யார் தருவார் இந்த அரியாசனம் >> சின்னப் பயலே சின்னப் பயலே >> உன்னை அறிந்தால் நீ >> கண்ணில் வந்து மின்னல் >> பாட்டும் நானே பாவமும் நானே >> சுந்தரி சௌந்தரி >> அந்த நாள் ஞாபகம் >> கொடியசைந்ததும் காற்று வந்ததோ >> முத்தைதரு பத்தி >> புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.

ஏழிசை வேந்தனின் எழில்மிகு தோற்றத்துடன் பாடல் தொகுப்பு மற்றும் தகவல்கள்.

ஏழிசை வேந்தனின் இனிய கீதங்கள் உடைய பாடல்களின் தலைப்புகள் தான் மேலே எத்தனை தடவை கேட்டாலும் காதுக்கு தெவிட்டாத இனிய கானங்கள். இந்த த்லைமுறைக்காகவே ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த பாடல்கள தனித்தனியாக தான் கேட்டிருப்பீர்கள் இதோ அவர் துவக்க காலங்களில் பாடல்கள் வாய்ப்பு பெற எப்படி படாத பாடு பட்டார் என்பதை இந்த ஒலித்தொகுப்பில் கேட்டு மகிழுங்கள்.

அமைதியாக, அழகாக இனிமையான குரலில் வார்த்தைகளை தேடித்தேடி வெண்முத்துமாலை போல் கோர்த்து தகவல்களூடன் வழங்கிய அறிவிப்பாளர் திருமதி. சாரதா ராமனாதன் அவர்களூக்கு நன்றி. தரவிறக்கம் செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதுங்கள் இசையன்பர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA

948 இடைக்கால கீதங்கள் ஒலித்தொகுப்பு 1இடைக்கால கீதங்களில் சங்கமிக்கும் காதலர்களூக்கு வாழ்த்துக்கள்.

சில வாரங்களாக தளத்தில் வரமுடியவில்லை வானொலியில் இரவு நேரங்களில் பழைய பாடல்கள் ஒலிப்பரப்புவதை நிறுத்திவைத்துள்ளார்கள் இடைக்காலகீதங்கள் ஒலிப்பரப்பி வருகிறார்கள். எப்படி பழைய பாடல்களூக்கு ஒரு கூட்டமே உள்ளதோ அதே போல் இருமடங்கு இடைக்கால கீதங்களூக்கும் இருக்கிறார்கள். இடைக்கால ஒலித்தொகுப்புக்கள் வரிசைக்கட்டி வரவிருக்கின்றன எல்லா பாடகர்களின் பாடல்களூம் தொகுப்புகளாக வரவிருக்கின்றன தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். அவ்வப்போது பழைய பாடல்களூம் வரவிருக்கின்றன. இப்போது இந்த ஒலித்தொகுப்பை அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயாணன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

இடைக்கால கீதங்கள் ஒலித்தொகுப்பு 1

1) என்னடா பொல்லாத வாழ்க்கை, புவனா ஒரு கேள்வி
2) இங்கே இறைவன், சார் ஐ லவ் யூ
3) அம்மன் கோவில் பேரழகு, சொந்தம் 16
4) தங்க நிலவே உன்னை உருக்கி, தங்கைக்கோர் கீதம்
5) ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே, ப்ரியா
6) வண்ணம் வண்ணம், பிரேமபாசம்
7) ஆள அசத்தும் மல்லியே மல்லியே, கன்னிராசி
8) சோலைப்பூவில், வெள்ளைரோஜா


Get this widget | Track details | eSnips Social DNA

947. இதுதானா இதுதானா

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)

படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சித்ரா

946. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்குள்ளே போராட்டம் கண்ணில் இந்த நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே..)

உன்னை வெல்ல யாருமில்லை உருதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுத்தோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா? துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே..)

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சித்ரா

Friday, February 13, 2009

945. கண்டுபிடி கண்டுபிடி

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி
சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே
தினசரி தவனை முறையில் வந்து செலவு செய் என்னை
(கண்டுபிடி..)

கண்ணில் தூண்டில்கள் மாட்டி
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி
சுக கண் காட்சி நீ காட்டுறியே
சுடும் சூரியனை அடி ஆக்குறியே
புத்தகம் இடையில் வாசி
இந்த புயலை பூட்ட வழி யோசி
நீ உடும்பாகி என்னை உரசேற்று
தினம் உலை யேற்று
மேகம் மழை சிந்தும் போது
ஜலதோஷம் பூமிக்கு ஏது?
மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது
(கண்டுபிடி..)

அம்பு மாற்று முறை போல
முத்த மாற்று முறை செய்தாய்
இந்த வீணைக்குள் புயல் வீசும்
அது உன் விரலை விலைப்பேசும்
கண்ணில் உன் அழகு ஊறும்
என் இதயம் தலைகீழாய் மாறும்
அடி உன்னை தொட்டால் அட வேர்க்கும்
குளிர் ஜுரம் தாக்கும்
கட்டில் மேல் தேர்தல் வைத்து
அட இணைந்து இருவரும் வெல்வோம்
காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம்
(கண்டுபிடி..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி

944. ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்
ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(ஆயிரத்தில் நான் ஒருவன்)

அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன்
உண்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(ஆயிரத்தில் நான் ஒருவன்)

புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக
அந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

(ஆயிரத்தில் நான் ஒருவன்)

படம்:இருவர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: மனோ

Thursday, February 12, 2009

943. ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்

ஒலியும் ஒளியும் கர்ரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி
(ஊர்வசி..)
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்..

கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலையேது
ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
பாலிலே கலர்கள் போராமல் இருட்டிலே கண்ணடிச்சென்ன பயன்?
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷாஹுல் ஹமீட், சுரேஷ் பீட்டர்

942. பேட்டைராப்

Rhythm of Life
Blue clear mountain
Mixed with Attitude
Funky drums from hell
சைதாபேட்டை குரோம்பேட்டை ராணிப்பேட்டை பேட்டைராப்
பேட்டைராப் பேட்டைராப்

இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றமில்லையே
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட get up and dance
It's a darn new chance
உன் கையில் எல்லாமே இருக்குதடா
மெட்டுப்போடலாம்
முதல் யார் முதல் யார் முதல முதல் முதல
பேட்டைராப் பேட்டைராப்

அம்மாப்பேட்டை ஐயாபேட்டை தேனாம்பேட்டை அய்யம்பேட்டை
தேனாம்பேட்டை தேங்கா மட்டை
ஹேய் காசென்ன பணமென்ன இருப்பது ஒரு life
போதுமடா சாமி எனக்கு ஒரு வைஃப்
திறந்து வைப்போமே மனசை திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டுதான் பார்ப்போமே
அட உனக்கென பிறந்தது உனக்கேதான்
கிடசத வச்சுக்கோடா அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய பேட்டைராப் பேட்டைராப்
வாடகை கர்ரெண்டு முறவாசல்
பாக்கேட் பாலு புள்ளக்குட்டி
ஸ்கூலு ஃபீசு நல்லெண்ணை
மண்ணெண்ணை ரவை ரேஷன்
பால்ம் ஆயில் பச்சரிசி கோதுமை பத்தலை பத்தலை
காசு கொஞ்சம் கூட பத்தலையே
ஓரண்ணா ரெண்டண்ணா உண்டியலே உடைச்சு
நாலண்ணா எட்டணா கடன உடன வாங்கி
(ஓரண்ணா..)

அண்டா குண்டா அடகு வச்சு
அஞ்சு பத்து பிச்சை எடுத்தும்
பத்தலை பத்தை
ஞான பழமே ஞான பழமே
நீ செவ்வாப்பேட்டை ஞானப்பழமே
ஞான பழமே ஞான பழமே
நீ செவ்வாப்பேட்டை ஞானப்பழமே
சைதாப்பேட்டை ராணிபேட்டை க்ரோம்பேட்டை பேட்டைராப்
சைதாப்பேட்டை ராணிபேட்டை க்ரோம்பேட்டை பேட்டைராப்
அம்மாபேட்டை ஐயம்பேட்டை தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
அம்மாபேட்டை ஐயம்பேட்டை தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
ஹேய் சாராயம் கருவாடு துண்டு பீடி
வவ்வாலு குடிசை குப்பத்தொட்டி
பக்கத்துல டீக்கடை
ரிக்‌ஷா காத்தாடி பாட்டிலோடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பான கானா பாட்ட பாடலாமா?
ஆலை அஞ்சலை பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா கிரி கஜா மணி
எம்ஜி.ஆரு சிவாஜி ரஜினி கமலு
பகிலு பிகிலு பேட்டைராப் பேட்டைராப்
Stop It!
எவ அவ...

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஷாஹுல் ஹாமீட், சுரேஷ் பீட்டர், குஞ்சாரம்மா

Wednesday, February 11, 2009

941. காற்று குதிரையிலே

காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்

காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனை
உன் நெஞ்சில் எழுதட்டுமே

ஆற்றங்கரை புதரில்
சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நாம்
விளையாட போவதெப்போ?

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா

940. மே மாசம் தொண்ணுத்தெட்டில்

மே மாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே
மேஜர் ஆனா நாளாய் முதல் பேஜார் ஆனேனே
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல் சில அங்கம் தொடுகின்றார்
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்
(மே மாசம்..)

Thirteen என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்
Thirteen என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்
Thirteen வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில்
Fourteen வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்
அடுத்த வீட்டு பையன் அட அம்பு தொடுத்தான் சும்மா
கோலம் போட போனால் அடி கூடாது என்றால் அம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா
(அட வயசுக்கு..)
(மே மாசம்..)

மே மே மே மே மாசம்..
Fifteen வந்தது மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில்
மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரத்தில்
Sixteen வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்
பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளிக்கூடத்தில்
எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேடுறீங்க?
எங்கோ போகுது பார்வை என்னை வெட்கம் பின்னுது போங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க
(மே மாசம்..)

படம்: ஜேஜே
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சுசித்ரா

Tuesday, February 10, 2009

939. காதல் மழையே காதல் மழையே

தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்போம் என்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ?
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
நான் நடந்து கொண்டே எறிவது உனக்கு சம்மதமா?
அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா?
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(காதல் மழையே..)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விழும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(காதல் மழையே..)

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

தேடல் தொடங்கியதே மெய் தேடல் தொடங்கியதே
சங்கில் குடித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்
என் உயிரே வாராய்
காதல் காதல் காதல்
(காதல் மழையே..)

படம்: ஜேஜே
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

938. உன்னை நான் உன்னை நான்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைத்ததே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

சொக்குப்பொடி கொண்ட சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?
மூடி கிடண்ட ஜோடி திமிரா?
என்ன சொல்ல எப்படி சொல்ல
எதுகை மோன கை வசமில்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றிக்கொண்டு
உள்ளம் நோகுமே
என் உச்சி வேகுதடி
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

மறு முறை உன்னை சந்திப்பேனா?
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா?
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா?
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே
பதறும் இதயம் தூண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் வந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்
என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா?
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

படம்: ஜேஜே
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஹரிஹரன்

Monday, February 9, 2009

937. வாழ்க்கையை யோசிங்கடா

வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா Go

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா
அந்த நான் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃபுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சிக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

உழைக்கும் கையை நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி
குரல் கொடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன்
நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையுங்கடா
என் மேலே நம்பிக்கை வையுங்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

காதல் வந்துச்சுன்னா
முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோணுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும்
லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

தாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுப்போல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனை நமக்கு
இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
(வாழ்க்கையை..)

படம்: சென்னை 600028
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்

Last 25 songs posted in Thenkinnam