|
சூரியன் பண்பலையில் இனிய இரவில் பழைய பாடல்கள் வைத்து வானொலி அன்பர்கள் நிகழ்ச்சிகள் வழங்கி மூன்று மாதங்களுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படிதானே ஆர்,ஜி.எல். சார்?. தற்போது இடைக்கால அதாவது 1980 முதல் 1990 வருடங்களில் வெளிவந்த திரையிசை பாடல்கள் ஒலிபரப்பி வருகிறார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை. பழைய பாடல்கள் கேட்க முடியாமல் மிகவும் சோர்ந்து
போயிருந்த வானொலி நேயர்களூக்கு வாரம் ஒரு முறை இரவின் மடியில் நிகழ்ச்சி ஆறுதலாக இருக்கிறது. வாராவாரம் இரவின் மடியில் நேயர்களின் ஆதங்கத்தை அந்த நிகழ்ச்சிகளில் நன்றாக உணரமுடிகிறது. பழைய பாடல்களூக்கு என்று ஒரு பெருங்கூட்டமே இன்னும் இருந்து வருகின்றது. இருந்தாலும் இடைக்கால பாடல்களூக்கு என்று ஒரு மாபெருங்கூட்டம் இருக்கிறது. அதை வாராவரம் ஞாயிறு அன்று முழுவதும் ஒலிப்பரப்பி வரும் க்ளாசிக் சண்டே நிகழ்ச்சியிலும் நேயர்களின் ஆவலை அதிகம் காண முடிகிறது. அதனால் என்னவோ வார நாட்களில் இனிய இரவில் இடைக்கால பாடல்கள் ஒலிப்பரப்புவது தவிர்க்கமுடியாமல் போயிற்று போலும். அந்த இடைக்கால பாடல்கள் நிகழ்ச்சியிலும் வித்தியாசமான பாடல் தொகுப்புகள் வர ஆரம்பித்துள்ளன முதற்கட்டமாக 2 நாட்களூக்கு முன் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாடிய ஒலித்தொகுப்பு
ஒலிப்பரப்பினார்கள். அதற்க்கு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. நேயர்களை குழப்ப ஆரம்பிச்சிட்டாங்கய்யா.
ஆமாம் அன்பர்களே நேற்றைய இனிய இரவு ஒலிபரப்பு 17.02.2009 இசையன்பர்களின் மனதிற்க்கு ஒரு “இதமான இசை இம்சை” நிகழ்ச்சி வழங்கினார் நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல். நாராயணன் அவர்கள். வழக்கம் போல நேயர்களை தூங்கவிடமாட்டாம பன்னீட்டாங்க சாமி. இதுவும் ஒரு வித இதமான இம்சை தான். அருமையான ஆக்கத்தை உருவாக்கியவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நமது அறிவிப்பாளர் துவக்கத்திலே சொன்னது போல “உட்கார்ந்து யோசிப்பீங்களோ?” என்று நீங்களூம் கேட்பது கேட்கிறது. வழக்கம் போல பாடல்களில் ஒரு சொற்றோடரை ஒழித்து வைத்து அதை கண்டு பிடியுங்கள் என்று நமது வானொலி நேயர்களை மீண்டும் கதி கலங்க வைத்துவிட்டார் அறிவிப்பாளர். உதாரணத்திற்க்கு ஏற்கெனவே இந்த தேன்கிண்ணத்தில் சொல்லிசை சதிராட்டம், போன்ற சில ஒலித்தொகுப்புகள் வழங்கியிருக்கிறேன் அதை
கேட்டு ரசித்திருப்பீர்கள் அதே போல் தான் இந்த ஒலித்தொகுப்பு. என்ன வித்தியாசம் என்னவென்றால் அதில் பழைய பாடல்கள் தொகுப்பு இருக்கும் இதில் மத்தியகால பாடல்கள், அந்த ஒலித்தொகுப்புக்களில் அதிகம் ஏழிசை வேந்தனின் திரு. டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் அதிகம் இருக்கும். இந்த ஒலித்தொகுப்பில் எனது ஆதர்ஸ பாடகர் பாலுஜியின் பாடல்களும் சிலது இடம் பெற்றிருக்கும் இவை தான் வித்தியாசம். ஒரு பழமொழி சொல்வார்கள் கோழி குருடாயிருந்தால் நமக்கு என்ன குழம்பு ருசியாக இருக்கனும் அவ்வளவு தானே?. யார் பாடினால் என்ன நமக்கு வேண்டியது ஸ்வாரசியமான நிகழ்ச்சி அவ்வளவு தானே
நேயர்களே. நான் சொல்வது சரிதானுங்களே?
ஆமாங்க.. நுழைவாயில் கட்டும் மலர் தோரணத்திலே ஆதாராமாக இருப்பது ஒரு நூலோ அல்லது நாறோ? அது போல இந்த ஒலித்தொகுப்பின் தோரணத்திலே ஆதாரமாக ஒரு சொற்றொடரில் அழகாக கோர்த்து அமர்க்களமாக வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர். நமது இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர்கள், இசைஞானி, இசைப்புயல் ஆகியோர் இசையமைத்த பாடல்களில் வரிகளில் பல இடங்களில் சங்கதிகளை தூவி விட்டு அருமையான கீதங்களை வழங்கியிருக்கிறார்கள் இவர்கள் இதை நாம் மறுக்க முடியாது. இசையன்பரக்ள் அந்த வரிகளையும் சங்கதிகளையும் அனுபவித்து ரசித்தாலே போதும். இந்த ஒலித்தொகுப்பின் ஒழிந்து கொண்டிருக்கும் சொற்றொடரை சிரமம் இல்லாமல் அடையாளம் காணலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உடலுடன் உயிருடன் கலந்து போயிருக்கும் உணவு, உடை, இசை இம்மூன்றும் நம் வாழ்க்கையில் ஒன்றாக ஆகிவிட்டன. இசையுடன் ஒன்றாக கலந்து கொண்ட இசையன்பர்களுக்கு இன்னும் சீக்கிரம் புரியும்.
தொகுப்பில் 9 மத்தியகால பாடல்கள் உள்ளன தேன் கிண்ண நேயர்கள் மிகவும் உஷாராக இருங்கள் அறிவிப்பாளர் அவருக்கே உரிய பாணியில் அர்த்ததுடன் குழப்பியிருக்கிறார்.
அதென்ன அர்த்தமான குழப்பம்' என்கிறீர்களா? ஒலித்தொகுப்பை கேட்டுத்தான் பாருங்களேன். முதல் இரண்டு பாடல்களிலே நீங்கள் கண்டு பிடித்துவிட்டால் அறிவிப்பாளர் சொன்னது போல்
நீங்களும் இறுதியில் அறிவிக்கப்பட்ட அசகாய சூரர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடுவீர்கள். என்னங்க ரெடிதானே? அவசரப்பட்டு ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து இறுதி பகுதியில்
கேட்டு விடாதீர்கள் இந்த இதமான இம்சையின் ஸ்வாரசியம் கிடைக்காமல் போய்விடும். ரொம்ப சோதித்து விட்டேனா? நீங்களூம் கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை ஒருவரியில் எழுதிடுங்க சார்.
3 Comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
வலைப்பூக்கள் குழுவிநர் அவர்களுக்கு,
தங்கள் இணைத்தில் தொடர்பு கொடுத்ததற்க்கு மிக்க் நன்றி. கோவை ரவி.
Post a Comment