>
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
(ஞாபகம் வருதே..)
ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளர்த்தது போலே
கண்களின் ஓரம் கண்ணீர் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி
முதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சு
முதல் முதல் குடித்த மலபார் பீடி
முதல் முதல் சேர்த்த உண்டிய காசு
முதல் முதல் பார்த்த டூரின் சினிமா
முதல் முதல் ஜெயித்த சகுடு போட்டி
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு ரயிலு
முதல் முதல் அழுத சினேகிதன் மரணம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதல் முதலாக பழகிய நீச்சல்
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்
முதல் முதலாக அப்பா அடித்தது
முதல் முதலாக சாமிக்கு பயந்தது
முதல் முதலாக வானவில் ரசித்தது
முதல் முதலாக அரும்பிய மீசை
முதல் முதலாக விரும்பிய இதயம்
முதல் முதலாக எழுதிய கடிதம்
முதல் முதலாக வாங்கிய முத்தம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
Tuesday, February 3, 2009
925. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பதிந்தவர் MyFriend @ 12:42 PM
வகை 2000's, உன்னி மேனன், பரத்வாஜ்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment