Saturday, February 14, 2009

947. இதுதானா இதுதானா





இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)

படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam