Saturday, February 21, 2009

963. நாளை உலகம் இல்லை

நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பாத்துக் கொள்வேன்
மண்டியிட்டு அமர்ந்து மண்னகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

நாளை உலகம்
நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் :

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam