Wednesday, February 25, 2009

971. விடுகதையா இந்த வாழ்க்கை





விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன


விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்?
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே


படம்: முத்து
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்

***

விரும்பிக் கேட்டவர்: அருண்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam