கவிஞர் புலமைப் பித்தன் பாடல் தொகுப்பு
பொதுவாகவே பாடல்களின் தகவல்கள் இணையத்தில் படம் பெயர், இசையமைப்பாளர், பாடகர் பாடகிகள் பெயர்கள் தகவல்கள் தான் அதிகபட்சம் இருக்கும். பாடாலாசிரியர் பெயர் மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை நான் பல
பாடல் இணைய தளங்களில் கண்டு இருக்கிறேன். பாடல் ஏற்றும் போதே பாடாலாசிரியர் பெயர்கள் எழுத மறந்து விடுகிறார்கள் எல்லாம் சோம்பேறித்தனம் தான். நீங்களே ஒரு எந்தவொரு இணையத்திலும் பாடல் பெயர் தேடி பாருங்கள் பாடலாசிரியர் பெயர்
விடுபட்டு போயிருக்கும். அதுஒரு பக்கம் இருந்தாலும் இப்போது வரும் புதிய பாடல்களில் அதிகபட்சம் பாடலாசிரியர் பெயர் எழுதப்பட்டு வருகிறது இது வரவேற்க தக்க விசயம். சரி சரி விசயத்துக்கு வருகிறேன். நேற்று ஒரு ஒலித்தொகுப்பு பண்பலையில் கேட்டேன். அந்த ஒலித்தொகுப்பு அடடா என்று என் புருவங்களை உயர்த்த வைத்தது. ஆமாங்க, புலவர் புலமைப்பித்தன் அவர்களைப் பற்றி நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல் சார் அருமையாக தொகுத்து வழங்கினார். எப்படி தான் அவரால் இப்படி பேச முடிகிறதோ பலதடவை என்னை யோசிக்க வைத்தது. மனுசன் மிகவும் சரளமாக அதுவும் அவருக்கே உரிய பாணியில் வழங்குவது அவரின் மகத்தான் சிறப்பு.
புலவர் புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள் எல்லோருக்கும் போல் எனக்கும் மிகவும் பிடிக்கும் மற்றவர்களை விட இன்னும் எனக்கு அதிகம் பிடிக்குக்ம் ஏனென்றால். பெரும்பாளும் அவரின் பாடல் வரிகளுக்கு என் அபிமான பாடகர் பாலுஜி பாடியிருப்பார். அவரும் துடிக்கும் கரங்கள் போன்ற அவர் இசையமைத்த படங்களூக்கு அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தந்துள்ளார்.
புலவரைப் பற்றி அறிவிப்பாளர் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் தகவல்கள் பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நமது மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு பற்றியும் அதன் அதிசயத்தை பற்றிய தகவல் ஒன்றை வழங்கினார். இளையராஜா ரசிகர்களுக்கு தெரிந்த விசயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இருந்தாலும் பண்பலை நேயர்களூக்கு அந்த தகவல் புதிது. என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா அன்பர்களே. மன்னிக்கவும் அதற்க்கு நீங்கள் ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டுதான் தீர வேண்டும். நீங்கள் கேள்விப்படாத
தகவலாக இருந்தால். கேட்டுவிட்டு உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதுங்கள்.
பலவருடங்களூக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் புலமைப்பித்தன் அவரகளை ஒரு தடவை பார்த்த நினவு. அறிவிப்பாளர் சொன்னது போல் உடுத்தும் உடை, அவரின் முறுக்கிய மீசை, தலைமுடி அது மட்டுமல்லாமல் அவரின் மனதும் மிகவும் வெள்ளை. அவரின் பாடல்கள் பலவற்றை கேட்டு வியந்து போயிருக்கிறேன். ஏன் உங்களூக்கும் இருந்திருக்கும். இந்த ஒலித்தொகுப்பில் வரும் பாடல்கள் கேட்டீர்களானால் எப்போதும் யார் கேட்டாலும் அந்த பாடல் யார் எழுதியது என்றால் நிச்சயம் அதுவா புலமைப் பித்தன் சார் எழுதியது என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். இது மாதிரி ஒலித்தொகுப்புகள் பலவற்றை பண்பலை ஒலிப்பரப்ப வேண்டும் அப்போது தான் ரசிகர்கள் மனதில் பாடலாசிரியர்கள் மிகவும் ஆழமாக பதிவார்கள். ஒலித்தொகுப்பை உருவாக்கியவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
9 Comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Covai Ravee அவர்களே மிக அருமையான தொகுப்பு. கவிஞர் புலமைப்பித்தன் அவர்களை பற்றி அறிய முடிந்தது. இன்னும் இதுபோன்ற அரிய இணைப்புகளை கொடுக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.
http://www.tamilnation.org/literature/lyricwriters/pulamaipithan.htm
வாங்க ஸ்ரீதர் கண்ணன் சார்..
//Covai Ravee அவர்களே மிக அருமையான தொகுப்பு.//
உங்கள் அன்புக்கு நன்றி.
//கவிஞர் புலமைப்பித்தன் அவர்களை பற்றி அறிய முடிந்தது. இன்னும் இதுபோன்ற அரிய இணைப்புகளை கொடுக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.//
நிச்சயம் பண்பலையில் எப்போது வித்தியாசமான ஒலித்தொகுப்பு ஒலிப்பரப்பினாலும் நேரம் காலம் சேர்ந்து ஒத்துழைத்தால் அதை பதிவு செய்து பதிவில் ஏற்றுவேன். நமது இணையதள இசையன்பர்களை மனம் குளிர்விப்பதை விட எனக்கு என்ன வேலை அன்பரே.. இன்னும் வியக்கவைக்கும் வானொலி அன்பர்களின் ஆக்கங்கள் உள்ளன ஒவ்வொன்றாக பதிவேன். அடிக்கடி வாருங்கள் நான் கேட்டதை நமது இணைய தள அன்பர்களீடம் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி இந்த தேன்கிண்ண தளத்திற்க்கும் என்னை பதிய அனுமதித்த பதிவர் குழுவிற்க்கும் நான் என்றும் கடமை பட்டவன்.
ஸ்ரீதர் கண்ணன் சார்..
நீங்கள் கொடுத்த சுட்டியில் நானும் பார்த்தேன். அவரின் புகைப்படத்தை உங்கள் தளத்தில் தான் நானும் எடுத்தேன் நன்றி. மேலும் அறிவிப்பாளரும் ஒலித்தொகுப்பில் உங்கள் பதிவில் இருந்துதான் தகவல்கள் சேகரித்துள்ளார் என்றும் நினைக்கிறேன். அறிதான தகவல்கள் அறிவிப்பாளர் குரலில் கேட்பதற்க்கு இன்னும் மெருகேறுகிறது இல்லையா? அன்பரே. சுட்டியை தந்ததற்க்கு மிண்டும் நன்றி.
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...அடடா... கவித்துவமான காதற்பாடல். நீண்ட நாட்களாக வாலி என்று எண்ணிக் கொண்டிருந்தவனைத் திருத்தியமைக்கு நன்றி. 80களில் நல்ல பாடல் என்றால் கூசாமல் வாலி வைரமுத்து என்று சொல்லிடும் வழக்கம் மறைய வேண்டும். அதற்கு இந்தப் பதிவுகளும் நிகழ்ச்சிகளும் மிகவும் உதவும்.
புலமைப் பித்தன் மிக அருமையான கவிஞர். அவர் எழுதி .. கேட்டு... ரசிக்காத பாடல் இதுவரையில் இல்லை என்பதே என் அனுபவம்.
கண்ணன் மனம் என்னவோ.. கண்டுவா தென்றலே....காதல் கொண்ட பெண்களுக்குக் காதலனே கண்ணன். கண்ணனே காதலன். அந்தக் காதலனை எண்ணி எண்ணிக் கன்னி பாடும் இனிய பாடல். மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்த இந்தப் பாடல் என்னுடைய பிடித்த பாடல் வரிசையில் சிறப்பான இடத்திலுண்டு.
காக்கிச்சட்டை படத்தில் அத்தனை பாடல்களும் இனிமையிலும் இனிமை. அதில் இனியது கண்மணியே பேசு பாடல். அதே போல பட்டுக் கண்ணம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும். அதுவும் புலமைப் பித்தன் எழுதியதா?
ஜி.ஆர் சார்..
நீங்க சொன்ன மாதிரி புலமைப்பித்தன் சார் பாடல்கள் பல உள்ளன அவையெல்லாம் தேடி பிடித்து பதிய வேண்டும் நேரமும் காலமும் ஒத்துப்போனால் எல்லாமே சாத்தியம். நல்லாத்தான் ரசிச்சு எழுதியிருக்கீங்க. உங்கள் ஊக்கத்தால் இன்னும் பல பதிவுகள் காத்திருக்கின்றன. வருகைக்கும் கருத்துக்களூக்கும் நன்றி.
இதனை எழுதியது வைரமுத்துவா, முத்துலிங்கமா என்கிற குழப்பம் இருக்கயில் இது வேறயா?!
Post a Comment