நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்வரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துரையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானா எந்தன் நெஞ்சில் முதல் சரணம்
அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை
(நெஞ்சம்..)
காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பறவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தற்பவெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும்
இந்த காதல் வந்தால் இலை கூட மாலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
(நெஞ்சம்..)
படம்: வசீகரா
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், மகாலெட்சுமி ஐயர்
Friday, February 20, 2009
959. நெஞ்சம் ஒரு முறை
பதிந்தவர் MyFriend @ 12:32 PM
வகை 2000's, SA ராஜ்குமார், கேகே, மகாலட்சுமி ஐயர், மலேசியா வாசுதேவன், ஸ்ரீநிவாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Submit your blog to the Tamil Blogs directory http://kelvi.net/topblogs/
Post a Comment