சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழ்ஹாவே என் வாழ்விலே
(சங்கீத மேகம்..)
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே
(சங்கீத மேகம்..)
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே
(சங்கீத மேகம்..)
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Friday, February 6, 2009
931. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
பதிந்தவர் MyFriend @ 12:36 PM
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment