Saturday, February 21, 2009

961. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

4 Comments:

Bee'morgan said...

வாவ்.. அருமையான பாடல்.. எனக்கு மிகப்பிடித்த பாடலும் கூட.. பதிந்தமைக்கு நன்றி :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாவ்... எனக்கு ரொம்ப பிடித்த பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி

marimuthu said...

இப்பாடலை கேட்பார் நெஞ்சம் சிறிது
கலங்கித்தான் போகிறது

marimuthu said...

இப்பாடலை கேட்பார் நெஞ்சம் சிறிது
கலங்கித்தான் போகிறது

Last 25 songs posted in Thenkinnam