இசைப்புயலுக்கு வாழ்த்தொலி தொகுப்பு
|
”இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” தற்போது இந்த வரிகளை உச்சரிக்காத உதடுகள் இந்தியாவில் எங்கும் காணமுடியாது. ஆமாம் இசையன்பர்களே இசையை ரசிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆத்மார்த்மாக அடிமனதில் இருந்து தன்னையும் அறியாமல் மேற்கண்ட வரிகளை உச்சரிக்க வைக்கும். ஒட்டு மொத்த இந்தியாவின் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பெறுவது என்பது அந்த ஆஸ்கர் அவார்டை விட பெரிது எனலாம்.
ஏனென்றால் அனைத்து இந்திய இசைப்பிரியர்களூக்கும் ஒவ்வொருவரும் தானே பெற்றதாக உணர்கிறார்கள்.
ரஹ்மான் அவரக்ளில் துவக்க காலத்தில் இசையமைக்கும் போது சிலபேர் “என்னது ஒரே இரைச்சலாக இருக்கிறதே” என்று முணு முணுத்தவர்களூம் உள்ளனர். ஏன் வாய் திறந்து சொன்னவர்களூம் உண்டு. அவர்களையெல்லாம் தன் திறமையால் திறந்த வாயை ஒரே ஆப்பாக அடித்து மூடவைத்துவிட்டார் இப்படியும் சிலபேர் என்னவென்று சொல்ல?.
ஆமாம் “இசைப்புயல்” என்று யார் இவர்க்கு பெயர் வைத்தார்களோ அவர்கள் நீடுழி வாழனும். ஏனென்றால், ரஹ்மான் தான் இசையமைக்க துவக்க காலத்தில் இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது என்று ஒரு கேள்விக்கு ஒரு பேட்டியில் படித்த நினைவு. நான் சிறியவர்களையும், இளைஞர்களையும் கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் இசையமைக்க ஆரம்பித்தேன். எப்போதுமே இளம் உள்ளங்களில் சொல்லும் வழியில் சொன்னால் அவர்கள் மனதில் நன்றாக பதியும் என்று பேட்டி தந்தார். அது எவ்வளவு உண்மை என்று ஒவ்வொரு ரசிகர்களின் குடும்பங்களீல் உள்ள குழந்தைகளை கேட்டால் தெரியும். இது தான் உண்மை. ரஹ்மான் இசையமைப்பு இரைச்சல் தான் இல்லையென்று சொல்லவில்லை கடலின் சீற்றம், புயலின் ஆர்பரிப்பு இயற்க்கையான இரைச்சல் தான். இயற்க்கையை என்றுமே யாராலும் மாற்றமுடியாதே இது என் கருத்து. ஆணால் அந்த
இரைச்சலுக்கும் இறுதியில் ஓர் அமைதி ஏற்படுமே அதுவே இனம் புரியாத சுகம். அது போலவே பல மெலோடி பாடல்களூக்கும் இசையமைத்திருக்கிறார். ரஹ்மான் அவர்கள். அவர் மேன் மேலும் பல விருதுகள் வாங்கி உலக அளவில் பல ஆங்கில படங்களூக்கு இசையமைக்க வேண்டும் அதற்கு இறைவன் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனுங்கே ஆமாங்க நேற்று இனிய இரவில் பண்பலையிலும் அவரின் திறமையை பாராட்டி ஓர் ஒலித்தொகுப்பு வழங்கினார்
நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல் சார். நேற்று எல்லா வானொலிகளூம் இந்த பதிவு பதியும் வரையும் ரஹ்மான் அவர்களின் படப்பாடல்கள் தான் ஒலிப்பரப்பிவருகிறார்கள். எல்லோருமே அதிகபட்சம் மெலோடி அவரின் மெலோடி பிரபல பாடல்கள் தான் ஒலிப்பரப்பினார்கள். நமது அறிவிப்பாளர் தேடிப்பிடித்து அதிகம் சில ஒலிபரப்பாத பாடல்களையும் சில பிரபல மெலோடி பாடல்களையும் ஒலிப்பரப்பி தன் பங்குக்கு
தன் வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். நான் கேட்டு ரசித்த அந்த ஒலித்தொகுப்பை தேன் கிண்ண் நேயர்களான உங்களிடம் பகிர்ந்து கொண்டு ரஹ்மானுக்கு உங்களூடன் சேர்ந்து மீண்டும் வாழ்த்துக்கள் சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன். ஒலித்தொகுப்பு தரவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம் அன்பர்களே. நன்றி.
5 Comments:
ஒலித்தொகுப்பிற்கு நன்றி
வாங்க புதுகை தென்றல் அவரக்ளே..
அதுக்குள்ளே ஒலித்தொகுப்பு கேட்டுவீட்டீர்களா யப்பா எம்மாம் ஸ்பீடு. தாஸன்ணாதும் ஒர் ஒலித்தொகுப்பு இருக்குங்க உங்களூக்கு அனுப்பட்டுமா அல்லது தேன்கிண்ணத்துல போடட்டுமா? முதல் மறுமொழி வழங்கியதற்க்கு மிக்க நன்ற்.
நீங்களே அதை கானக்கந்தர்வனில் ஏத்திப்புட்டீங்கன்னா சந்தோஷமா இருக்கும்.
நன்றி
எனக்கு அந்த தளத்தில் பதிய அனுமதி இல்லை. covairavee@gmail.com இந்த முகவரிக்கு அனுமதி வழங்குங்கள் நானே பதிய முயற்சி செய்கிறேன். நன்றி.
நன்றி ரவி சார் :)
Post a Comment