Thursday, February 19, 2009

957. கண்கள் கண்டது கண்கள் கண்டது





கண்கள் கண்டது கண்கள் கண்டது காணல் நீராய் மாறியதே
கனவுகள் அடிக்கடி கோடை காற்றில் மோதிட கலங்கியதே

கண்கள் கண்டது கண்கள் கண்டது காணல் நீராய் மாறியதே
கனவுகள் அடிக்கடி கோடை காற்றில் மோதிட கலங்கியதே
மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்
காலடி அங்கே காணவில்லை
(மரத்தின்..)
ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
(கண்கள் கண்டது..)

தோற்றம் திரும்பலாம் கோர்த்து நெருங்கலாம்
நிஜத்தின் காயங்கள் மாறாதே
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே
அடுத்த நாட்கள் இங்கு பாத்திரமாக
நடந்த நாடகம் முடிகிறதே
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தான் வாழ்ந்த
நட்பு என் மனதில் நெகிழ்கிறதே
அட தொப்புள் கொடியின் உறவை தான்
என் ஞாபகம் அறிந்தது இல்லை
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதை புரியவில்லை

கால சங்கிலி மீண்டும் இணையலாம்
காதல் சங்கிலி இணையாதே
காற்று பேசிதான் விதைத்த வார்த்தைகள்
கரைந்து போனது திரும்புதே
வடித்த கவிதையை எடுத்து படிக்கையில்
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்
காதல் பல முறை கொல்கிறதே
நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே
பல இரவும் பகலும் இங்கே
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை
நெஞ்சில் துயரம் இல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதை புரியவில்லை
(கண்கள் கண்டது..)

படம்: ஒரு கல்லூரியின் கதை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கேகே, சுஜாதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam