நகைச்சுவை நாயகன் நாகேஷ் >> ஒலியஞ்சலி
படங்கள் உதவி: நன்றி தினமலர்.
|
31.01.2009 அன்று காலை 10 மணியளவில் நமது நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்கள்
அகால மரணம் அடைந்தார். நகைச்சுவை நாயகன் நடித்த படங்களில் இருந்து வசனங்களை
அவர் நடித்த பாடல் காட்சிகளின் பாடல்களையும் சேர்த்து சோகமான ஓர் ஒலியஞ்சலியை நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல்.நாரயாணன் அவர்கள் தொகுத்து வழங்கியது
நாகேஷ் அவர்களூக்கு கோவை பண்பலை நேயர்கள் சார்ப்பாக ஒட்டு மொத்த உணர்வுகளை
ஒன்று திரட்டி ஒலிவடிவமாக ஒலியஞ்சலியாக வழங்கியது தான் இந்த ஒலித்தொகுப்பு. ஒலியஞ்சலியின் இறுதியில் அசரீரி வென்கலகுரலோன் பாடிய ஆடிஅடங்கும் வாழ்க்கையடா திரு.சீர்காழியார் அவர்கள் பாடல் நகைச்சுவையை மிகவும் கேட்டு ரசித்த இசையனபர்களின் கண்களில் தன்னையறியாமல் ஒரு சொட்டு கண்ணீர் எட்டி பார்க்கவேண்டாம். கண்விழிகள் கண்ணீர்ல் மூழ்கினாலே போதும் அவருக்கு நாம் செய்யும் கண்ணீர் அஞ்சலி சமுத்திரம். உடனே இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கி தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்களூக்கும், சூரிய பண்பலை நிறுவனத்தார்ருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு. தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நாகேஷ் அவர்களின் பிரிவால் பிரிந்து வாடும் குடும்பாத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment