Wednesday, February 4, 2009

928 எனது இரவின் மடியில் ஒலித்தொகுப்பு

எனது வானொலி நன்பர்களின் ஒலித்தொகுப்புகள் இந்த தேன்கிண்ணத்தில் பதியும் போது எனது நிகழ்ச்சியான 283 ஆவது வார இரவின் மடியில் ஒலித்தொகுப்பு ஒரு பதிவாக இடம் பெறவில்லையென்றால் எப்படி? (ஹி.. ஹி.. ஹி..) அன்பர்களே மன்னிக்கவும் சும்மா ஜுஜ்லிப்பாவுக்காக சொன்னேன். பல்சுவை, பாடும் நிலா பாலு ஆகிய தளங்களில் கேட்க மறந்த விட்டுப் போன நேயர்களூக்காக மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒலித்தொகுப்பு.

அனங்கன் அங்கஜன் அன்பன் பாடல் இந்த பாடல் இந்த ஒலித்தொகுப்பில் இரண்டாவதாக வரும்

படம்: கண்காட்சி
நடிகர்: சிவக்குமார், பத்மனி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, எல்.ஆர்.ஈஸ்வரி
இயக்குநர்: ஏ.பி.நாகராஜன்
இசை: கே.வி.மகாதேவன்

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம்
வழங்கும் உன் புகழ் சொல்லவா

கதம்பம் சென்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் பெயர் கன்னியே

கதம்பம் சென்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் பெயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா

ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்

குணம்கொள் பெண் அனங்கே உன்
மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொனறாய் சுகம் காணுவோம்

கலந்தன்பின் நலம் காணுவோம்

இணைந்தொனறாய் சுகம் காணுவோம்

மன்னா வா..

கண்ணே வா..

நீ வா.....

வாஆஆஆஆ

அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam