மலேசியப்பதிவர் இனியவள் புனிதா பிறந்தநாளையொட்டி இந்த மெலடிப் பாடல் தேன்கிண்ணத்தில்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புனிதா..
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் பேர் வைக்கட்டுமா ஹோ
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா ( மழை)
நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலையசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட் இசையமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நானிருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் விரைந்து நடக்கும்
இந்த பயணத்தில் ஏன் இந்த நடுக்கம்
வானம் திறக்கும்வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி கலந்தபின்னே அது
மறுபடி இரெண்டென பிரிந்திடுமோ
( மழை நின்ற பின்பும் காதல்)
கண்ணிமைகள் கைதட்டியே
உன்னை மெல்ல
அழைகிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்துக்கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு
(மழை நின்ற பின்பும் காதல்)
திரைப்படம் :ராமன் தேடிய சீதை
பாடியவர் : கல்யாணி
இசையமைத்தவர் : வித்யாசாகர்
Sunday, February 1, 2009
920. மழை நின்ற பின்னும் தூரல் போல ....
பதிந்தவர் MyFriend @ 12:33 AM
வகை கல்யாணி, வித்யாசாகர்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
வாழ்த்துக்கள் புனிதா...
எதிர்பாராத எனக்குப் பிடித்த வாழ்த்துப் பாடல் :-) நன்றி அனு!!
நன்றி முத்துக்கா :-)
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் புனிதா" உங்கள் வாழ்க்கை என்றும் இனிமையாகவே இருக்கட்டும்.
//மிஸஸ்.டவுட் said...
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் புனிதா" உங்கள் வாழ்க்கை என்றும் இனிமையாகவே இருக்கட்டும்.//
நன்றிங்க :-)
அருமையான பாடலுடன் சேர்ந்த வாழ்த்துக்கள் புனிதா..
Post a Comment