Wednesday, August 31, 2011

சின்னப்புறா ஒன்றுசின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உருகும் நிலையை
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளாம்மா
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தே வரும் நாள்வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நானில்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா

சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

படம்: அன்பே சங்கீதா
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

விரும்பி கேட்டவர்: ராஜாராமன்

Tuesday, August 30, 2011

உலகமெல்லாம் உனதல்லவாஉலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i'll be there for you i'll be there for you
i'll be there for you i'll be there for you

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளிக் குதிப்போம்

நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்
i'll be there for you i'll be there for you
i'll be there for you i'll be there for you

இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும்
நனையட்டும் நனையட்டும் நனையட்டும்...........

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i'll be there for you i'll be there for you
i'll be there for you i'll be there for you

இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

Monday, August 29, 2011

நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும்நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும்
நம் வாழ்க்கைப்பாதையில்
என்றென்றும் நிழலை போலே தொடரும்
நம் நட்பின் பெருமைகள்

கண் சிமிட்டி ஒரு ஓரப்பார்வை பார்க்கும்
அந்த விண்மீன் கூட்டம்
கதை கதையாய் சொல்லும்
அதன் காலம் முடியும் வரை
சிறு பிள்ளை சண்டையாய்
சில சமயம் சிலிர்க்கிறோம்
அன்பென்னும் கவசத்தால்
காத்து கொண்டோம் நம் நட்பை

ஒரே பிரசவத்தில் எண்ணற்ற
மலர்களை தந்த
இந்த கல்லூரித்தாயை
நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்

நம் நட்பின் தூரம் அந்த அடிவானம் செல்லும்
நம் நட்பின் தூரம் அந்த அடிவானம் செல்லும்

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: கௌஷிக்
வரிகள்: பிரபா

Sunday, August 28, 2011

தென்மேற்கு பருவக்காற்று - ஏடி கள்ளச்சிஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ

முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக

கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிறுக்கேத்தும் ஆம்பள சொல்லு மறுநாளு மாறிவிடும்
நான் பொம்பள கிறுக்குல வல்ல
என் புத்தியில் வேறொண்ணும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல

நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்

பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்

கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்

நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு
எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு

நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி

படம்: தென்மேற்குப் பருவக்காற்று
இசை: NR ரகுநந்தன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ்,ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

Saturday, August 27, 2011

காஞ்சனா - கொடியவனின் கதையை முடிக்ககொடியவனின் கதையை முடிக்க
குரவளைய தேடிக் கடிக்க
நாறு நாரா ஒடம்பக் கிழிக்க
நடுத்தெருவில் செதர அடிக்க
புழுவ போல நசுக்கி எரிய
புளிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எடுக்க
துள்ள வச்சு உசுர எடுக்க
சந்ததிக்கே அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே......

வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஏ வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறியப் போறா
கதற கதற கதற உந்தன் கத முடிக்கப் போறா
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டாடா.....

சூரக்காத்த போல வர்றாடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்
வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஹேய் ஏ வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

கபால மாலைகள் கழுத்தில் உருள
கண்களை பார்த்தாலே எவனும் மிரள
அகால வேளையில் வேட்டைக்கு வர்றாளே
அதிரி புத்திரி ஆச்சி
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராக்‌ஷஸி
எதிரினில் வந்தாச்சு
கொம்பேறி மூக்கணும், கோதும நாகனும்
கண்ணாடி விரியனும், சாரைப்பாம்பும்
சுருட்டப்பாம்பும் வெள்ளிபோல் வரையனாகனும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசுஞ் சாம்பல் தண்ணி பாம்பும்
குட்டி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீறுதே.......

சூரக்காத்த போல வர்றாடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்
உயிரேடுப்பேன் கத முடிப்பேன் (2)
கருவருப்பேன் நான்

ஹோ.... ஹோ..... ஹோ.....

ஹோ.... ஹோ..... ஹோ.....

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நற நறங்குது
கொத்துற நேரம் வந்தாச்சே
வானமும் பூமியும் நாடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உறுமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே
சித்திரை வெயிலும் கலங்கிப் போகும்
செவக்கும் இவ கண்ணப் பார்த்து
அத்தனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பார்த்து
குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கபோறா
உதவ வேணாம் பயங்கரத்த காட்ட போறான்

படம்: காஞ்சனா
இசை: S தமன்
பாடியவர்கள்: ஸ்ரீராம், MLR கார்த்திகேயன், மாலதி
வரிகள்: விவேகா

Friday, August 26, 2011

ரௌத்திரம் - மாலை மங்கும் நேரம்மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

படம்: ரௌத்திரம்
இசை: பிரகாஷ் நிக்கி
பாடியவர்: ரணினா ரெட்டி
சரிகள்: தாமரை

Thursday, August 25, 2011

ரௌத்திரம் - அடியே உன் கண்கள்அடியே உன் கண்கள் ரெண்டும் Made In Cuba-வா
அதுவே உன் தேசம் என்றால் நான் தான் Castro-வா
அழகே நீ விண்ணில் என்னை ஏற்றும் Nasaa-வா
அடியோடு என்னை சாயத்த Andril பெண்ணே வா
ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க
ஆராய்ச்சி கூடம் போல கண்ணை மாற்றாதே
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே

அடியே உன் கண்கள்......

ஆள் கொள்ளும் சேனை கொண்ட ஆயுதங்கள் ஏந்திக் கொண்ட
ஆரம்பித்த யுத்தம் ஒன்று பின்னால் நின்று தாக்காதே
மாவீரா முன்னால் நின்று உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயம் ஆகிப் போகாதே
மறைவேனா நானே நான் தீயை தின்று வாழும் பச்சி
போடி சும்மா வத்தி குச்சி
விடுவேனா நானே நான் கொஞ்சிக் கொஞ்சிக் கொள்ளும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப் பச்சி
வேட்டைக்காரி காதல் காட்டில் நாளை மீழும் வேங்கை ஆட்சி
பதுங்காமல் என் மீது பாயும் புலி போல ஆகாதே நீயும்
கிளி போல ஆனேனே நானும்
யாழும் வாளும் மோதாமல் மோதும்

அடியே உன் கண்கள் .....

நூற்றாண்டு காலம் முன்பு மூழ்கிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே என்று வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே
ஏகாந்த தீவில் இன்று ஏவாள் போல ஏஞ்சல் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று காற்றும் சொல்லக் கேட்டேனே
அமேசான் காடு நாம் ரெண்டே ரெண்டு பட்டாம் பூச்சி
ஆடிப் பார்ப்போம் கண்ணா மூச்சி
ஆரோவில் வீடு வா தங்கக்கட்டி செங்கல் வச்சி
தங்கும் ஆசை வந்துடுச்சி
நீ நீலக் கண்ணால் பாலம் போட தூக்கம் போயே போச்சு
ஓ விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோட்டம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க

அடியே உன் கண்கள் ........

படம்: ரௌத்திரம்
இசை: பிரகாஷ் நிக்கி
பாடியவர்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்
வரிகள்: லலிதானந்த்

Wednesday, August 24, 2011

தேன் தூங்கும் பூவேதேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே
தேயாமல் வாழ்க
இளமானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு
வருவேன் நானே
(தேன் தூங்கும் பூவே)

பாவேந்தர் பாடிய பாடல்
மகளே வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மலரே உன் பார்வை தானோ (பாவேந்தர்)

நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம் (தேன் தூங்கும் பூவே)

ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக்கூடுமம்மா
நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
(தேன் தூங்கும் பூவே)

திரைப்படம் : கோடைமழை
பாடியவர் : ஜானகி
இசை: இளையராஜா

180 - சந்திக்காத கண்களில்சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்

ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே

ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்

போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ

த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்

படம்: 180
இசை: ஷரத்
பாடியவர்கள்: சித்ரா, சௌம்யா, உன்னி மேனன்
வரிகள்: மதன் கார்க்கி

Tuesday, August 23, 2011

எங்கேயும் எப்போதும் - சொட்ட சொட்டசொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்

கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான்
உன் காதல் உணர வைத்தாய்

ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம்
தடதடதட வென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே ..
பார்க்குதே ..தோற்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள்
நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை
கண்டால் உருகிட வைத்தான் அடி
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னைத்
தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள்
பற்றிக் கொண்டதே கொண்டதே
கொண்டதே... வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: C சத்யா
பாடியவர்கள்: சத்யா, சின்மயி
வரிகள்: நா. முத்துக்குமார்

விரும்பி கேட்டவர்: இளா

மாடு மேய்க்கும் கண்ணே

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறுவன் நரேனுக்கு ( நாகை சிவா - தர்ஷினி அவர்களின் மகன் ) பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

மாடு மேய்க்கும் கண்ணே- நீ
போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே

வேங்கை - காலங்காத்தாலகாலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
ஹும்ம் ஹும்ம் ஹும்ம்
காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே
உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்கையின் வாசலே நீயேதானடி ஹொ ஹோ ஹோ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே

உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது உயிரில் வெடி வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும்பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்
கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடி முல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஹோ ....ஓ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரபோல
என்னப் பாத்தாலே வெட்க்கப்படுறியே பெண்ணே

பழசை மறைக்க நெனைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நானில்லையே
எதற்கு நீ என்னை தவிர்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ...ஹோ...... ஓ...........

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரபோல
என்னப் பாத்தாலே வெட்க்கப்படுறியே பெண்ணே

படம்: வேங்கை
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: விவேகா

Monday, August 22, 2011

யுவன் யுவதி - உள்ளங்கையைஉள்ளங்கையை உதறும்போது கைகள் விலகுமோ
நும்மை காலம் கடந்து போகும்போது காதல் துலையுமோ
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைகாதது..
என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே..
வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றனே..

உள்ளங்கையை உதறும்போது கைகள் விலகுமோ
நும்மை காலம் கடந்து போகும்போது காதல் துலையுமோ..
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைகாதது..

என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே..
வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றனே..
உள்ளங்கையை உதறும்போது கைகள் விலகுமோ
நும்மை காலம் கடந்து போகும்போது காதல் துலையுமோ
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைகாதது..

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்: அண்ணாமலை

Sunday, August 21, 2011

யுவன் யுவதி - உன் கண்ணை பார்த்த பிறகுஉன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு தலைகீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய்
ஹையோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

அடி உன்னை போல பெண்ணை எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை.. ஓ ஹோ ஹோ
உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்
சிலிர்கிறேன் தவிக்கிறேன் என்வசம் நானும் இல்லை.. ஓ ஹோ ஹோ
மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னல் செல்லும்
தடுக்கிறேன் தவிர்கிறேன் இதயமும் கேட்கவில்லை ...ஓ ஹோ ஹோ
நான் இன்று போல என்றும் சொக்கிப்போனதில்லை
இதற்குமுன் எனக்கிந்த பரவசம் பாய்ந்ததில்லை .. ஓ ஹோ ஹோ
நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்..
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்

உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு தலைகீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய்
ஹையோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கார்த்திக், ரம்யா
வரிகள்: பிரியன்

Saturday, August 20, 2011

யுவன் யுவதி - ஓ My Angelஉன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஓ my angel ... ஓ my angel...
ஓ my angel.... ஓ my angel....
ஓ my angel.... ஓ my angel....
ஓ my angel ....ஓ my angel...

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

நீ கண்ணில் விழுந்த நாளில்
என் அமைதி கலைந்ததடி
மனம் கல்லை எறிந்த குளமாய்
அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே
இது காதல் கொடுத்த வலி
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே
நீ என்னைப் பிரிந்த நொடி

ஓ my angel... ஓ my angel....
ஓ my angel... ஓ my angel...
ஓ my angel ...ஓ my angel...
ஓ my angel... ஓ my angel...
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

இந்த உடலைப் பிரிந்து வெளியே
எந்தன் உயிர் தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே
என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்
என் மனம் தினம் சாகுதடி
நரகத்தை போல் என் வாழ்க்கை
உன் ஞாபகம் கொல்லுதடி

ஓ my angel... ஓ my angel...
ஓ my angel... ஓ my angel...
ஓ my angel....ஓ my angel...
ஓ my angel....ஓ my angel...

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி
வரிகள்: அண்ணாமலை

Friday, August 19, 2011

யுவன் யுவதி - மயக்க ஊசிமயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே

மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே

உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே
அணுமின நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே
எதுவும் புரியாமல் என்னை அறியாமல்
உன்னில் காதல் கொண்டேனே
சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே
காலம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே
உலையை களையாமல் வழியை உணராமல்
சுகமாகக் கொன்றாயே
உன்னைக் கண்ட மறு நொடியே
இருதயம் வலப் புறம மாரிடுதே
உன் கை தீண்டும் ஒரு நொடியில்
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே

மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே

தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும்
பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல்
விழி விண்ணைத் தாண்டட்டும்
உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும்
நீயும் சூட பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும்
கடலும் நீயாக புயலும் நானாக
உன்னில் மையல் கொள்ளட்டும்
காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே
இமைகள் தாக்கி இதயங்களே பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே

மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், மதுமிதா
வரிகள்: கலை குமார்

Thursday, August 18, 2011

உன்னைக் காணாமல் நான் ஏது?

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1655'&lang=ta


உன்னைக்காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது (உன்னைக்)

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான் (உன்னைக்)

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக்கரையெல்லாம்
காலடி
கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்
வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்
ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டுகாலம்
இனி எந்நாளும்
பிரிவேது
அன்பே
(உன்னைக்காணாமல்)

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
இது மாறாது
மறையாது
அன்பே
(உன்னைக்காணாமல்)

பாடியவர்கள் : சித்ரா , மனோ
இசை: இளையராஜா
திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

உன் வண்ணம்
உந்தன் எண்ணம்
நெஞ்சின்
இன்பம்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ

பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ

பூமுகம்
என் இதயம் முழுதும்
பூவென
என் நினைவைத்தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும்
நாளும்

( மஞ்சள் வெயில்)
திரைப்படம் : நண்டு
இசை: இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்


தென்மேற்கு பருவக்காற்று - கள்ளிக்காட்டில் பிறந்த தாயேகள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே
என்னை முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா
ஓணான் கரட்டில கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா
கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா
மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை
தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில்லா ஊரில் தாய் இருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா

படம்: தென்மேற்கு பருவக்காற்று
இசை: NR ரஹ்நந்தன்
பாடியவர்: விஜய் பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து

Wednesday, August 17, 2011

மங்காத்தா - விளையாடு மங்காத்தாஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,
விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

மனதினை மாற்றடா.. ஓகே..
மகிழ்ச்சியை ஏற்றடா.. ஓகே..
குறைகளை நிரப்படா.. ஏ ஹே..
தடைகளை தூக்கி போட்டு போடா..

உடலுக்குள் நெருப்படா.. ஒ ஹோ..
உணர்வுகள் கொதிப்படா.. ஹா ஹா..
புதுவிதி எழுதடா .. ஏ ஏ..
புரட்சியை செய்து காட்டவாடா..

ஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,
விடை போட்டு தேடவா..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே.

தீண்டவா.. என்னை தொட்டு தூண்டவா ..
துயர் தன்னை தாண்டவா.. துணை ஆனாய் ஆண்டவா..
மோதவா.. மொழுமோக தூதுவா..
முகம் ஜோதி அல்லவா, மொழி இன்றி சொல்லவா ..

புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொள்ளடா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா ,
நித்தம் வெற்றிதான் என் அன்பா
இது புதுக்குறள் திருக்குறள் தானே ..
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே ..
நீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று ..
போக வேண்டும் மேலே , முன்னேறு ..

காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே
கொடுப்பது தூண்டிலே, ஏஹதோ காவலே ..
சோற்றிலே , காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்,

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

மனிதனை விழிக்க வை .. ஓகே ..
நினைவினை துவைத்து வை .. ஓகே ..
கனவினை ஜெயிக்க வை .. ஓகே ..
கவனத்தை தொழிலில் வைத்து வாடா ..

உறவினை பெருக்கி வை .. ஓகே ..
உயர்வினால் பணிந்து வை .. ஓகே ..
உண்மையை நிலைக்க வை .. ஓகே ..
உலகத்தை திரும்பி பார்க்க வைடா ..

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போடட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ரஞ்சித், சுசித்ரா, அனிதா
வரிகள்: கங்கை அமரன், யுவன், சுசித்ரா

கைஸே கஹூன் குச் கஹே ந ஸகூன்ம்ம்.. ஹோ..ஹோ..கேஸே கஹூன்
குச் கஹே ந ஸகூன்
ஏ ராஸ் பலே தில் மே (கேஸே)

கயே ஃபுலோக் கா ஏ ச்சமன்
கிஸிக்கா கோகயா ஹே மன்


சப்னோ ஜோ பி தேகே
ஸாரே ஹே அனோகே
சப்னே ஜோ பி தேகே
ஸாரே ஹே அனோகே
மில்னு ஹோகயா சப்னோமே
மில்னு க்யூ ந ஹோ துனியா மே
(மில்னு)
ரஹக்கர் ஸாம் நே ஹி
கேஸி ஏ ஜுதாயி
ஏ தில் சனம் ஸே நஜர் மிலாயே

(கேஸே
ஜித்தினி பீ ஹோ ராஹே
மன்ஜில் கோ ஹி ச்சாஹே
சப்கி மன்ஜிலே அப்னி அப்னி
மன்ஜிலோக்கி மன்ஜில் அப்னி(சப்கி)
மன்ஜில் ஜோ ஹே ஜன்னத்
ஜன்னத் ஹே மொஹபத்

மன்ஜில் கி கிஸ்மே ராக் திகாயி

இசை: இளையராஜா
திரைப்படம் : நண்டு
பாடியவர்கள் : புபேந்திரா , ஜானகி

(தவறுகள் இருந்தால் சொல்லவும் திருத்துகிறேன்)

Monday, August 15, 2011

இசைக்கவோ நம் கல்யாண ராகம்இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய்
நாண மேனியில்
கோலம் போடும் போது(இசைக்கவோ)ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதிவலம் போகும் நாளிலே

தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து
நலம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது ரசிக்கவோ ஓநிசநிசக பகபகரிச நிசநிசக
கமகமதமரி ரிககமரிநி
ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச

பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜபல்லவன் நீ
(இசைக்கவோ )

படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: கங்கை அமரன்

Tuesday, August 9, 2011

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா ?
நேற்று நாளை அது பொய்யானதோ ?
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப்போவோமா ?


இன்றென்ன இத்தனை இன்பம் ?
இதயக் கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம்
கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மேலே பூத்திடுதே
வாழ்க்கையைப் பிடிக்கிறதே
(காற்றில் ஈரம்)

ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்
உயிரோடு இருந்தாலும் வாழும்
பயணம் இந்த பயணம்
இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில் நான் வாழும்
நிகழ் காலம் போதும்
நிமிடம் இந்த நிமிடம்
இது உறைந்திட வேண்டும்
மௌனத்தில் சில நேரம்
மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம்
இது என்னவோ புது உலகிங்கே
கண்ணருகில் சில தூரம்
கை அருகில் சில தூரம்
வழித் துணையைக் கேட்கிறதே
வா வா ....

ஓ நம் நெஞ்சத்தின் ஓரம் ஏன்
இங்கு இத்தனை ஈரம் ஓ ?
நம் கண்களில் ஓரம்-வா
புதுக் கனவுகள் நூறு ( ஓடும்??!)
இது என்ன இது என்ன
இந்த நாள் தான் திருநாளா?
இதற்காக இதற்காக
காத்திருந்தோம் வெகு நாளா

இன்றென்ன இத்தனை

காற்றில் ஈரம் .....

இசை : Joshua Sridhar
வரிகள் : Na. Muthukumar
பாடியவர்கள் : Karthik, Sricharan


Thursday, August 4, 2011

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே


ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாகக் கையில் கிடைத்தாள்

ஓ ஓ ....

(ஒரு தேவதை வீசிடும்)

என் வானில் மேகங்கள்
சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை
சந்தோஷம் தூவுதே
நீ தந்தாய் பார்வை
 நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்
மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஓ ....

அவள் மாலையில் மலர்ந்திடும்
மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும் ரசித்திடும்
நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்

ஓ ஓ ......

கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்க ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டுத் தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஓ.....

(ஒரு தேவதைவீசிடும்)


திரைப்படம் : வெப்பம்
பாடியவர்கள் : க்ளிண்டன், ஸ்வேதா
இசை : ஜோஷுவா ஸ்ரீதர்

Tuesday, August 2, 2011

மழை வரும் அறிகுறி

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே  இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கேயெங்கே என்று உன்னை தேடித் தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒ ஒ ஒஒஹோ
அதுவாகவே தானாய் வளர்ந்தது … ஓஒ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ..ஒ ஓ ஓ ஓஹோ 
அட யாரது யாரதை பறித்தது? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் 
ஒ ஒ ஒஒஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஒ
நான் கேட்டது வானவில் மாயங்கள் .ஒ ஓ ஓ ஓஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள் 
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான்

அது உயிருடன் எரிக்குதுடா!   (மழை வரும் அறிகுறி) 

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே  1. Movie: Veppam
     Singer: Suzanne

     Music : Joshua Sridhar 
    Lyrics : Na Muthukumar 

Last 25 songs posted in Thenkinnam