Saturday, August 27, 2011

காஞ்சனா - கொடியவனின் கதையை முடிக்க



கொடியவனின் கதையை முடிக்க
குரவளைய தேடிக் கடிக்க
நாறு நாரா ஒடம்பக் கிழிக்க
நடுத்தெருவில் செதர அடிக்க
புழுவ போல நசுக்கி எரிய
புளிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எடுக்க
துள்ள வச்சு உசுர எடுக்க
சந்ததிக்கே அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே......

வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஏ வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறியப் போறா
கதற கதற கதற உந்தன் கத முடிக்கப் போறா
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டாடா.....

சூரக்காத்த போல வர்றாடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்
வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஹேய் ஏ வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

கபால மாலைகள் கழுத்தில் உருள
கண்களை பார்த்தாலே எவனும் மிரள
அகால வேளையில் வேட்டைக்கு வர்றாளே
அதிரி புத்திரி ஆச்சி
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராக்‌ஷஸி
எதிரினில் வந்தாச்சு
கொம்பேறி மூக்கணும், கோதும நாகனும்
கண்ணாடி விரியனும், சாரைப்பாம்பும்
சுருட்டப்பாம்பும் வெள்ளிபோல் வரையனாகனும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசுஞ் சாம்பல் தண்ணி பாம்பும்
குட்டி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீறுதே.......

சூரக்காத்த போல வர்றாடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்
உயிரேடுப்பேன் கத முடிப்பேன் (2)
கருவருப்பேன் நான்

ஹோ.... ஹோ..... ஹோ.....

ஹோ.... ஹோ..... ஹோ.....

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நற நறங்குது
கொத்துற நேரம் வந்தாச்சே
வானமும் பூமியும் நாடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உறுமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே
சித்திரை வெயிலும் கலங்கிப் போகும்
செவக்கும் இவ கண்ணப் பார்த்து
அத்தனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பார்த்து
குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கபோறா
உதவ வேணாம் பயங்கரத்த காட்ட போறான்

படம்: காஞ்சனா
இசை: S தமன்
பாடியவர்கள்: ஸ்ரீராம், MLR கார்த்திகேயன், மாலதி
வரிகள்: விவேகா

2 Comments:

Anonymous said...

மை ஃப்ரண்ட் சூப்பர் எப்படிம்மா பாடல் வரிகள் கேட்டு எழுத முடிந்தது? அருமை வாழ்த்துக்கள்.

சீனு said...

அட! நானே உங்ககிட்ட கேக்கலாம்னு இருந்தேன்....

Last 25 songs posted in Thenkinnam