Monday, August 15, 2011

இசைக்கவோ நம் கல்யாண ராகம்



இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய்
நாண மேனியில்
கோலம் போடும் போது(இசைக்கவோ)



ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதிவலம் போகும் நாளிலே

தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து
நலம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது ரசிக்கவோ ஓ



நிசநிசக பகபகரிச நிசநிசக
கமகமதமரி ரிககமரிநி
ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச

பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜபல்லவன் நீ
(இசைக்கவோ )

படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: கங்கை அமரன்





2 Comments:

சேக்காளி said...

நல்ல இனிமையான பாடல்.ஆனால் பாடலுக்கு இசையமைத்தவர் கங்கைஅமரன்.இளையராஜா அல்ல.
http://ta.wikipedia.org/wiki/மலர்களே_மலருங்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சேக்காளி.. மாத்திட்டேன்.

Last 25 songs posted in Thenkinnam