Sunday, February 28, 2010

கண்ணுக்கு மை அழகு (பெண்)



கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
(கண்ணுக்கு..)

ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பென்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
(கண்ணுக்கு..)

படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: P சுசீலா

Saturday, February 27, 2010

கண்ணுக்கு மை அழகு (ஆண்)



கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு..)

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
(கண்ணுக்கு..)

விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)

படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன்

Friday, February 26, 2010

கண்ணீரே கண்ணீரே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை ஏலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
(இரு பூக்கள்..)

கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே
தேடித் தெடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
(கண்ணீரே..)

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பென் நெஞ்சே சிறைதானா சரிதானா
பெண் நெஞ்சில் மோகமும் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத் தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போதும்
நம் காதல் அது போல் மீறும்
கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போதும்
நம் காதல் அது போல் மீறும்
(தேடித்..)

கண்ணீரே

பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோட்டு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோட்டு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
(கண்ணீரே..)

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான், அனுபாமா, ஃபெபி மணி, அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து

Thursday, February 25, 2010

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே



என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்ததிந்து போய் விடும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே இந்த பூமியிலே ஒளி கூடிடுவோம்
காதலர் கண்களே சூரியன் சந்திரன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்
(கண்கள் தாண்டி..)

என் உடல் பொருள் தந்தேன் சரன் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீ திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
(என்னுயிரே..)

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

Wednesday, February 24, 2010

ஏதோ நடக்குது எனக்குள்தான்



ஏதோ நடக்குது எனக்குள்தான்
யார்தான் கொடுத்தது இதை இன்பச்சுமைதனை
(ஏதோ..)

மனதினில் புது புது மாற்றம்
ஏனோ இதயத்தின் எதை தனில் ஏற்றம்தான்
கண்ணுக்குள் மின்சாரக் கனவு
தூக்கங்கள் துண்டாகும் இரவு
நீர் மேகம் தூறும்போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
(கண்ணுக்குள்..)

தூரம் நின்றும் உன்னைக்கண்டு
நூரு கிலோ வெட்காம்கொண்டு
திக்கி திக்கி வார்த்தை தொட்டு நின்றேன்

கஷ்டப்பட்டு பாடம் செய்தும்
கண்ணாடி முன் பேசி பார்த்தும்
உந்தன் முன்பு வந்த பின்பு ஊமை ஆகிறேன்

நாணம் பெண்களுக்குள்ளே மயக்கமென்ன
மௌனம் போதும் போதும்
அடி காதல் திறக்கையிலோ ஆணின் மண்டதிலும்
நாணம் போட்டி போடும்

காதல் ஒரு மாயவலை
சிக்கி கொள்ளும் நேரம் வரை
கண்களுக்கு துஞ்சல் இல்லையே

காதல் ஒரு காந்தப்புயல்
யாரும் அதை தள்ளி விட்டு
தப்பி போக வாய்ப்புமில்லையே
(கண்ணுக்குள்..)
(ஏதோ நடக்குது..)

உன்னை எண்ணி உன்னை எண்ணி
உள்ளங்கையில் தேத்துக்கொண்டு
ரேகை எல்லாம் காணவில்லை எண்ணில்
ஆஹா உந்தன் பெயர் சொல்லி சொல்லி
ரெண்டு இதழ் மையதிலும்
சின்ன சின்ன காயம் வர கண்டேன் என்னில்

உன்னை பார்த்த பின்னே
உலக யுத்தம் எந்தன் நெஞ்சில் கொண்டேன்
கண் மூடி திறந்திடும் நேரம்
அதற்க்குள் என் ஜீவன் தேயா கண்டேன்

உன்னை கையில் தூக்கிக்கொண்டு
உச்சு கொட்டி பேசிக்கொண்டு
இஷ்டம் தீர இம்சை பண்ணவா
உந்தன் கண்ணில் ஒட்டிக்கொண்டு
உப்பு மூட்டை கட்டிக்கொண்டு
ஊரை எல்லாம் சுற்றி வரவா
(கண்ணுக்குள்..)
(ஏதோ நடக்குது..)

படம்: பாரிஜாதம்
இசை: தரன்
பாடியவர்கள்:

Tuesday, February 23, 2010

ஆணும் பெண்ணும் அழகு செய்வது



நீண்ட இடைவெளிக்கு பிறகு தேன்கிண்ண பாடல் தொகுப்பு மிகவும் அறிதான பாடல்களை வழக்கம் போதன் இனிய குரலில் தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன். அவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

clik here for download

1.தாயகத்தின் சுதந்திரமே >> 2.ஆணும் பெண்ணும் அழகு செய்வது >> 3.செந்தமிழும் சுவையும்>> 4.ஒதுங்கையிலே?? பூமலர்ந்து >> 5.விஜயமகன் சொல்லப்போறேன்
6.சிரிப்பு பாதி அழுகை பாதி >> 7.கட்டடத்துக்கு >> 8.உணக்கும் ஒன்னு >> 9.நீலவானில் ஒரு வானவில் >> 10.திருப்பதி வெங்கடேசனே >> 11.நீயே உனக்கு என்றும் >> 12.அழகே அமுதே >> 13.சின்ன வயசு சிரிக்கின்ற >> 14.வாங்க வாங்க மாப்பிள்ளை

Get this widget | Track details | eSnips Social DNA

என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே



என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
(என்னமோ..)
யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னைப்போல் எல்லாம் தெரிகிறதே

காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே
காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே
கதவை மூடி வைத்தாப்போதும் ஜன்னல் தட்டியதே
(என்னமோ..)

ஒரு பார்வை..
ஒரு பார்வை..
அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்
மறு பார்வை..
மறு பார்வை..
அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்
அடடா என்னை மாட்டி விட்டாளே
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாளே
தோளோடு ரெக்கை முளைக்குதே
இது மாயம் மந்திரம் இல்லையே
அட காதல் தொல்லை
(என்னமோ..)

முதல் முதலாய்
மெல்ல தயங்கி..
நேற்று பூ கடையில் பூக்கள் வாங்க நின்றேன்
இன்று வளையல் கடை பார்த்து
உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்
என் பேர் என்ன யாரோ என்னை கேட்க
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்
எங்கோ நான் பிறந்து வந்தது
உன்னோடு சேர்ந்து வாழவா
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே
இத காதலாலே
(யார் யாரோ..)
(என்னமோ..)

படம்: சண்டைக்கோழி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷான்

Monday, February 22, 2010

வா வா பூவே வா



வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா
வா வா என்பே வா
என் வாசல் உன்னை தேடும் வா
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா

எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா
மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா
அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா
(வா வா..)

உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை
அதிசய பெண்ணே நீ வா வா வா
உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவிலலி
அருகினில் நீ கொஞ்சம் வா வா வா
உன் புன்னகை அதை காசைப்போல்
நான் சேர்ப்பேனே வா
உன் தோள்களில் தலை சாயவே
நான் பூத்தேனே வா
நீ காதல் வானவில்லாக
அதில் காணும் வண்ணம் நானாக
உன் அழகை பருக அழகே நீ வா
(வா வா..)

தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேறு
மூச்சினில் தீ மூட்டு வா வா வா
வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு
தாமதம் ஆகாது வா வா வா
நீ வேண்டவும் விரல் தூண்டவும்
ஒரு பூவானேன் வா
உன் மடியிலே நான் இரவிலே கண் மூடவா
உன் தோள்கள் ரெண்டும் கிளையாக
நான் பஞ்ச வர்ண கிளியாக
சுக கதைகள் சொல்ல அருகே நீ வா
(வா வா..)

படம்: ரிஷி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், S ஜானகி

ஆடாமல் ஆடுகிறேன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆடாமல் ஆடுகிறேன்

ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னை பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்ப்பெண்ணின் கண்ணீரை யார் தேற்றுவார்
எறிகின்ற நெஞ்சைத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

Sunday, February 21, 2010

ஏ நெஞ்சே என் நெஞ்சே



படப்பட படவென அடிக்குது இதயம்
தடத்தட தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழழுது விழிகள்

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா எனவே எனவே
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹேஹேஹே காதல் ஒரு காந்தம்
எனக் கண்டேன் நான்
ம் ம் ம் ஈர்க்கும் அந்த திசைகள்
என்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
செல்லென்று மலரை தொடுதே

என் நிலவில் மாற்றம்
எதிலும் தடுமாற்றம்
பார்வை பறிமாற்றம்
ஒரு ஆனந்த ஏக்கம்

கண்ணை விட்டு வெளியே
காணும் ஒரு கனவே
வரண்டு இழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

வெகு நேரம் பேசிய பின்பு
விலை பெற்று போகும் நேரம்
நாள் அடிக்கும் நடக்கும் கால்கள்
நடை மறந்து திரும்பும் ஏனோ

பேசாத நேரம்தானே
பெரிதாக தோணும் அன்பே
காலங்கள் தோற்கும் இங்கே

நேற்று வரும் கனவில்
நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை
இனி நான் என்று பார்ப்பேன்

காதல் வரும்போது
கனவுகளும் மாறும்
நீ விரும்பும் நிலவை
இனி தினந்தோறும் பார்ப்பாய்

யார் யாரோ எழுதி சென்ற
புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் நின்று

நான் பார்த்த மரமும் இலையும்
புது போர்வை போர்த்திக்கொண்டு
புது பார்வை பார்த்திக்கொண்டு
நம்மை பார்த்து சிரிக்கின்றதே

படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம்
வரிகள்: பா.விஜய்

Saturday, February 20, 2010

வா வா அன்பே அன்பே




வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)


படம் : அக்னி நட்சித்திரம் (1988)
இசை : இளையராஜா
பாடல் :
பாடியவர்கள்: யேசுதாஸ், சித்ரா

ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே



செஞ்ஞோரித்தா செஞ்ஞோரித்தா
செஞ்ஞோரித்தா செஞ்ஞோரித்தா
செஞ்ஞோரித்தா செஞ்ஞோரித்தா

ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
ஓ செஞ்ஞோரித்தா யே யே

மஞ்சள் நிற மலர் உன்னை நனைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை
மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ
(அடடா..)
(ஓ செஞ்ஞோரித்தா..)

அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றதே
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே
சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேறும்
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
பெண்ணேல்லாம் பெண் போல இருக்க
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே
(அடடா..)
(ஓ செஞ்ஞோரித்தா..)

ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
பெண்ணே எந்தன் வானிலே உன்னால் மாறி போனதோ
தரை கீழாக ஏன் ஆனதோ
தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து
அறியாத மாயங்கள் செய்தாய் ஏனடி
(ஓ செஞ்ஞோரித்தா..)

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

Friday, February 19, 2010

வாழ்க்கை - வாழ்க்கையே உன் கையில் நான் அன்றே கொடுத்தேன்



வாழ்க்கையே உன் கையில்
நான் அன்றே கொடுத்தேன்
என் வாழ்க்கையே அது உன் கையில்
அதை நான் அன்றே கொடுத்தேன்

அன்று பார்த்த போது உன் முகம்
என் இதயம் தொலைந்தது உன் இடம்
நான் இழந்தது என் இதயம் மட்டும் இல்லையே
அங்கு தொலைந்தது என் துயரம் என்று தெரிந்ததே
என் உயிரின் மூச்சு உன்னிடம்
அதை ஈர்த்து கொண்டது உன் மனம்
இன்பம் சூழ்ந்தது என் வாழ்க்கையில் அவை இன்பமே இன்பமே

வாழ்க்கையே உன் கையில்
நான் அன்றே கொடுத்தேன்
என் வாழ்க்கையே அது உன் கையில்
அதை நான் அன்றே கொடுத்தேன்
இனி வேறென்ன தேவையோ
உன் தேவை அறிந்து கொடுத்தேன்
உன் வாழ்க்கையில் ஒளி வீசவே
நான் எதையும் உனக்கு தருவேன்

இன்று வந்தது அந்த ஞாபகம்
அந்த நினைவுகள் இனி நம்மிடம்
நாம் பகிர்ந்து கொண்டோம் வாழ்க்கையை ஒன்றாகவே
இனி துயரங்கள் ஏதும் இல்லை என்று தெரிந்தது
வரும் காலம் ஒன்றாய் மகிழ்வோம்
நம் இரு மனம் புரியும் திருமணம்
நாம் புரிந்துக்கொண்டு வாழ்வது என்றும் உருதியே
இனி முடிவு வரை நம் வாழ்க்கையில்
என்றும் இனிமையே இனிமையே
(வாழ்க்கையே..)

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

வாழ்க்கையே உன் கையில்
நான் அன்றே கொடுத்தேன்
என் வாழ்க்கையே அது உன் கையில்
அதை நான் அன்றே கொடுத்தேன்

ஆல்பம்: வாழ்க்கை
இசை: நக்கீரன்
பாடியவர்: நக்கீரன்
வரிகள்: நக்கீரன், கீரவாணி

Thursday, February 18, 2010

மீண்டும் மீண்டும் ஓயாமல்



மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கண்ட வேதம்
பனிப்பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உரையுதடி
இதற்கு மேலாக ஆசைகள் வந்து கவிதையில் சேறுதடி
என் கவிதையில் சேறுதடி
(மீண்டும்..)

உண்மை காதல் மறையாது
பாதை கூட தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக
தெய்வீகமே இந்த காதல்
தாயை போலே நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)

மின்னல் ஒன்று கரை வீச நெஞ்சம் ஒன்றூ குடை சாய
மின்னல் நீயே நெஞ்சம் நானே
தென்றல் வந்து முத்தம் இட
கோர தீயும் பூவாய் மாற
தீயும் நானே தென்றல் நீயே
ஆசை எல்லாம் நான் அள்ளிக்கொண்டு
வந்தேண் வந்தேண் உந்தன் வாசல்
புயலென்ன மழை என்னவோ கடந்திட வேண்டாமா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)

ஆல்பம்: மீண்டும் மீண்டும்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன், கார்த்திக்

Wednesday, February 17, 2010

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே
(கனவெல்லாம்..)

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எதை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
(கனவெல்லாம்..)

தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித்திருந்தேண்
இணைப்பிரியாத நிலைப்பெறவே நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகம் தினம் தினம்
(கனவெல்லாம்..)

ஆல்பம்: கனவெல்லாம்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன்
வரிகள்: திலீப் வர்மன்

Tuesday, February 16, 2010

என்னவளே என்னை மறந்தது ஏனோ



என்னவளே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தானோ
என்னை சிதைத்தவள் நீ
பின்பு அணைத்தவள் நீ
இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

கண்கள் ரெண்டு ஆன போதும் காட்சிகள் ஒன்றல்லோ
இது புரிந்தும் கொஞ்சம் புரியாமல் நீ கேட்பது முறையல்லோ
காற்று போகும் திசையில் அலைகள் போகுதே
உன் உயிர் போகும் திசையில் என் உயிர் போகுதே
(என்னவளே..)

நான் செல்லும் பாதை முள் மீது போகும் என்றால்
என்றென்றும் அன்பே கரம் கோர்க்க நீயும் வந்தால்
நானும் வந்தால்
நிம்மதி நீளும்
இல்லை என்றால்
ஜீவன் வாழும்
அன்பே என் ஜீவன் உந்தன் கண்ணில்
ஏன் இன்னும் தாபம் உந்தன் நெஞ்சில்
என் கண்ணில் ஏக்கம்
நெஞ்சம் ஈர்க்கும்
நீதான் என்றும்
உந்தன் சொந்தம்
(என்னவளே..)

பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்
ஓ விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்
நானே என்றால்
மனம் வானம் செல்லும்
சென்ற பின்னால்
மழை சாரல் தூவும்
ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்
ஏதோ ஒரு மாயம் உந்தன் கண்ணில்
மனம் தேடும் உன்னை
இங்கு தந்தேன் என்னை
நீங்காதென்னை
இல்லை இல்லை
(என்னவளே..)

ஆல்பம்: என்னவளே
இசை: திலீப் வர்மன்
பாடியவர்கள்: திலீப் வர்மன், திலா

Monday, February 15, 2010

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்



சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேந்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இலையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான்
நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்சி இல்ல
பாடம்படி பவள கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையல்லையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை எனும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடையே பிழை இல்லையே
துன்பமென்ற சிற்பிக்குள்தான் இன்பமென்று முத்து வரும்
துன்பத்தின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டிக்கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முல்லுக்கு நன்றி சொல்
(சந்தோஷம்..)

படம்: யூத்
இசை: மணிஷர்மா
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்

Sunday, February 14, 2010

அறியாத வயசு புரியாத மனசு



அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே

வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்
ஓஹோ
(அறியாத வயசு..)

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்தபாலையே காம்பில் புகுத்திட
கணக்குப் போடுதே ரெண்டுந்தான்
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது
ஊரையும் ஒறவயும் மறந்து
நடுக்காட்டுல நடக்குது விருந்து
நத்தைக்கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல
(அறியாத வயசு..)

படம்: பருத்திவீரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

Saturday, February 13, 2010

காதலுக்கு கண்கள் இல்லை



காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதல் பூவே சுத்தாதென்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ம்ம்ம்....
லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
பீச்சில் வந்து சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்றேன் நானே
ஒ ஒ ஒ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கொஞ்சம் மாறுதோ
ஒ ஒ ஒ எந்தன் நாள் முதல் என் காதல் அவள் ராகத்தில்
(காதலுக்கு...)

அப்பன் காசெல்லாம் செல் போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அழைந்தேன் நானே
நானும் இன்று கியூவில் நின்று
இதயத்தை பலி கொடுத்தேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு..)

ஓ கண்ணில் நுழைவாளாம் நெஞ்சில் நுழைவாளாம்
ஏண்டா இந்த பிள்ளர் எந்து கூலா கேட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்...
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசை பட்டேனே
ஆனா இப்போ ம்ம்ம்,,,
ஓடி பொய்கள் கட்டிய முட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக
மெய்யினில் உணர்ந்து கொண்டேனே
(ஒ ஒ ஒ...)
(காதலுக்கு...)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்

Friday, February 12, 2010

தம்பிக்கு இந்த ஊரு - ஒரே மின்சாரம்



ஒரே மின்சாரம் தாக்கு தாக்குதே
ஐயோ என் இளமை பூக்கு பூக்குதே

ஒரே மின்சாரம் தாக்கு தாக்குதே
ஐயோ என் இளமை பூக்கு பூக்குதே
மனம் குற்றாலமே தினம் தினம் கூத்தாடுமே
மனம் குற்றாலமே தினம் தினம் கூத்தாடுமே

யாரோ யார் அவளோ
காதலி காதல் மோகக் குயிலே
துளைக்குதே
பார்வை ஆணவமா
பார்வையில் பாயும்
ராகந்தமா
வலிக்குதே

படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்
பாடியவர்: பென்னி தயால்

Thursday, February 11, 2010

தம்பிக்கு இந்த ஊரு - இன்று நான் தனி ஆள்



இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் எனை நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே
(இன்று..)
தாய் முகத்தை இனி நான் என்று பார்த்தேனோ
தாய் மடியில் ஒரு தாலாட்டை கேட்பேனோ
(இன்று..)

முதல் முதல் பேசிய அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இன்றி வாழுகின்ற வாழ்க்கை ஏனோ ஏனோ
நேற்று வரை ஆனந்தம் இன்று முதல் தீப்பந்தம்
தொப்புள் கொடி என்னை விட்டு போனது எங்கே எங்கே
தண்ணீரில் நீந்தும் மீன் போல வாந்தேன்
கண்ணீரில் இன்று நானும் விழுந்தேனே
அம்மாவின் முத்தம் வாங்காத பிள்ளை நான் மட்டும் தானா
ஏன் பிறந்தேனோ..
(இன்று..)

தாயை காண வழி இல்லை தாலாட்டைப்போல் மொழி இல்லை
ரத்தம் எல்லாம் கண்ணீர் துளி ஆனதென்ன என்ன
பட்டாம்பூச்சி தலை மீது பாராங்கல்லை சுமந்தேனே
கண்ணீர் மழை தீக்குச்சியை பற்ற வைத்தார் யாரோ
ரெக்கைகள் இல்லா வண்ணத்துபூச்சி வானத்தை பார்த்து ஏங்குதம்மா
பூக்கள் கீழே விழுந்தால் பூமாலை ஆகும்
வாழ்க்கை கீழ் வீழ்ந்தால் வழி என்னவோ
(இன்று..)

படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்
பாடியவர்: நரேஷ் ஐயர்

Wednesday, February 10, 2010

தம்பிக்கு இந்த ஊரு - யாரடி நீ யாரடி



யாரடி நீ யாரடி
சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

உன் விழி என் விழி இணைய வேண்டுமே
கைகளில் காதலை வழங்க வேண்டுமே
வரண்டு கிடக்கும் இவன் நெஞ்சிலே
துளி நீர் தெளி
ஈரங்கள் சுமந்து வரும் வான்வெளி
என் காதலி என் காதலி
போனதே உயிர் போனதே

உன் முகம் பார்த்து நான் சிவந்து போகிறேன்
உன் விழி பார்த்து நான் மயக்கம் ஆகிறேன்
மழையும் வெயிலும் இவன் கண்களில்
தினம் பார்க்கிறேன்
புயலும் இசையும் இவன் மூச்சிலே
உண்டானதில் திண்டாடுறேன்
(யாரடி..)

படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்

Tuesday, February 9, 2010

தம்பிக்கு இந்த ஊரு - முதல் பெண் நீயே



முதல் பெண் நீயே
பார்த்தவுடன் கண் தான
செய்துவிட்டேன் அதன் பெயர்தான்
காதல் காதல்
இவள் தென்ப்பட்டால்
புன்னகையால் புண்பட்டேன்
என்னை நானே கைவிட்டேன்
ஏனோ ஏனோ
விண்மீன் மழைத்துளியாய்
என் மேல் பொழிந்தவளே
நெஞ்சம் மிதந்தேனே
உன்னாலே நானே

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
(முதல் பெண்..)

நீங்காதே எனை நீங்காதே
வாங்காதே உயிரை வாங்காதே
இந்த காதல் வந்தால் காகித பூவில் கூட
வண்டுகள் மொய்க்கும் மொய்க்கும்
கண்களில் தீயை வைகும்
ஒரு மழை மேகத்தில்
தூங்கிய தண்ணீரை போல்
நெஞ்சுக்குள் தேங்கி இரு
என் காதல் தாகம் தீரு

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
(முதல் பெண்..)

உன் முத்தம் என் உணவாகும்
உன் கண்கள் என் கனவாகும்
எந்தன் கோபம் யாவும்
உன்னை பார்த்தால் தீரும்
நாட்குறிப்பெல்லாம் உந்தன்
ஞாபகம் காதல் கீதம்
ஒரு உயிர் போலவே
உன்னை பூட்டிவைப்பேன்
நெஞ்சில் வாழ்ந்துவிடு
நான் உந்தன் சொந்த வீடு ஓஹோ..
(முதல் பெண்..)

உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே

படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்
பாடியவர்கள்: ஜாவேட் அலி, சிந்து

Monday, February 8, 2010

ஒரு புன்னகை பூவே



ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம்
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ
சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
ஓடாதம்மா வீழாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சூதாதம்மா ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும்
நான்கு சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு
என்பது ஆண்டுகள் இளமையும் வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா

அட வெள்ளை வெள்ளையாய்
ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே
இரு நிலவு வேண்டுமா
உன்னை காலை மாலையும்
சுற்றி வருவது காதல் செய்யவே
லவ் பண்ணு ஐயோ பண்ணு

நீ கெஞ்சி கேட்கும் நேரம்
என் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ

படம்: 12 பி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கேகே
வரிகள்: வைரமுத்து

Sunday, February 7, 2010

ஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆசதான்



உன் மேல ஆசதான்
ஆனது ஆகட்டும் Say it to me baby
போனது போகட்டும் Do it to me baby
இது கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவன் One more time yeah
கிடைத்ததை எடுப்பவன் Do it to me baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
(உன் மேல..)

என் எதிர ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்விதாம்ப்பா
துடிப்பான காலணிப்பா
கடல் ஏறும் கப்பலப்பா
கர தட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலையும் சாயும்
நடு சாமம் நிலவும் காயும்
நேசம் நாணம் தேகம் பேய் குளித்து
தூசி போலே தொலைவீர்கள்

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோசா
பட்டுக்கிட்டு ஒட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் புரண்டு
ஈசன் போலே அலைவீர்கள்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
Oh Boy Boy Boy

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், அண்ரியா

Saturday, February 6, 2010

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்



அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

Friday, February 5, 2010

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
(என் கல்யாண..)

மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிர் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...
(என் கல்யாண..)

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்
(என் கல்யாண..)

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: வானி ஜெயராம்
வரிகள்: வாலி

Thursday, February 4, 2010

காத்திருப்பான் கமலக் கண்ணன்



வி.எஸ்.ராகவன் ஐயா அவர்கள் சிறப்பான குணச்சித்திர நடிகர் இவரின் பழைய படங்களில் அப்பா பாத்திரத்தில் மிகவும் மிடுக்குடன் அபாரமாக நடிப்பவர். அப்பா கேரக்டர்களில் மேஜர் சுந்தரராஜன் அவர்களூக்கு அடுத்தது வி.எஸ்.ராகவன் ஐயா அவர்களின் நடிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற தொடரில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மிக ஆவலுடன் பார்த்தேன். அந்த அனைத்து தொடர்களீலும் அசத்தப்போவது யாரு கலைஞர்கள் இவரை குரலை பேசாதவர்களே இருக்க மாட்டார்கள் ஒவ்வொரு வாரமும் எப்படியோ இவர் குரல் மிமிக்ரி செய்வார்கள். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசும் குரலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை இப்படியா நான் பேசுகிறேன் என்று நடுவர்களிடமே கேட்டதும் நடுவரில் ஒருவர் நடிகர் சிட்டி பாபு இவரை செமத்தியாக கலாய்த்தது தான் நிகழ்ச்சியின் உச்சகட்டம் சளைக்காமல் ஐயாவும் திரும்பவும் பதில் தந்தது பாப்பவர்களூக்கு நல்ல தொரு விருந்தாக இருந்தது. இங்கே இதைப்பற்றி எழுத தேவையில்லை தான். இந்த ஒலித்தொகுப்பு கேட்கும் போது அந்த நிகழ்ச்சியின் நினைவுகள் வந்தன தங்களூடன் பகிர்ந்து கொள்கிறேன். திரைபடத்துடன் தனக்கு இருந்த தொடர்புகளை மிகவும் ஸ்வாரசியமாக வழங்கியிருக்கிறார் திரு.வி.எஸ்.ராகவன் ஐயா அவர்கள். அவர் நீடுழி பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி இந்த ஒலித்தொகுப்பை ஒலிப்பரப்பிய அறிவிப்பாளர் திரு.பால்ராஜ் அவர்களுக்கு தேன் கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொகுப்பில் இறுதியில் சில பாடல்கள் ஒலிப்பரப்பு சரியா வரதாதல் சுமாராக இருக்கும் தயவுசெய்து பொறுத்து கொள்ளுங்கள் தகவல்களுக்காக பாடலை எடுக்க முடியவில்லை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.தைப்பொறந்தால் வழி பிறக்கும்
2.நிலவை பார்த்து வானம் சொன்னது
3.புன்னகை மண்ணன் பூவிழிக்கண்ணன்
4.பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
5.பார்த்தேன் சிரித்தேன்
6.வாடிக்கை மறந்ததும் ஏனோ
7.காத்திருப்பான் கமலக் கண்ணன்
8.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

for down load clik here

Get this widget | Track details | eSnips Social DNA

ஆயிரத்தில் ஒருவன் - ஓ ஈசா என் ஈசா



உள்ளே தேட தேட
Baby close your eyes
உள்ளம் கொண்டாடுதே
வில்லாய் அங்கே நீதான்
Baby come to me
அம்பும் தள்ளாடுதே
Tonight is ours
We're under the stars
We're dancing with the spirits
while playing
You and me

ஓ..
ஓ ஈசா என் ஈசா
சாம்பை தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
ஜாதகம் பார்க்க வா ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்பத் தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
You are welcome be my true ஈசா

Yeah Baby
Come and get so close to me
That can feel the heat my baby
Wanna make with you all night
Making me go aww so crazy

Say what
Say what
Say what

குடியே குடியே
Oh my dream
Love it..

Give me the love
Give me the love
Give me the love
Give me the love

நீ தலைவன் முதல்வன்
விளையாடும் கலைமகன்
ஓர் கலைஞன் இளைஞன்
எழுதாதப்பா

Oh I can feel it
I can taste it
I can see that you are so afraid
I am th one now
The fun now
Then end up high

நான் போடும் வேஷம் பார்த்து சிரிக்காதே
என்னுள்ளே விழம் தோண்டி குடிக்காதே

ஓ ஈசா என் ஈசா
சாம்பை தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
ஜாதகம் பார்க்க வா ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்பத் தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
You are welcome be my true ஈசா

Love you violate my space
Don't push me push me
I'm the name witouot a place
From the skies I watch you come
Oh didnt they teach you
Pride always comes before a fall

நான் படைப்பேன் உடைப்பேன்
உன் போலே தொண்டு செய்வேன்
நான் எடுப்பேன் கொடுப்பேன்
நாம் தடுத்தோம் பதித்தோம்
தி தித் தோம்
தித் தோம் தத் தோம்
தோம் த தத் தோம்
தத்தி தோம்
தத்தி தோம் த தோம்

ஒரு நாளில் என்னுள் அடங்கும் தோசை
நீ உன்னை கொன்று என்னை யாசி

கோவிந்தா கோவிந்தா
Take me higher கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Feed my fire கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Take me closer கோவிந்தா
கோஓவிந்தா கோவிந்தா
Take this number கோவிந்தா

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: கார்த்திக், அண்ரியா

Wednesday, February 3, 2010

பார்வை தேரில் போகும்



பார்வை தேரில் போகும் பாவை
வானோடு தான் சேர்ந்து வேடத்தில் நீராடும்
பால் நிலவாய் வாராளோ
பாயும் ஒளி தாராளோ
நீரும் நீளும் காணும் காதல்
தானும் காற்றில் தானே வேண்டும்
(பார்வை..)

வழியும் நாணத்தை எழிலோ தாலாட்டும்
கேளாய் பேசும் போது
பெண்மை காணாதோ பெருமை தான் காணும்
வாழ்த்த வார்த்தை ஏது
விரியும் விரியும் விழி மலர் புரியும் புரியும்
புன்னகை அள்ளும் அள்ளும்
நினைவினில் மனமும் செல்லும் என்றென்றும்
(பார்வை..)

வசந்த பூங்காற்றை இழுக்கும் நாடெல்லாம்
வாழ்ந்து பூங்கா தேடும்
நினைக்கும் காலத்தை இணைக்கும் நாளோடு
ஆசை மோத ஓடும்
துணிவு துணிவு மனம் தர
கனவு கனவு வழி தர
நினைவு நினைவு கிடைத்தது
இன்பம் இன்பம்
(பார்வை..)

பாடல்: பார்வை தேரில் போகும் பார்வை
படம்: ஹேமாவின் காதலன்
நடிகர்கள்: விஜயமோகன், அனுராதா, டெல்லி கனேஷ், சபிதா ஆனந்த்
இசை:ரவீந்திரன்
பாடலாசிரியர்:கவின் முகில்

பாடல் உதவி கோவை கோபாலகிருஷ்னன், பாடல் வரிகள் உதவி தேன் கிண்ணம் சக பதிவாளினி மைப்ரண்ட் இருவருக்கும் நன்றி.

முந்தினம் பார்த்தேனே - மாயா நீ மாயா



தேடித் தேடியே மின்னல்
உள் நெஞ்சில் பாய்கிறதே
ஓடும் காலமே சட்டென
எனை நின்றுப் பார்க்கிறதே
சுற்றும் பூமியே என்னை
ஒரு வட்டம் இடுகிறதே
உனை பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா நீ மாயா தீ வைத்தாயா
மாயா இல்லை மெய்யா உன் அனலாலே
சரிகம எனை தகித்தாயே
உன் நினைவாலே மனதினில் பனி பொழிந்தாயே
பார்வையாலே காயம் ஆனேன்
மூங்கில் பாட்டானேன்
மாயா ஆடிப் பாடி வரும் வன்முறையா நீ
 மாயா பிஞ்சு குழந்தையின் முதல் சிரிப்பாநீ

நா னா
மெல்ல மெல்ல கொல்லும் வஞ்சகமா – நீ
கேட்டு விட்டு சென்ற விடுகதையா – நீ

நா னா

சத்தம் இன்றி நானா உள்ளம் கலைந்தேனா
உன்னில் கனிந்தேனா சித்தம் சிதைத்தேனா
எங்கும் நிறைந்தேனா
கோடி சூரியனை போல் நெஞ்சில் உதித்தாய்
கொஞ்சும் வெண்ணிலவைப் போல் என்னில் மலர்ந்தாய்
(பார்வையாலே..)
ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதோ
உனை விட்டுச் செல்கிறதோ
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதோ

நம்மை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதா
மௌனமாக உன் இதயம்
உனை விட்டுச் செல்கிறதா
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதா
நம்மை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா
உயிர் என்பாயா
உறவென்பாயா
காத்திருந்தாயா
ஓ..

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஜனனி
வரிகள்: ரோகிணி

Tuesday, February 2, 2010

முந்தினம் பார்த்தேனே - மனதின் அடியில் மழை தூரல்

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் அவ்ரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எறியும்
தீம் தனனன தீம் தனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனன
மனம் தெரிந்தே பறிப்போம்
சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும்
(மனதின்..)

பார்வைகளின் ஆழத்திலே
உள்ளம் கொஞ்சம் முழிப்போகும்
வார்த்தைகளின் வாசத்திலே
மௌனம் இதழ் பூக்கும்
மகரந்த வெயில் வழிகின்ற மஞ்சள்
தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இதுதானா

ஏதோ ஒன்று உள்ளே நின்று
உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும்
தொலைந்தாய் தேடி சென்று
இருப்பதை தொலைக்கும்
உயிர்வரை ஒரு வலி வந்து தீண்டும்
பலமுறை அது வரையறை தாண்டும்
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா
ஓஹோ..
(மனதின்..)

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்: பிரியதர்ஷினி
வரிகள்: பிரியன்

Monday, February 1, 2010

முந்தினம் பார்த்தேனே - பேசும் பூவே



பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

என் உயிரும் பூத்ததே உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?

காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தேனே

I like your eyes
I like your smile
The way you talk
You are so inviting

மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்
முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரமெந்திரம் போல ஆனேனே
அன்பே உன் சொற்களா
உன் மௌனமா உன் மென்மையா
உன் உண்மையா உன் உள்ளமா
உன் கள்ளமா உன் வீரம்தான் எனை கொன்றதா
உன் மீசையா உன் தோள்களா
உன் தோற்றமா உன் பார்வையா உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான் எனை தின்றதா

என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே
(பெண்ணே..)

பேசும் பூவே
The way you talk
You ar so inviting

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா
வரிகள்: விவேகா

Last 25 songs posted in Thenkinnam