Sunday, February 21, 2010

ஏ நெஞ்சே என் நெஞ்சே



படப்பட படவென அடிக்குது இதயம்
தடத்தட தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழழுது விழிகள்

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா எனவே எனவே
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹேஹேஹே காதல் ஒரு காந்தம்
எனக் கண்டேன் நான்
ம் ம் ம் ஈர்க்கும் அந்த திசைகள்
என்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
செல்லென்று மலரை தொடுதே

என் நிலவில் மாற்றம்
எதிலும் தடுமாற்றம்
பார்வை பறிமாற்றம்
ஒரு ஆனந்த ஏக்கம்

கண்ணை விட்டு வெளியே
காணும் ஒரு கனவே
வரண்டு இழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

வெகு நேரம் பேசிய பின்பு
விலை பெற்று போகும் நேரம்
நாள் அடிக்கும் நடக்கும் கால்கள்
நடை மறந்து திரும்பும் ஏனோ

பேசாத நேரம்தானே
பெரிதாக தோணும் அன்பே
காலங்கள் தோற்கும் இங்கே

நேற்று வரும் கனவில்
நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை
இனி நான் என்று பார்ப்பேன்

காதல் வரும்போது
கனவுகளும் மாறும்
நீ விரும்பும் நிலவை
இனி தினந்தோறும் பார்ப்பாய்

யார் யாரோ எழுதி சென்ற
புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் நின்று

நான் பார்த்த மரமும் இலையும்
புது போர்வை போர்த்திக்கொண்டு
புது பார்வை பார்த்திக்கொண்டு
நம்மை பார்த்து சிரிக்கின்றதே

படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம்
வரிகள்: பா.விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam