Tuesday, February 16, 2010

என்னவளே என்னை மறந்தது ஏனோ



என்னவளே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தானோ
என்னை சிதைத்தவள் நீ
பின்பு அணைத்தவள் நீ
இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

கண்கள் ரெண்டு ஆன போதும் காட்சிகள் ஒன்றல்லோ
இது புரிந்தும் கொஞ்சம் புரியாமல் நீ கேட்பது முறையல்லோ
காற்று போகும் திசையில் அலைகள் போகுதே
உன் உயிர் போகும் திசையில் என் உயிர் போகுதே
(என்னவளே..)

நான் செல்லும் பாதை முள் மீது போகும் என்றால்
என்றென்றும் அன்பே கரம் கோர்க்க நீயும் வந்தால்
நானும் வந்தால்
நிம்மதி நீளும்
இல்லை என்றால்
ஜீவன் வாழும்
அன்பே என் ஜீவன் உந்தன் கண்ணில்
ஏன் இன்னும் தாபம் உந்தன் நெஞ்சில்
என் கண்ணில் ஏக்கம்
நெஞ்சம் ஈர்க்கும்
நீதான் என்றும்
உந்தன் சொந்தம்
(என்னவளே..)

பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்
ஓ விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்
நானே என்றால்
மனம் வானம் செல்லும்
சென்ற பின்னால்
மழை சாரல் தூவும்
ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்
ஏதோ ஒரு மாயம் உந்தன் கண்ணில்
மனம் தேடும் உன்னை
இங்கு தந்தேன் என்னை
நீங்காதென்னை
இல்லை இல்லை
(என்னவளே..)

ஆல்பம்: என்னவளே
இசை: திலீப் வர்மன்
பாடியவர்கள்: திலீப் வர்மன், திலா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam