Friday, February 19, 2010

வாழ்க்கை - வாழ்க்கையே உன் கையில் நான் அன்றே கொடுத்தேன்



வாழ்க்கையே உன் கையில்
நான் அன்றே கொடுத்தேன்
என் வாழ்க்கையே அது உன் கையில்
அதை நான் அன்றே கொடுத்தேன்

அன்று பார்த்த போது உன் முகம்
என் இதயம் தொலைந்தது உன் இடம்
நான் இழந்தது என் இதயம் மட்டும் இல்லையே
அங்கு தொலைந்தது என் துயரம் என்று தெரிந்ததே
என் உயிரின் மூச்சு உன்னிடம்
அதை ஈர்த்து கொண்டது உன் மனம்
இன்பம் சூழ்ந்தது என் வாழ்க்கையில் அவை இன்பமே இன்பமே

வாழ்க்கையே உன் கையில்
நான் அன்றே கொடுத்தேன்
என் வாழ்க்கையே அது உன் கையில்
அதை நான் அன்றே கொடுத்தேன்
இனி வேறென்ன தேவையோ
உன் தேவை அறிந்து கொடுத்தேன்
உன் வாழ்க்கையில் ஒளி வீசவே
நான் எதையும் உனக்கு தருவேன்

இன்று வந்தது அந்த ஞாபகம்
அந்த நினைவுகள் இனி நம்மிடம்
நாம் பகிர்ந்து கொண்டோம் வாழ்க்கையை ஒன்றாகவே
இனி துயரங்கள் ஏதும் இல்லை என்று தெரிந்தது
வரும் காலம் ஒன்றாய் மகிழ்வோம்
நம் இரு மனம் புரியும் திருமணம்
நாம் புரிந்துக்கொண்டு வாழ்வது என்றும் உருதியே
இனி முடிவு வரை நம் வாழ்க்கையில்
என்றும் இனிமையே இனிமையே
(வாழ்க்கையே..)

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

வாழ்க்கையே உன் கையில்
நான் அன்றே கொடுத்தேன்
என் வாழ்க்கையே அது உன் கையில்
அதை நான் அன்றே கொடுத்தேன்

ஆல்பம்: வாழ்க்கை
இசை: நக்கீரன்
பாடியவர்: நக்கீரன்
வரிகள்: நக்கீரன், கீரவாணி

9 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்றும் இனிமையே இனிமையே//

வாழ்த்துக்கள் மை ப்ரண்ட்.தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்..:)

Thamiz Priyan said...

டைமிங் பாட்டு... வாழ்த்துக்கள் அனு!

G3 said...

Adada.. un kalyaanathukku neeyae paatu dedicatinga !! Kalakals :))

Vaazhthukkal unakkum - vijayakumarukkum :)

சுரேகா.. said...

சரி..சரி...!

அதான் வெட்கத்தில் முகம் சிவந்து...தேன்கிண்ணம் வரைக்கும் வந்துருச்சா! :)

வாழ்த்துக்கள் சகோதரி!

Anonymous said...

Best Wishes Anu :-)

கண்மணி/kanmani said...

செல்ல அனுவிற்கு பதினாறும் பெற்று [ஆத்தி பிள்ளைங்க 2 போதும்]பெருவாழ்வு வாழ ஆசிகள்.

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் ;))

Anonymous said...

இன்று திருமண நல்வாழ்வு காணும் மைப்ரண்ட் அனுவிற்க்கும் மாப்பிள்ளைக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். நீடுழி மகிழ்ச்சியுடன் வாழ்க - கோவை ரவி

MyFriend said...

@முத்துக்கா
@தமிழ்-பிரியன்
@ஜி3க்கா: யெஸ்ஸூ :-)
@சுரேகா: :-))))
@புனிதாக்கா
@கண்மணி டீச்சர்: ;-)
@கோபிண்ணா
@கோவை ரவி

அனைவருக்கும் நன்றி :-)

Last 25 songs posted in Thenkinnam