Thursday, February 11, 2010

தம்பிக்கு இந்த ஊரு - இன்று நான் தனி ஆள்



இன்று நான் தனி ஆள் ஆனேன்
என்னை யார் எனை நான் கேட்டேன்
கண்கள் இரண்டில் கண்ணீர் கசக்குதே
சொற்கள் முழுதும் சோகம் இசைக்குதே
(இன்று..)
தாய் முகத்தை இனி நான் என்று பார்த்தேனோ
தாய் மடியில் ஒரு தாலாட்டை கேட்பேனோ
(இன்று..)

முதல் முதல் பேசிய அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இன்றி வாழுகின்ற வாழ்க்கை ஏனோ ஏனோ
நேற்று வரை ஆனந்தம் இன்று முதல் தீப்பந்தம்
தொப்புள் கொடி என்னை விட்டு போனது எங்கே எங்கே
தண்ணீரில் நீந்தும் மீன் போல வாந்தேன்
கண்ணீரில் இன்று நானும் விழுந்தேனே
அம்மாவின் முத்தம் வாங்காத பிள்ளை நான் மட்டும் தானா
ஏன் பிறந்தேனோ..
(இன்று..)

தாயை காண வழி இல்லை தாலாட்டைப்போல் மொழி இல்லை
ரத்தம் எல்லாம் கண்ணீர் துளி ஆனதென்ன என்ன
பட்டாம்பூச்சி தலை மீது பாராங்கல்லை சுமந்தேனே
கண்ணீர் மழை தீக்குச்சியை பற்ற வைத்தார் யாரோ
ரெக்கைகள் இல்லா வண்ணத்துபூச்சி வானத்தை பார்த்து ஏங்குதம்மா
பூக்கள் கீழே விழுந்தால் பூமாலை ஆகும்
வாழ்க்கை கீழ் வீழ்ந்தால் வழி என்னவோ
(இன்று..)

படம்: தம்பிக்கு இந்த ஊரு
இசை: தரன்
பாடியவர்: நரேஷ் ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam