Friday, November 30, 2007

43. ஆகாய வெண்ணிலாவே





ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

(ஆகாய வெண்ணிலாவே)


ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே )


பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

(ஆகாய வெண்ணிலாவே)


படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்

42. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..



கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண மாலை..)
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)

படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

41. செம்பூவே பூவே


ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

(செம்பூவே பூவே)

படம்: சிறைச்சாலை
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: அறிவுமதி (இவரது முதல் பாடல்)
இசை: இளையராஜா

40. காற்றுக்கு பூக்கள் சொந்தம்...



காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?

தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா?
நெஞ்சுக்குள்ள மல்லிகைப்பூ தருவாளா?
(காற்றுக்கு..)

பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாறவேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்?
நல்ல வரம் கொடுக்கும்
மீனாய் மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கனும்
காற்றா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ண முழுச்சு பார்த்திடுமா?
அவளா காட்டிடுமா?
(காற்றுக்கு..)

மயிலே மயிலே தோகை தருவாயா?
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவாயா?
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவாயா?
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே
நிசமா தெரியாதே..

பெ: காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்கைக்கொஉ அர்த்தம் சொல்லி தருவாளே..

படம்: கண்ணன் வருவான்
இசை: சிற்பி
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா

39. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு



பெண்: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே
(பொத்தி வச்ச)
ஆண்: மாலையிட காத்து அல்லி இருக்கு தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு
பெண்: இது சாயங்காலமாம் மடி சாயுங்காலமாம்
ஆண்: முல்லைப் பூச்சூடு மெல்ல பாய் போடு
பெண்: அட வாடைக் காத்து சூடு ஏத்துது
(பொத்தி வச்ச)
பெண்: ஆத்துக்குள்ள நேத்து உன்னை நெனச்சேன் வெக்க நெறம் போக மஞ்ச குளிச்சேன்
ஆண்: கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா
பெண்: அது கூடாது இது தாங்காது
ஆண்: சின்ன காம்புதானே பூவத் தாங்குது
(பொத்தி வச்ச)

இசை : இளையராஜா
படம்: மண் வாசனை

38. நிழலினை நிஜமும் பிரிந்திடுமா




நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

(நிழலினை)

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப் போச்சு
சரி செய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்தில உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

(நிழலினை)

படம்: ராம்
பாடகர்: விஜய் ஜெசுதாஸ்
இசை: யுவன் சங்கர்ராஜா

This song is dedicated to my sweetest MOM and each and every MOM in this world :)

37. சிப்பியிருக்குது முத்துமிருக்குது...



தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
லலலலலல லலலலலல லாலலால லாலாலாலா லாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனனா.. சந்தங்கள்..
நனனா.. நீயானால்
ரீசரி.. சங்கீதம்
ஹ்ம்ஹ்ம்.. நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
(சிப்பியிருக்குது..)

நனனானானா.. Come On say it once again..
நனனானானா .. சிரிக்கும் சொர்க்கம்
தனனானனானானா.. தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தானைதானைதானா.. தேவை பாவை பார்வை..
தத்தனதன்னா.. நினைக்க வைத்து
நனனானானா.. நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நனனனானானா தனானா லலாலலா நனானா
Beautiful..
மயக்கம் தந்தது யாரு தமிழோ அமுதோ கவியோ
(சிப்பியிருக்குது..)

இப்போ பார்க்கலாம்..
தனனானா தனனானானா
ம்ம்.. மழையும் வெயிலும் என்ன
தன்னானா நானா நானா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனான தனனான தானா
அம்மாடியோவ்..
தனனான தனனான தானா
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்..
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..

படம்: வறுமையின் நிறம் சிவப்பு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S. ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

36. BBC போல் பேசும் பெண்ணே...



BBC போல் பேசும் பெண்ணே
நம்பிக்கைதான் வாழ்க்கை கண்ணே
உன் விழியில் கண்ணீர் மாற்று
உதடுகளில் புன்னகை ஊட்டு
ஒரு நிலவு போனால் என்ன
ஒரு கோணி விண்மீன் காட்டு
கண் மலரும் ரோஜா பூவே
கைகள் தட்டு
(BBC போல்..)

நிலா நிலா ஓடிவா என் நெஞ்சிலே விளையாடவா
குளிர்கால வார்த்தையாய் உன்னை வாழ்த்தி பாடவா
புத்தம் புது புன்னகை நீ பூக்களில் கடன் வாங்கி வா
இதோ இந்த புன்னகை அள்ளிக்கொள்ளல்லவா
பூக்களிலே பட்டாம்பூச்சி பொருமையுடன் பிடித்துவிடு
பிடிக்கும்முன்னே பறந்துவிட்டால் பூக்களையே ரசித்துவிடு
கால் பட்ட புல்வெளி நசுங்கும் காலடி கடந்தால் எழுந்திடும் பாரு
(BBC போல்..)

அன்பே அன்பே வாழ்விலே ஏமாற்றமும் ஒரு மாற்றமே
அமாவாசை வந்துதான் நிலா கீற்று தோன்றுமே
இன்பம் துன்பம் ரெண்டுமே நிலையானதா அது இல்லையே
இலை வீழ்ந்த பூ மரம் தளிர் கொண்டு காட்டுமே
கங்கையிலும் நுரை இருக்கும் கவிதையிலும் குறை இருக்கும்
நீ இதனை புரிந்துக்கொண்டால் நெஞ்சினிலே நிறை இருக்கும்
சிரிப்புள்ள வீட்டில்தானே தேவதை வந்து சேவைகள் செய்யும்
(BBC போல்..)

படம்: ஹலோ
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வைரமுத்து

Thursday, November 29, 2007

35. அன்பே சிவம்



யார் யார் சிவம்
நீ நான் சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் x 4
(யார்..)

இதயம் என்பது சதைதான் என்றால் எறித்தால் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

யார் யார் சிவம்
நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
(அன்பே..)
(யார்..)

படம்: அன்பே சிவம்
பாடியவர்: கமல்ஹாசன்
இசை: வித்யாசாகர்

34. மன்றம் வந்த தென்றலுக்கு



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

படம்:மௌன ராகம்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி

33. தென்பாண்டித் தமிழே



ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், சித்ரா

32. என் ரகசிய கனவுகள்



பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போலே வருவானா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா செய்பவனா செய்பவனா

பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா

ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்

ஆண் : கன்னக்குழிகள் தான் காதல் தேசமா ஈரமுத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவள் தானா இவள் தானா இவளோடு இணைவேனா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

ஆண் : என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா
மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா

பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

பெண் : இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

படம்: அலை
பாடியவர்கள்: கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்த்தினி
இசை: வித்யாசாகர்

31. ஆடாத ஆட்டமெல்லாம்...



ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போனதென்ன
உண்மை என்ன உனக்கு தெரியுமா?

வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே
நீயும் நானும் நூறு வருஷம்
இருப்பதில்லையே பாரு
(ஆடாத..)

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே..
(ஆடாத..)

ஹேய்.. கருவறைக்குள் காணாத
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே
பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும்போது
ஊரு போடும் ஆட்டமே..
(ஆடாத..)

படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

Wednesday, November 28, 2007

30. எனை தீண்டி விட்டாள்




ஆண் : எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்

படம்: குத்து
இசை: ஸ்ரீகாந்த் தேவா

29. உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்..



ஆ: நெஞ்சில் ஜில் ஜில்..
எனக் காதல் பிறக்கும்..
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்..
அழியாது காதல்..

ஆ: உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாத சுவடு

பெ: தீராத தேடல் இது
தித்திக்கும் தூரல் இது..

ஆ: (உனக்காகத்தானே..)

பெ: தேவதைப்போல வந்து காதல் இறங்கும்
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்

ஆ: புரியாது பெண்ணே காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்..
த ன னா ன னா...

பெ: வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்

ஆ: காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்
(உனக்காகத்தானே..)

பெ: காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

ஆ: சலவைக்கல் சிலையே பூஜிக்க வா..
ரகசிய பூவாய் தனனானனா...

பெ: உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது

ஆ: பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

படம்: நெஞ்சில் ஜில் ஜில்
இசை: D. இமான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா

28. தேனே தென்பாண்டி மீனே


Get Your Own Music Player at Music Plugin

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)

படம் : உதயகீதம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை: இளையராஜா

27. நான் உறவுக்காரன்...




ஆ: நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெ: நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

பெ:ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

ஆ: (நான் உறவுக்காரன்..)

ஆ: வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா?
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா?

பெ: விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழியா போறியா?
விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்பா நீ
பிழிய போறயா?

ஆ: சொந்தக்கார பூவே சொல்லிக்கொஞ்சம் தாரேன்

பெ: சொல்லி கொடு மாமா அள்ளிதற வாரேன்

ஆ:(நான் உறவுக்காரன்..)

பெ: உன்ன நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது
உந்தன் நெனப்பில் இந்த பட்டு புடவ சும்மா வழுக்கி விழுகுது

ஆ: எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது
அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது

பெ:அஞ்சு மணி வந்தா நெஞ்சுக்குள்ள பாட்டு

ஆ: பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு

பெ: (நான் உறவுக்காரி..)

ஆ: (நான் உறவுக்காரன்..)

பெ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

ஆ: ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

படம்: நாட்டாமை
இசை: சிற்பி
பாடியவர்கள்: அஸ்லாம் முஸ்தபா, சுஜாதா

26. வண்ணம் கொண்ட வெண்ணிலவே


Get Your Own Music Player at Music Plugin

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

படம்: சிகரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்

25. எவனோ ஒருவன் வாசிக்கிறான்




எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

(எவனோ ஒருவன்)

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

(எவனோ ஒருவன்)

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

(எவனோ ஒருவன் )

படம்: அலைபாயுதே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

Tuesday, November 27, 2007

24. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
(ஒவ்வொரு..)

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

(மனமே..)
(ஒவ்வொரு..)

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

(மனமே..)
(ஒவ்வொரு..)
(மனமே..)

படம்: ஆட்டோகிராஃப்
பாடியவர்: சித்ரா
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா. விஜய்

பாடலை விரும்பி கேட்டவர்: நிலா அரக்கி

23. ஒரு மணி அடித்தால்...



ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
தெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ
(ஒரு மணி..)

வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னை
தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே
மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எறியும் விறகானேன்
மேடைத்தோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
(ஒரு மணி..)

உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நான் இழப்பேன்
இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே
எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா
சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
(ஒரு மணி..)

படம்: காலமெல்லாம் காதல் வாழ்க
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்


நிலா அரக்கி, நீங்க கேட்ட பாடல் போட்டாச்சு. :-)

22. உடையோடு பிறக்கவில்லை..

மகேஷ் என்ற ஒரு இசையமைப்பளர். அவர் கேன்சர் நோயால் இறந்தாலும் அவர் இசையமைத்த இசை இன்னும் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. நம்மவர், வானம் வசப்படும் பாடல்களும் இவரின் இசையால் அமைந்தவைத்தான்.. கனவு மெய்ப்பட வேண்டும் படத்துக்கும் மெட்டமைத்த பிறகு இறந்துவிட்டார்.

அவரின் நினைவாக இன்று இந்த பாடலை கேட்போம் வாருங்கள்:



பெ: உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்துவிட்டோம்
வாழ்வின் தேவையை
வாழ்ந்து போக வந்தோம்..
(உடையோடு..)

ஆ: வாடி பூங்கொடி
பிரம்மன் படைப்பில்
எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நாந்தானே
வா தோழி

பெ: ஆஹா மன்மதா
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா?
ஆன் பெண்ணின்
இந்த தேடல்தான் தீராதா?
(உடையோடு..)

பெ: கண்டேன் காதலா
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும்
வாழ்வோமே

ஆ: வா வா முல்லையே
சாவை வெல்லும் சங்கதி
இது போல் இல்லையே
நூராண்டு என்னை
நீ வாழ வைத்தாயே

ஆ: இடையோடு கொடுப்பதற்க்கு
இடைக்கால தடை எதற்கு?
இது பாதி வேலைதான்
இனி மீதி நாளைதான்

படம்: நம்மவர்
இசை: மகேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

21. பூவே செம்பூவே



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே )

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

படம்: சொல்லத் துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

Monday, November 26, 2007

20. உடையாத வெண்ணிலா..

பாடல்: உடையாத வெண்ணிலா
பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: வித்யாசாகர்
படம்: ப்ரியம்









ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ: நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற பொன்முடி
பெ: கலைகின்ற சிறு நகம்
ஆ: சிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடகம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ&பெ: (உடையாத..)

ஆ: அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெ:தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
ஆ: முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
பெ: எச்சி வைத்த பின்னும்
மிச்சமுள்ள பாலும்
ஆ: கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத...)

பெ: கண்கள் சொல்லும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
ஆ: அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
பெ: மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சேலை
ஆ: முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
பெ: இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத..)

Sunday, November 25, 2007

19. குறை ஒன்றும் இல்லை



குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

அனுபல்லவி [சிவ ரஞ்சினி ]

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1[சிவ ரஞ்சினி ]

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 [காபி ]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)


சரணம் 3 [காபி ]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4 [சிந்து பைரவி ]

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)

சரணம் 5 [ சிந்து பைரவி ]

குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா (3)


பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி

18. வருகிறாள் என் தேவதை...

பாடல்: வருகிறாளே என் தேவதைதான்
பாடகர்: உன்னிகிருஷ்ணன்
இசை: பரணி
படம்: ஸ்டைல்




வருகிறாளே என் தேவதைதான்
புது வசந்தம் கொடுத்தாளே..
பார்க்கிறாளே என் பௌர்ணமிதான்
இந்த மனதை பறித்தாளே..
ஒரு போதி மரத்தை உன் கண்களிலே
கண்டு தியானம் செய்ய அமர்ந்தேன்
ஒரு பாதி உயிரை உன் காலடியில்
தந்து பாதியாகி நடந்தேன்
இதயத்துக்கு தலை சுற்றுதே
இமைகளுக்கு விழி சுட்டதே
அமைதிக்கு தடை விதித்தாய்
அஹிம்சையில் உயிர் பறித்தாய்...

17.செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]







பாடியவர்: TR.மகாலிங்கம்
படம்:- மாலையிட்ட மங்கை
இசை:- விஸ்வநாதன்
எழுதியவர்:- கவியரசு கண்ணதாசன்
விருப்பம்:- சீனா ஐயா

இதே பாடலை பெண் குரலில் கேட்டு மகிழ சுட்டுங்களேன். (நன்றி:- ஜிரா)

பாடியவர்:- ஜமுனா ராணி

16. எனக்குப் பிடித்த பாடல்




எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்

(எனக்குப் பிடித்த)


படம்: ஜூலி கணபதி
இசை: இளையராஜா
பாடல்: நா. முத்துகுமார்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்

Thursday, November 22, 2007

15. அஞ்சலி அஞ்சலி!



அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)

(அஞ்சலி)

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை

(அஞ்சலி)

பூப்போல கண்ணாலேதான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல்தான்
வண்ணப் பாப்பா அஞ்சலிதான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்
ஆடிப் பாக்கும் அஞ்சலிதான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கைகொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)


படம் : அஞ்சலி

இசை : இளையராஜா

Wednesday, November 21, 2007

14. பூவே பூச்சூடவா




பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)


படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

Saturday, November 17, 2007

13. சின்னத் தாயவள்


Get Your Own Music Player at Music Plugin

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே


**

இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்:எஸ்.ஜானகி
படம்: தளபதி

Friday, November 16, 2007

12. தென்றல் வந்து தீண்டும் போது

அவதாரம் படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து தீண்டும்போது" இளையராஜாவின் அருமையான பாடல்களில் ஒன்று. இளையராஜாவும் ஜானகியும் இணைந்து பாடியிருப்பார்கள். மெலிதான இசையும்,ரசிக்க தக்க பாடல் வரிகளையும் அனைவரையும் ஈர்க்கும்.





ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

பெண் : எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல

பெண் : நிலையா இல்லாது நினைவில் வரும் நெறங்களே

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே அதை கதையாய் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஆண் : திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

பெண் :வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

ஆண் : எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

பெண் : திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

Wednesday, November 14, 2007

11.பற பற பற பற பட்டாம்பூச்சி....



பற பற பற பற பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சி
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப் போச்சு
கண்ணீரை துடைக்கும் விரலுக்கே மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கே இலை படகு ஆனதே

பற பற பற பற பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சி
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப் போச்சு

இனபம் ஒரு புறமென்று துன்பம் மறு புறமென்று சுற்றி சுழலுது இந்த மண் மேலே
தன்னந்தனி ஆளென்று யாருமில்லையென்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே
ஏதோ ஏதோர் உணர்ச்சி எரி தழலில் மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பமாகுதே
எதிரிலே அந்த மழலை காலம் மீண்டும் திரும்புதே

பற பற பற பற பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சி
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப் போச்சு

வாழ்க்கை என்பது என்ன பள்ளி பாடமும் அல்ல கற்றுக் கொண்டதை மெல்ல முன்னேற
காதல் என்பது என்ன புள்ளி கோலமும் அல்ல காற்றில் கலையும் போது தள்ளாட
எங்கோ எங்கோர் உலகம் உனக்காக காத்து கிடக்கும்
நிகழ்காலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம் நினைவில் உள்ள காட்சி காயுமா

பற பற பற பற பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சி
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப் போச்சு
கண்ணீரை துடைக்கும் விரலுக்கே மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கே இலை படகு ஆனதே

பற பற பற பற பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சி
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப் போச்சு

Tuesday, November 13, 2007

10.பனிவிழும் மலர்வனம்...

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பாட்டொன்று கவிஞர் வைரமுத்து வரிகளில் இளையராஜா இசையில் நினைவெல்லாம் நித்யா படத்தில் வரும் "பனிவிழும் மலர்வனம்."

பாடல் வரிகளும், இசையும் மிகவும் கவரும் விதமாக அமைந்தது இந்த பாடலின் சிறப்பு. வைரமுத்துக்கு பல பரிசுகளையும் வாங்கி தந்த பாடல். கேட்டு ரசித்து கருத்துக்களை சொல்லுங்களேன்.... :)



பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்,
சேலை மூடும் இளம்சோலை, மாலை சூடும் மலர்மாலை,
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்,
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்,
கைகள் இடைதனில் நெளிகையில்,இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குகள் சிரித்து கண்மூடும்....

பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்,




Monday, November 12, 2007

9. வானும் மண்ணும் - காதல் மன்னன்



ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

8.என்னடி மீனாட்சி... சொன்னது என்னாச்சு?

இளமை ஊஞ்சாலடுகிறது படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எல்லாருக்கும் மிக்க பரிச்சியமானது. கவிஞர் கண்ணாதாசனின் பாடல்வரிகளில் இளையராஜா இசையில் பாடும் நிலா எஸ்.பி.பி பாடிய பாடல்.

எனக்கு பாலுவின் குரலுக்காகவே மிகவும் பிடித்த பாடல் இது. தாடி வளர்த்தவர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் என கேள்விப்பட்டுருக்கேன்... :) அதெல்லாம் உண்மையா பொய்யா'ன்னு எனக்கு தெரியாது.. ;)



வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!
மார்பு துடிக்குதுடி, பார்த்த இடமெல்லாம்
உன்னை போல் பாவை தெரியுது!

என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?
நேற்றேடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மரத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் துடித்துடும் ராணி, நீ அடுத்தவன் தோழி!

Saturday, November 10, 2007

7. அந்தி நேரத் தென்றல் காற்று




அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

Tuesday, November 6, 2007

6. ஒரு தெய்வம் தந்த பூவே




நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியது:- சின்மயி
இசை:- ஏ.ஆர்.ரகுமான்

5.பொன்மகள் வந்தாள்.... அசலும், நகலும்..

பழைய தமிழ் சினிமா பாடல்கள் தற்போதைய டிரெண்ட்'க்கு ஏற்றவாறு ரீ-மிக்ஸ் செய்யப்பட்டு புதிய திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அழகிய தமிழ்மகன் படத்தில் நடிகர்திலகம் சிவாஜியின் "பொன்மகள் வந்தாள்" பாடல் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. முதலில் அசல் பொன்மகளை கேட்டு பாருங்கள்.

அசல்:-



நகல்:-




எது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதென உங்களின் கருத்துக்களை சொல்லுங்களேன்

Saturday, November 3, 2007

4. கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே....


Get Your Own Music Player at Music Plugin

பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!


படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியது:- லதா ரஜினிகாந்த்
இசை:- இளையராஜா

Friday, November 2, 2007

3. ஜனனீ ஜனணீ! ஜகம் நீ! அகம் நீ!



சிவசக்த்யாயுத்தோயதிபவதி....
சத்தப்ரபவிதும்
ம்ம்ம்................!

நசே தேவம் தேவோ நகலு
குஷல ஹஸ்பந்திதுமபீ!
.....ஆ.!

அதஸ்தாம்...ஆராத்யாம்....
ஹரிஹர விரிஞ்சாதிவிரவீ!

ப்ரணம்தும் ஸ்தோத்தும்வ
கதம் அகிர்த புண்யக ப்ரபவதீ!
ஆ.....!

ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு: ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும் இடை வாகனமும்!

குழு : சடைவார் குழலும் இடை வாகனமும்!

கொண்ட நாயயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே!

குழு : நின்ற நாயகியே இட பாகத்திலே!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

குழூ : சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

குழு : தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

குழு : பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

சக்தி பீடமும் நீ........!
ஆஆஆ.......................ஆ!

சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!


குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

2. புத்தியுள்ள மனிதர் எல்லாம்.....

மறைந்த நடிகர் சந்திரபாபு அவர்களின் இந்த பாடல் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று. மிகவும் எதார்த்தமான வார்த்தைகளில் அமைந்த பாடல் என்பதாலும் மட்டுமில்லாமல் தோல்வி அடையுறப்போ கேட்டா நாமே தோத்து போற அளவுக்கு முட்டாள் இல்லைன்னும் நம்பிக்கை வர வைக்கிற பாட்டு இது. அதேபோல் வெற்றியொன்றை அடைந்து அதுனாலே தலைக்கனம் ஏறும் பொழுது சட்டென்னு தன்னிலை புரியவைக்கிற வரிகளும் உள்ளது.....



புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை...
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை..
பணமிருக்கும் மனிதரிடம் மனம் இல்லை...
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பது இல்லை...

Last 25 songs posted in Thenkinnam