Sunday, November 25, 2007

16. எனக்குப் பிடித்த பாடல்




எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்

(எனக்குப் பிடித்த)


படம்: ஜூலி கணபதி
இசை: இளையராஜா
பாடல்: நா. முத்துகுமார்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்

9 Comments:

Ayyanar Viswanath said...

மக்களே

கண்களால் கைது செய் படத்துல தீக்குருவியினை பாட்டு போடுங்க..அந்த பாடல் வரிகளை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்

ஜே கே | J K said...

எனக்கும் பிடித்த பாடல்.

நன்றி கப்பி.

கோபிநாத் said...

கலக்கல் பாட்டு...அதை படமாக்கிய விதமும் அழகாக இருக்கும்....;))

நாகை சிவா said...

கப்பி

உனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமே.. பிஞ்சு குரல் ஆச்சே ;)

நாகை சிவா said...

அய்யனார்... மின்மடலை பாருங்க... :)

Boston Bala said...

நன்றி

MyFriend said...

//எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே//

எனக்கு பிடிக்கலையே அறிவுஜீவி சார்.. :-P

கப்பி | Kappi said...

அய்யனார்,புலி

நமக்கும் அனுப்பினா இங்க போட்டுடலாம்ல ;))

J K

நன்றி ஹை :)

கோபிநாத்

ஆமாங்க்ண்ணா :)

boston bala

_/\_ :)


மை ஃபிரண்ட்

நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான் :))

சீனு said...

ஐயோ! என்னுடைய ஃபேவரைட் பாட்டு. தினமும் கேட்பேன் (இப்பொழுது கூட கேட்டுக் கொண்டிருக்கிறேன்). ஸ்ரேயா கோஷலின் குரல் அமர்களம்.

//மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

ஒரே பிரச்சினை, அவள் பாடவந்த புதுசில் பாடப்பட்டது. அதனால், வார்த்தைகளை இப்படி போடவேண்டும்.

//என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே//

என்னைப் பிடித்த நி'ல்'வு
அது உன்னைப் பிடிக்குமே

//மனது வளர்த்த சோலையில்//

மனது 'வள்த்த' சோலையில்

//விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி வருகிறாய்
//

விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி 'வொருகிறாய்'

Last 25 songs posted in Thenkinnam