Sunday, November 25, 2007

19. குறை ஒன்றும் இல்லை



குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

அனுபல்லவி [சிவ ரஞ்சினி ]

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1[சிவ ரஞ்சினி ]

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 [காபி ]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)


சரணம் 3 [காபி ]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4 [சிந்து பைரவி ]

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)

சரணம் 5 [ சிந்து பைரவி ]

குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)

மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா (3)


பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி

8 Comments:

வடுவூர் குமார் said...

videovee irrukku,suparaga irrukkum.

இலவசக்கொத்தனார் said...

எம்.எஸ்.அம்மா ரொம்ப உருக்கமா பாடி இருக்கும் பாட்டு. தேன் கிண்ணத்தில் வெறும் சினிமாப் பாடல்களாகவே இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போதே இப்படி ஒரு அருமையான பாட்டு!!

புலி பாஞ்சிட்டடே!!

நளாயினி said...

சங்கீதப்பாடல்களை கேட்பதே ஒரு சொற்கத்தக்கு அழைத்துப்போவதை ஒத்தது. அவர்கள் பாடுவதை நேரில்பாக்க கிடைக்கிறபோது அதேஅடாh சொல்லிமாளாது. இதைப்போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

http://www.youtube.com/watch?v=9FwDHpZGEbo&feature=related

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப பிடிச்ச பாட்டு என் பொண்ணை பாடச்சொல்லி கேட்டு ரசிப்பேன் நான்..

நாகை சிவா said...

@ குமார், நளாயினி!

அவர்கள் பாடுவது போன்ற வீடியோ என்னிடமும் உள்ளது. என் ஆர்குட் வீடியோவில் இருக்கு. பாடல் நல்ல தெளிவாக கேட்க வேண்டும் என்ற காரணத்தினால் வெறும் ஒலியை மற்றும் போட்டேன்.

அவர் முகத்தை பாத்துக் கொண்டே இந்த பாடலை கேட்க யாருக்கு தான் கசக்கும்.

நாகை சிவா said...

கொத்தனார் !

நன்றி! நன்றி! நன்றி!

:)))

நாகை சிவா said...

@ முத்து லெட்சுமி!

நன்றி. நல்ல வேளை நீங்க பாடி உங்க பொண்ண கேட்க சொல்லல. சும்மா சொன்னேன். யாரு பாடினாலும் அனுபவித்து கேட்க கூடிய பாடல் இது. பாடுபவர்கள் கண்டிப்பாக அனுபவித்து தான் பாடுவார்கள்.

Geetha Sambasivam said...

பயந்துட்டே வந்தேன், நல்லாவே இருக்கு!!!!! :)))))))

Last 25 songs posted in Thenkinnam