Friday, November 30, 2007

42. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..



கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண மாலை..)
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)

படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

5 Comments:

ILA (a) இளா said...

//சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே//
ரொம்ப வருஷம் என் டயரிகளின் முதல் பக்கத்துல பிடிச்சு இருந்த வாசகம்..

காட்டாறு said...

சூப்பர் பாட்டு! என்றென்றும் மனசுல நிக்கும் பாட்டு.

ஐயப்பன் said...

//வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
..

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..///

100%, no.1 song, Expectation of most Mens.

revathi said...

i like very much this song.


en life kooda ippadithan. en husband mathiri yarukkum vara koodathu.

Sutharsan said...

I love this song.

Last 25 songs posted in Thenkinnam