Tuesday, November 6, 2007

5.பொன்மகள் வந்தாள்.... அசலும், நகலும்..

பழைய தமிழ் சினிமா பாடல்கள் தற்போதைய டிரெண்ட்'க்கு ஏற்றவாறு ரீ-மிக்ஸ் செய்யப்பட்டு புதிய திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அழகிய தமிழ்மகன் படத்தில் நடிகர்திலகம் சிவாஜியின் "பொன்மகள் வந்தாள்" பாடல் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. முதலில் அசல் பொன்மகளை கேட்டு பாருங்கள்.

அசல்:-



நகல்:-




எது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதென உங்களின் கருத்துக்களை சொல்லுங்களேன்

9 Comments:

குசும்பன் said...

புதுசுதான் அருமை!

Anonymous said...

பழசு தான் - அதிலென்ன சந்தேகம் - இது என் அப்பா .
புதுசு தான் . அதிலென்ன சந்தேகம் - இது நான்.

G.Ragavan said...

என்ன இருந்தாலும் பழசு அசல். அதுல புதுமைகள் உண்டு. மிருதங்கத்தை ட்ரம்ஸ் மாதிரி மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பாரு. அதுவுமில்லாம டி.எம்.எஸ்சோட உச்சத்துக்கும் போற குரல்.

புதுப்பாடலை ரீமிக்சியர் ஏ.ஆர்.ரகுமான் இல்லை. ரீமிக்ஸ் செய்வதில்லை என்பதில் உறுதியாக இரூக்கிறார். தொட்டால் பூ மலரும் பாட்டில் புது மெட்டே போட்டிருந்தார். ஆனா ரீமிக்சில் அதே மெட்டு இருக்க வேண்டும். இந்தப் பாட்டைப் பாடியவர்தான் இதை ரீமிக்சியவரும்.

அவருக்கும் பழைய பாட்டின் வலிமை தெரிந்திருக்கிறது. ஆகையால் ஹை பிச்சில் டி.எம்.எஸ்சின் குரலையே பயன்படுத்தியிருக்கிறார்.

பழைய பாட்டு மிகவும் அருமையானது. அந்த விறுவிறுப்பைக் கொண்டு வர முயன்றதில் புதிய பாட்டிற்கும் ஒரளவு வெற்றியே.

சிறில் அலெக்ஸ் said...

பொதுவாக ரீ-மிக்ஸ் எனக்கு பிடிக்கும். இந்தப் பாட்டில் பழைய பாட்டில் வரும் கோரஸ் சமாச்சாரங்கள் சூப்பராயிருக்கும் ஒரு surreal உணர்வத் தரக்கூடியது பழைய இசை

புதுசுல ஏதொ விஜயின் காமெடி மூவ்களுக்காக போட்டிருப்பதப் போலத் தோணுது.

Anonymous said...

Old is gold!
TMS voice is incomparable, majestic, golden...

In the recent Kumudam, Vairamuthu prised about TMS!
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-10-24/pg8.php

MyFriend said...

rendume nallaa irukku. :-) REmix super. ;-)

Anonymous said...

ragavan

rahman has done the remix

the director told this in kumudam interview

this is the first ever remix from rahman

cheena (சீனா) said...

சிம்மக்குரலோன், மெல்லிசை மன்னர், டி எம் எஸ் - கூட்டணியைச் சந்திக்க முடியுமா என்ன இக்காலக் கூட்டணியினால்

இராம்/Raam said...

//cheena (சீனா) said...
சிம்மக்குரலோன், மெல்லிசை மன்னர், டி எம் எஸ் - கூட்டணியைச் சந்திக்க முடியுமா என்ன இக்காலக் கூட்டணியினால்
//


ஐயா,

நீங்க ஒங்க காலத்து பெருமையை சொல்லுறீங்க... நாங்க எங்க காலத்து பெருமையை சொல்லுறோம்.... :)

ஆனால் ரீ-மிக்ஸ் பாடலை விட ஒரிஜினலில் ஜி.ரா சொன்னமாதிரி அந்த காலத்தின் புதுமைகள் இருப்பதை மறுக்கமுடியாது...:)

Last 25 songs posted in Thenkinnam