Wednesday, November 28, 2007

27. நான் உறவுக்காரன்...




ஆ: நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெ: நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

பெ:ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

ஆ: (நான் உறவுக்காரன்..)

ஆ: வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா?
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா?

பெ: விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழியா போறியா?
விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்பா நீ
பிழிய போறயா?

ஆ: சொந்தக்கார பூவே சொல்லிக்கொஞ்சம் தாரேன்

பெ: சொல்லி கொடு மாமா அள்ளிதற வாரேன்

ஆ:(நான் உறவுக்காரன்..)

பெ: உன்ன நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது
உந்தன் நெனப்பில் இந்த பட்டு புடவ சும்மா வழுக்கி விழுகுது

ஆ: எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது
அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது

பெ:அஞ்சு மணி வந்தா நெஞ்சுக்குள்ள பாட்டு

ஆ: பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு

பெ: (நான் உறவுக்காரி..)

ஆ: (நான் உறவுக்காரன்..)

பெ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

ஆ: ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

படம்: நாட்டாமை
இசை: சிற்பி
பாடியவர்கள்: அஸ்லாம் முஸ்தபா, சுஜாதா

2 Comments:

நாகை சிவா said...

சுஜாதா பாட்டாக பாத்து தட்டி விடுறீங்க போல..

:)

MyFriend said...

//நாகை சிவா said...
சுஜாதா பாட்டாக பாத்து தட்டி விடுறீங்க போல..

:)
//

ada aamaa.. :-)) naane ippothaan notice pandren. ;-)

Last 25 songs posted in Thenkinnam