Wednesday, November 28, 2007

30. எனை தீண்டி விட்டாள்




ஆண் : எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்

படம்: குத்து
இசை: ஸ்ரீகாந்த் தேவா

2 Comments:

நாகை சிவா said...

இந்த படத்தில் கூட இது போல பாடல் இருக்கா?

MyFriend said...

//நாகை சிவா said...
இந்த படத்தில் கூட இது போல பாடல் இருக்கா?
//

பாடல் சூப்பர் பாட்டுதான்.. ஆனா சொம்பு இந்த பாட்டு முழுசும் ஒரு கையை வச்சே சாகசம் பண்ணிட்டிருப்பரே! :-P

Last 25 songs posted in Thenkinnam