Sunday, November 25, 2007

17.செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]







பாடியவர்: TR.மகாலிங்கம்
படம்:- மாலையிட்ட மங்கை
இசை:- விஸ்வநாதன்
எழுதியவர்:- கவியரசு கண்ணதாசன்
விருப்பம்:- சீனா ஐயா

இதே பாடலை பெண் குரலில் கேட்டு மகிழ சுட்டுங்களேன். (நன்றி:- ஜிரா)

பாடியவர்:- ஜமுனா ராணி

11 Comments:

cheena (சீனா) said...

நன்றி நண்பரே !! தட்டச்சுப் பிழைகள் இருக்கின்றன - படம் மாலையிட்ட மங்கையென நினைக்கிறேன்

கதிர் said...

//பழரம்//

இது தெரிஞ்சே வந்த பிழையா இல்ல தெரியாம வந்த பிழையான்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும். :)

இராம்/Raam said...

சீனா ஐயா, அபுதாபி ஆணழகா பிழை சரி பண்ணியாச்சு... :)

cheena (சீனா) said...

நண்பரே !! - திருத்திய பதிப்பு இன்னும் புதுப்பிக்கப் பட வில்லை. பழைய பிழைகள் மிகுந்த படைப்பு தான் இருக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறேன். சரி செய்த திருத்திய பதிப்பினை இட வேண்டுகிறேன்.

ஜே கே | J K said...

படம் மாலையிட்ட மங்கை.

இராம்/Raam said...

சீனா ஐயா,

இப்பொழுது பார்த்து சொல்லுங்களேன்...

//J K said...
படம் மாலையிட்ட மங்கை.
//

JK,

மிக்க நன்றி... :) எல்லாத்துக்கும்..... :)

G.Ragavan said...

தம்பி, படத்தோட பேரு மாலையிட்ட மங்கை. கவியரசர்தான் தயாரிப்பாளர். இந்தப் படத்துல ஏதோ இரு இந்தி டியூனைப் பயன்படுத்தச் சொல்லி விஸ்வநாதனை வற்புறுத்துனாங்களாம். அவரும் வந்த புதுசு. வெறுப்போட வேற வழியில்லாம போட்டாரம். ஆனா அந்தப் பாட்டை விட அவரு சொந்தமாப் போட்ட பாட்டெல்லாம் ஹிட்டாயிருச்சாம். அதுக்கப்புறம் யாரும் அவரை reuse பண்ணச் சொல்லிக் கேக்கலை. அவரும் செய்யலை. யாதோங்கீ பாராத்னு ஒரு இந்திப்படத்த தமிழ்ல எடுத்தாங்க. எம்.ஜி.ஆரை வெச்சு. அந்தப் படத்துல இந்திப் பாட்டுகள்ளாம் ஹிட்டு. தெலுங்குல எடுத்தவங்க இந்தி டியூன்களையே பயன்படுத்திக்கிட்டாங்க. தமிழ்ல இவர் கிட்ட எம்.ஜி.ஆர் இசையமைக்கச் சொன்னப்போ முடியாதுன்னு சொல்லீட்டாராம். இந்தி டியூனை பயன்படுத்தச் சொல்வாங்கன்னு. ஆனா எம்.ஜி.ஆர் சொந்த டியூனையே போட ஒப்புக்கிட்ட பெறகுதான் இசையமைக்கச் சம்மதிச்சாராம். இன்ஸ்பிரேஷனை ஏத்துக்கிடும் விஸ்வநாதன் காப்பியடிக்கிறதை ஏத்துக்கிறதில்லை.

cheena (சீனா) said...

தம்பி ராம், நன்கு வந்திருக்கிறது. நன்றி

நாகை சிவா said...

சூப்பர் பாட்டு ஆச்சே... நினைவுப்படுத்தியதற்கு நன்றி சார்

இராம்/Raam said...

ஜிரா,

விரிவான தகவல்களுடன் கூடிய நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி... :)


புலி,

வளரே நன்னி.... :)

மழைக்காதலன் said...

இந்தப் பாடலின் ஒளி அல்லது ஒலிவடிவம் கிடைக்குமா தரவிறக்கம் செய்யுமளவு

Last 25 songs posted in Thenkinnam