Wednesday, November 28, 2007

25. எவனோ ஒருவன் வாசிக்கிறான்




எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

(எவனோ ஒருவன்)

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

(எவனோ ஒருவன்)

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

(எவனோ ஒருவன் )

படம்: அலைபாயுதே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

5 Comments:

ஜே கே | J K said...

சூப்பர் பாட்டு கப்பி...

நாகை சிவா said...

கப்பி!

அப்படியே என் கலெக்ஷன் ல இருந்து எடுத்து போடுவது மாதிரி தான் ஒவ்வொரு பாட்டும் போட்டுக் கொண்டு இருக்கிறாய். :)

அலைபாயுதே படம் கல்லூரியில் படிக்கும் போது போகும் ஊரில் எல்லாம் பார்த்த படம். :)

//புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்//

இந்த பாடலில் எனக்கு மிகவும் வரிகள் இது.

MyFriend said...

sUperb song.. especially when watching the videoclip together. ;-)

ஆயில்யன் said...

//கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்//

உண்மைதானே!

ஊரை விட்டு வந்த நாள் முதல் இணையத்தில் இசை கேட்டுதான் இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது!

இந்த பாடலுக்கான லொக்கேஷனும் பார்த்தீங்கன்ன மல்லு தேசத்தில எங்கோ ஒரு இடம் ஆனா எந்த இடம்ன்னு தெரியலை
என மனதை கவர்ந்த இடம் & பாடல்

நன்றி!

கப்பி | Kappi said...

நன்றி JK!

புலி,

என் இனமய்யா நீ :))

மை ஃபிரண்ட்,

ஆமாங்க..வீடியோ போடனும்னு நெனச்சு மறந்துட்டேன் :D


ஆயில்யன்

பாட்டு எடுத்த ஊர் பேரை யாரோ சொல்லி கேட்டிருக்கேன் ..இப்பம் மறந்து போயி :))

நன்றி!

Last 25 songs posted in Thenkinnam