பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே செம்பூவே)
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே செம்பூவே )
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே செம்பூவே)
படம்: சொல்லத் துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
Tuesday, November 27, 2007
21. பூவே செம்பூவே
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:07 AM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
அருமையான பாடல்.
நன்றி கப்பி...
கப்பி சூப்பர் பாட்டு...
என் ஆல் டைம் பேவரைட் ல உள்ள பாடல்.
சில நினைவுகளையும் ஞாபகப்படுத்தும் பாடல் இது.
சூப்பர் பாட்டு...
\\சில நினைவுகளையும் ஞாபகப்படுத்தும் பாடல் இது.\\
என்ன சகா பீல் எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு ! ;)
ஜேசுதாஸ் பாடிய அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.. ஒரு கலநிகழ்ச்சியில் விஜய் ஜேசுதாஸ் இதே பாடலை அவர் அப்பாவை விடா சூப்பரா பாடி அசத்தியிருப்பார். :-)
//தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
//
சூப்பர் வரிகள்..
மனதைக் கவர்ந்த பாடல்.
மனதைக் கவர்ந்த பாடல்.
இந்தப் பாட்டுக்கு நடனம் ஆடுவது யார்?
பச்சை சல்வார் லேடி யாருப்பா?
Post a Comment