Thursday, November 29, 2007

34. மன்றம் வந்த தென்றலுக்கு



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

படம்:மௌன ராகம்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி

1 Comment:

நாகை சிவா said...

இளையராஜாவிற்கும், எஸ்பிபி க்கும் அவர்கள் மகுடத்தில் இருக்கும் மேலும் ஒரு சிறகு இந்த பாடல்

Last 25 songs posted in Thenkinnam