Saturday, August 30, 2008

667. சொல்லிவிடு வெள்ளி நிலவே




சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின்
நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா... ஓ..
கனவுகள் கலைந்திடுமா..

உன்னை ஒருபோதும் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..ஓ.
குற்றம் புரியாது உந்தன் மடி மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓ
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ
வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையெ
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ..
எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ..
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காதிருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குழிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையெ
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சி வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையெ
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

படம்: அமைதிப்படை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா

விரும்பி கேட்டவர்: மஜா

Friday, August 29, 2008

666. நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க




நாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா

கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
பெத்தாலும் ஒண்ணு ரெண்டு பெத்துபோடுவோம்
அதுக்கு ஒத்துமைய ரெண்டு பேரும் பாடுபடுவோம்
ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்

நாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களை தான் பேரை? வைத்து போகமாட்டோம்
எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில என்னாளும் மாறமாட்டோம்
நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்

நாங்க .. புய்ஷா...ஆ. நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க

படி அரிசி கிடைக்கிற காலத்துல
நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்துலே
நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே
சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே
நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
எல்லோரும் ஒண்ணாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும் இங்கே மறைப்பதில்லே

னாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
ஹ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா

படம்: ஒளி விளக்கு
இசை: விஸ்வநாதன் - ராமமூர்ர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா

665. நாணமோ இன்னும் நாணமோ




நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ... நாணமோ..
ஓஓ...ஓ.. நாணமோ இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ.... நாணுமோ...
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ... நாணமோ..

தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனன்த வெள்ளத்தில் நீராடுது
அது எது?
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது எது?

னாணுமோ.... நாணுமோ...
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ... நாணமோ..

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதான் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன் - P சுசீலா

664. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்

அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்

நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்

கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்

இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அதை உன்னை கேட்டு நான் தருவேன்

கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது

அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன் - P சுசீலா

Wednesday, August 27, 2008

663. பேசுவது கிளியா





பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா


பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா


(பாடுவது கவியா)


கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா

(பேசுவது கிளியா)

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

(பேசுவது கிளியா)


படம்: பணத்தோட்டம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா

Tuesday, August 26, 2008

662.பனி இல்லாத மார்கழியா?

பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா

அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா(2)
(பனி இல்லாத )


தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா(2)


பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா(2)
(பனி இல்லாத)


விரும்பிக்கேட்டவர் : ஒற்றை அன்றில் ஸ்ரீ
திரைப் படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்கள்: பி.சுசீலா, டி.எம்.எஸ்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

661. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

(ராஜாவின்)

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்

(ராஜாவின்)

ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் மலர்ந்தேன்

(ராஜாவின்)

பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்

(ராஜாவின்)




படம் : அன்பே வா
பாடல் : டி.எம்.எஸ்
தொகுதி : எம்.ஜி.யாரின் காதல் கீதங்கள்

Monday, August 25, 2008

660.ஆகா நம் ஆசை நிறைவேறுமா.....

ஆகா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றிப் போகுமா

ஈடில்லா இருபறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போது பகை வல்லூறாகத் தோன்றுமோ(ஈடில்லா)
வல்லூறானதை வனத்தில் வாழும் வேடன்
ஆகி நான் (வல்லூறானதை)
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆஆ
(ஆகா நம் ஆசை )

அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே
(உன்)அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல
ஆனந்தமானேன் என் கண்ணே (அருமை மொழி)
ஆஆஆஆ
உமது ஆனந்தமே அழியாச்செல்வமே(2)
ஆருயிரே நானுனக்கே சொந்தமே(2)-என்
ஆஆஆஆஆ

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை
ஆளுவோம்- நாம் (ஈருடல் )

திரைப்படம் : தாய்க்குப்பின் தாரம்
பாடலைப்பாடியவர்கள்: டி.எம். எஸ். P.பானுமதி
இசையமைத்தவர்: கே.வி .மகாதேவன்
பாடல்வரிகள் : சி.ஏ.லக்ஷ்மணதாஸ்

659 - அன்பே வா... அன்பே வா..

அன்பே வா அன்பே வா வா வா வா

உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா

நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை

(உள்ளம் என்றொரு)

வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

(உள்ளம் என்றொரு)




Get Your Own Hindi Songs Player at Music Plugin



பாடியவர் : டி.எம்.சவுந்தர ராஜன்
படம் : அன்பே வா
நடிகர் : மக்கள் திலகம் - எம்.ஜி.ஆர்

Sunday, August 24, 2008

658. சின்னம்மா சிலகம்மா - சக்கரக்கட்டி




சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா சிற்பங்கள்(??) எவனம்மா


ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்

யார் யாரோ அவன் யாரோ
என் பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவரோ

சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா


உம்மா உம்மா
ஐயோ கசக்கும்
சும்மா சும்மா
கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்
சுடுமா சுடுமா
நெருப்பைத்(??) தீயே
சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம்
நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்


( சின்னம்மா சிலகம்மா )


வெள்ளை இரவே
இரவின் குளிர் நீ
தெளியும் நதியே
நதியின் கரை நீ
நீயோ அழகின் ரசவாதம்
கொஞ்சல் மொழியே
மொழியின் உயிர் நீ
உறையா பனியே
நீ என் நூறு சதவீதம்
நீ பூக்கள் போர்த்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயில்கிறேன் கணக்கை
உனைப் பாட ஏதடி தணிக்கை

(ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்)


படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: பா.விஜய்
பாடியவர்கள்: பென்னி தயால், சின்மயி

Saturday, August 23, 2008

657. மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!

பெண்:
மயக்கும் மாலைப்பொழுதே நீ போ!போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா!வா!
இன்னலைத் தீர்க்கவா!( மயக்கும்மாலை)

ஆண்: பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்க பாய்போடுமே (பன்னீர்)
(மயக்கும் மாலை)
பெண் :பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே(பாலூட்டும்
கொன்றை மலர்கள் அன்பினாலே
போடும் பூவைத் தன்னாலே (மயக்கும் மாலை)
ஆண்: கனியிதழ் காதல் பசிதீர்க்குமே
பெண்:காண்போம் பேரின்பமே
ஆண்:வானிலும் ஏது வாழ்விதுபோலே
பெண்:வசந்தமே இனி எந்நாளும்
இருவரும்: மயக்குமாலை.....


விரும்பிக்கேட்டவர்: தம்பி கதிர்
திரைப்படம்: குலேபகாவலி
பாடியவர்கள்: ஜிக்கி ,ஏ.எம் ராஜா
பாடலை இயற்றியவர்:டி.எம்.ராமைய்யா தாஸ்
இசையமைத்தவர்கள்: விஸ்வநாதன் ராமமூர்த்தி

Thursday, August 21, 2008

656.பாரிஜாதப்பூவே! அந்த தேவலோகத்தேனே!

பாரிஜாதப்பூவே அந்த தேவலோகத்தேனே
வசந்தகாலம் தேடிவந்தது ஓஓ
மதனராகம் பாடவந்திடு (பாரிஜாதப்பூவே)

ஓர்ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்- நாம்
ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல் ஆடிடோவோமே- நாம்
ஆடிடுவோமே

வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
நாரதர் பாடுகின்ற கானமும் நீ (வீணையை)
நீலமேகமே ஒரு வானம் பாடியே (2)
சோலைக்குயில்கள் ஜோடிசேர்ந்ததே ஓ ஓ (பாரிஜாதப்பூவே)

ஆயிரம் காலம் வாழ்ந்திடவேணும்-நாம்
வாழ்ந்திடவேணும்
தாயாய் நீயும் தாங்கிட வேணும்-நீ

தாவியே ஓடிவரும் காவிரியே
ஓவியமே அழகு மேனகையே (தாவியே)
கோயில் தீபமே ஒரு தீவஜோதியே (2)
மேளதாளம் கேக்கவேணுமே (பாரிஜாதப்பூவே)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடலைப்பாடியவர்கள்: சுரேந்தர் ,சித்ரா
திரைப்படம்: என் ராசாவின் மனசிலே
இசையமைத்தவர்:இளையராஜா

Wednesday, August 20, 2008

655.தேவன் கோயில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று

ஆண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
பெண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
ஆண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
பெண்: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது ( தேவன் கோயில்)

ஆண்: நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண்: நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண்:பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண்:பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
ஆண்: காதல் தேவியே நீ என் ஜோதியே
பெண்: ஊஞ்சல் போலே என்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண்: கண்ணே நீயும் கேளாயே
பெண்: அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரைக்கண்டு இங்கே நின்றாய்

ஆண்: உள்ளம் என்ற மேடை உண்டு ஆடவா
பெண்: கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்:ராகம் பாடும் நேரம் என்று

பெண்:வானும் காற்றும் உந்தன் தேவை
ஆண்:எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண்:உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண்: உந்தன் அன்பே என்றும் தேவை
பெண்:நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண்:காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண்: கண்ணா நீயும் கேளாயோ
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
ஆண்: உள்ளம் உந்தன்வாசல் தேடி வந்தது
பெண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடலைப்பாடியவர்கள்:ஜானகி ,சுரேந்தர்
திரைப்படம் : நான் பாடும் பாடல்
இசையமைத்தவர்: இளையராஜா

Tuesday, August 19, 2008

654.மாமரத்து பூவெடுத்து ...


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மாமரத்துப்பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழலெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புதுநாடகம் விரைவில் அரங்கேறணும்

கூந்தலில் பூ சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிடமனசுத்துடிக்குது ஓஒ ஒ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது (மாமரத்துப்பூவெடுத்து)

சித்திரைப்பூவிழிப் பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா
முத்துரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர்வாழ இந்த பிறவிஎடுத்தது
உயிரோட உயிரான இந்த உறவு நிலைத்தது..(மாமரத்துப்பூவெடுத்து)
திரைப்படம் : ஊமை விழிகள்
பாடலைப்பாடியவர்கள் : SN.சுரேந்தர்,சசிரேகா
இசையமைத்தவர்: மனோஜ் க்யான்
வரிகள் : ஆபாவாணன்

653.தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்(தனிமையிலே )

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே(2)
என் உள்ளப் பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊர வேண்டும் சேரவேண்டும்(தனிமையிலே )

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே (2)
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்(தனிமையிலே)

Thanimaiyele - S.N.Surendar&Janaki

பாடலைப்பாடியவர்கள் : SNசுரேந்தர் , ஜானகி
திரைப்படம்: சட்டம் ஒரு இருட்டறை
இசையமைத்தவர்கள் : சங்கர் கணேஷ்

Sunday, August 17, 2008

652.மலர்களே மலர்களே மலரவேண்டாம்



மலர்களே மலர்களே மலரவேண்டாம்
உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை
ஓய்வெடுங்கள்
இன்று தோழனை அழைத்துவந்து
தேனை விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து
விருப்பம்போல வாழும் (மலர்களே)

ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே

சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி ( மலர்களே)

நீரோடு ஒரு காதல்
கடலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப்பார்க்க
மணல் வெளியில் நாள்முழுதும் கிடப்பேன்
புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.. (மலர்களே)
பாடலை விரும்பிக்கேட்டவர் ரம்யாரமணி
பாடலைப்பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலுக்கு இசையமைத்தவர்: யுவன்சங்கர்
திரைப்படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
பாடல் வரிகள் : தாமரை

651.மாலைப்பொழுதின் மயக்கத்திலே...

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி (2)

ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி (2)

ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )

மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் - அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

திரைப் படம்: பாக்யலஷ்மி
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
விரும்பிக்கேட்டவர்கள் : தம்பி
அனு

Friday, August 15, 2008

650. குண்டு ஒன்னு வச்சிருக்கேன்




குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
தொட்டால் சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குண்டு தொலைஞ்சிவிடும் பட்டா தெரிச்சிவிடும்
ஹோ ஹோ ஹோ ஹோய்
(குண்டு ஒன்னு..)

தாய்ப்பாலும் கெட்டுப்போச்சு என்ன பண்ணும் குழந்தை
வாய்காலில் தண்ணி இல்ல தண்ணியிலே மனுஷன்
சுட்டுப்புட்ட ஹீரோ நீதான் தட்டுக்கெட்டா ஜீரோதான்
வெட்டுக்குத்து நீயும் போட்டால் கட்சிக்குள்ள கோட்டாதான்
வீராப்பா மெரட்டி உருட்டும் ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாங்கதான்
(குண்டு ஒன்னு..)

நெல்லு விளையும் நிலம் வீணாகிப்போச்சு
ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு
கெட்ட வேலையானா கூட துட்டு வந்தா தப்பே இல்ல
இஷ்ட்டப்படி விட்டா போதும் அப்பன் போல புள்ளயில்ல
குளிரெல்லாம் விலகிப்போச்சு எல்லாமே பழகிப்போச்சு
வெள்ளைக்கும் சொள்ளைக்கும் அண்ணான்னு சொல்வீங்களே
(குண்டு ஒன்னு..)

படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

Thursday, August 14, 2008

649. புத்தம் புது பூமி வேண்டும்




புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு


யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்



படம்: திருடா திருடா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: மனோ, சித்ரா

Wednesday, August 13, 2008

648. நீ ஒரு காதல் சங்கீதம்









நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்


வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்


(நீ ஒரு காதல் சங்கீதம்)


பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு காதல் சங்கீதம்)


படம்: நாயகன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா

647. தேன்மொழி எந்தன் தேன்மொழி

தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் எங்கே? எங்கே?
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

தேவலோகத் தேரில் இவள் பாரிஜாதப் பூவா
பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை கோவில் தானா
பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு பாரம் அது கோடை மழை மேகம்
யாரடி நீ.... யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
வாய்மையின் வானம் ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே (தேன்மொழி)

மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்பக் கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும் (உனது வதனம்)
கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை (தேன்மொழி)

Then Mozhi... -

திரைப்படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசையமைத்தவர்: இளையராஜா
பாடலைப்பாடியவர்: மனோ

விரும்பி கேட்டவர்: மஜா

Tuesday, August 12, 2008

646. ஓ ப்ரியா ப்ரியா





ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா

645. ஓ பாப்பா லாலி








ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

(ஓ பாப்பா லாலி)

மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே

(ஓ பாப்பா லாலி)


படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

644. நிலா காயும் நேரம் சரணம்




நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

தென்றல் தேரில் நான் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி
பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இதுப் போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான்
நேங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சோடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்
அணைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
(நிலா காயும்..)

படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி

Monday, August 11, 2008

643.கண்ணே என் கண்மணியே!

கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
ஒன்ன நம்பி வந்த ரோசாக்கண்ணு
ஒன்னோட ஒன்னா நின்னு
தினம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு


மாலைக்கும் மாலை என்மாமன்பொண்ணு சேல
அழைக்கும் வேள அசத்தும் ஆள
சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோல
கட்டுங்க வாழ கொட்டுங்க பூவ
நீ கூறும் வேள இனிவேறென்ன வேல
ஏ மாமந்தோள தெனம் நான் சேரும் மால
ஒன்னு தாங்க கூரச்சேல
காலம் சேர்ந்ததும் மால மாத்தனும்
காதல் கத சொல்லி போத ஏத்தனும்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
உன்ன நம்பி வந்த ரோசாப்பொண்ணு
ஒன்னோட ஒன்னாநின்னு தினம் ஒன்ன எண்ணும் சின்னப்பொண்ணு

உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு
கண்ணுக்குள் உன்ன நாகட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும்
பூவான வானம் அதில் போய் ஆட வேணும்
இனி மேலே என்ன வேணும்
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன்
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போலே
(கண்ணே என் கண்மணியே)

kanne en kanmaniye.mp3 -

திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்
இசை : இளையராஜா
பாடிவர்கள் : சித்ரா மனோ

642. தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு




தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ உடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூன்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் தீ வலை யா
நோயானேன் உயிரும் நீ ஆனேன்
இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??
சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன் நான் தூக்கம் இன்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும் ]
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, உன்னி கிருஷ்ணன்

Friday, August 8, 2008

641நாதஸ்வர ஓசையிலே...>> வானொலித் தொகுப்பு






ஸ்ரீ.காரைக்குறிச்சி அருணாசலம்


நாதஸ்வர ஓசையிலே...>> வானொலித் தொகுப்பு

திரு. அகிலா என்.விஜயகுமார், திருப்பூர் எனது நண்பர் அவரின் வானொலி படைப்பாக நாதஸ்வரம் இசைக்கருவி சினிமா பாடல்களில் எவ்வாறு உபயோகப்பட்டிருக்கிறது என்பதை தன் என்னங்களை ஆக்கமாக ஒலிவடிவாக இனிமையான பாடல்களூடன் வானொலி பதிப்பாக எனக்கு அனுப்பினார். இந்த ஒலித்தொகுப்பு கோவை சூரியன் பண்பலையில் இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிப்பரப்ப பட்டது.

இதேபோல் சென்ற மாதம் இதே தேன்கிண்ணத்தில் காலதேவனும் கலைரசிகனும் என்ற ஒலித்தொகுப்பை எனது நண்பர் சேலம் திரு. ராஜ்குமார் படைப்பை அவரின் சார்பாக வழங்கினேன் அதை அனைவரும் கேட்டு இன்புற்றிருப்பீர்கள்.

மேற்கண்ட இரு நண்பர்களூம் எனக்கு சமீபத்தில் வானொலியின் மூலம் நண்பர்களானவர்கள். சரியாக சொல்லவேண்டுமென்றால். என்னுடைய ஒலித்தொகுப்பான “பாடும் நிலா பாலு” தளத்தில் ”பாடும் நிலாவும் பரமரசிகனும்” என்ற தலைப்பில் ஓர் ஒலித்தொக்குப்பு ஜூன் 4ஆம் தேதி அன்று எனது அபிமான பாடகர் டாக்டர் பாலுஜியின் பிறந்த நாளில் ஒலிபரப்பினார்கள். அது போலவே இதுவும் ஒரு வித்தியாசமான இனிமையான பாடல்கள் உடைய ஒலித்தொகுப்பு. சந்தேகத்திற்க்கு இடமில்லாமல் வானொலி அறிவிப்பாளர் திரு. லக்‌ஷ்மி நாராயணா அவர்கள் டிஜிட்டல் குரலில் மறுமுறை தேன் கிண்ணம் ரசிகர்களுக்காக வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தங்களீன் ஆர்வத்தின் குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. திரு. ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயணா குரலில் கேட்டு மகிழுங்கள் இந்த ஒலித்தொகுப்பை.

நாதஸ்வர நாயணத்தில் மூழ்க தாயாராகுங்கள். திருப்புர் அகிலா என்.விஜயக்குமார் அவர்களின் அபார உழைப்பிற்க்கு தேன்கிண்ணம் பதிவாளர்கள் சார்பாக மிக்க நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் பெருமையடைகின்றேன்.

குறிப்பு: ஒலித்தொகுப்பின் நடுவில் சில வானொலி விளம்பரங்கள் தவிர்க்க முடியவில்லை எப்போதும் தேன்கிண்ணத்தில் பாடல் மட்டும் கேட்டு வரும் இசைப்பிரியர்களூக்கு இதோ இந்த ஒலித்தொகுப்பு விளம்பரத்துடன் கேட்பதும் ஒரு வித்தியாமாக இருக்கும். எந்த வித உட்கருத்துடனும் இதை நான் சொல்லவில்லை. ஒலித்தொகுப்பு இறக்குமதி வகையில் பதியப்பட்டுள்ளது. ஆகையால் ஒலித்தொகுப்பை இறக்கு மதி செய்து விளம்பரங்களளை விரும்பாதவர்கள் ஓட்டி விட்டு கேளூங்கள். ஆணால், மறக்காமல் படைப்பாளிக்கு ஒரு வாழ்த்துச்சொல்லிவிடுங்கள்.

1. நாதஸ்வரம் ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் - பூவும் பொட்டும்.

2. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு, கந்தன் கருணை,

3. நலந்தானா உடலும் உள்ளமும், தில்லானமோகனாம்பாள், நாதஸ்வரம் - மதுரை சகோதரர்கள்

4. தங்கத்தேரோடும் வீதியிலே, லக்ஷ்மிகல்யாணம்

5. எட்டு அடுக்கு மாளிகையில், பாதகாணிக்கை

6. சித்தாடை கட்டிக்கிட்டு, வண்ணக்கிளி

7. நடக்கும் என்பார் நடக்காது, தாயைக்காத்த தனயன்

8. இத்தன் மாந்தருக்கும் ஒரு கோவில் போதாது, உண்மையே உன் விலை என்ன?

9. சிங்கார தேவனே, கொஞ்சும் சலங்கை

Get this widget | Track details | eSnips Social DNA

640. எகிறி குதித்தேன் வானம் இடித்தது





எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(அலே அலே)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா

Thursday, August 7, 2008

639. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்





நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

படம்: சில்லுன்னு ஒரு காதல்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

Wednesday, August 6, 2008

638. என் காதலே என் காதலே





என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

Tuesday, August 5, 2008

637. நறுமுகையே நறுமுகையே





நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
(நறுமுகையே..)

யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ

விரும்பி கேட்டவர்: சுபாஷ்

Monday, August 4, 2008

636. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ




பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
(பெண்ணல்ல பெண்ணல்ல..)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாளம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ....
(பெண்ணல்ல பெண்ணல்ல..)

தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
(பெண்ணல்ல பெண்ணல்ல..)

சித்திரை மாத நிலவொளி..
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...
(பெண்ணல்ல பெண்ணல்ல..)

படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

635. எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே





முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிறு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே
(எல்லா புகழும்..)
ஒஹோ தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே
ஆ ஆ ....
(எல்லா புகழும்..)

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நேற்று நடந்த காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா
ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே ..தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்
தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
ஏய் ...
(எல்லா புகழும்..)
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாட ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை
கடல் போல் , மலை போல், காற்றை போல் , பூமி போல்
நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம்
என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்
(எல்லா புகழும்..)
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் . .
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..
மாணவன் மனது வைத்தால் ..

படம்: அழகிய தமிழ் மகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

634. ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா

வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு
ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்

ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி
டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே
சயின்சைக் கலக்கிட வா

டைம்மிஷினில் ஏறிச் சென்று நாமும்
ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம்
ஹிட்லர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கே
குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்
சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்போம்
மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

மழை மேகம் எங்கே அதைத் தேடி
நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து மழை வந்தால்
வருக வருக என்று வரவேற்போம்
ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்
கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம்
கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம்
டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லிக்கொடுப்போம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)


படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: க்ரீஷ், நரேஷ் ஐயர்

Sunday, August 3, 2008

633. அன்பே என் அன்பே உன் விழி பார்க்க



Get Your Own Hindi Songs Player at Music Plugin

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா, பிரசன்னா


விரும்பி கேட்டவர்: விக்னேஷ்வரன்

Last 25 songs posted in Thenkinnam