Friday, August 29, 2008

665. நாணமோ இன்னும் நாணமோ




நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ... நாணமோ..
ஓஓ...ஓ.. நாணமோ இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ.... நாணுமோ...
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ... நாணமோ..

தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனன்த வெள்ளத்தில் நீராடுது
அது எது?
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது எது?

னாணுமோ.... நாணுமோ...
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ... நாணமோ..

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதான் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன் - P சுசீலா

3 Comments:

முகவை மைந்தன் said...

ஆகா, நீங்களும் எம்சியாரு ரசிகரா? கலக்கல் பாடல்கள். இந்த பாட்டைக் கேட்கும் போது ஏனோ 'ராபர்ட்டூ' பாடலின் சேட்டைகள் தான் உடன் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகிறது.

MyFriend said...

@முகவை மைந்தன்:

ஹீஹீ.. நான் எல்லா பாடல்களையும் ரசிக்கும் ரசிகை. ;-)

உங்களுக்கு வேறேதாவது விருப்பப் பாடல்கள் இருந்தால் சொல்லுங்க. தேன்கிண்ணம் மூலமாக நிறைவேத்திடலாம். :-)

வல்லிசிம்ஹன் said...

என்னிக்கும் இளமையான பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவும் சுசீலாம்மா குரல் வளைந்து நெளிந்து போகும் அழகு.....சொல்லி முடியாது.

Last 25 songs posted in Thenkinnam