Sunday, August 17, 2008

651.மாலைப்பொழுதின் மயக்கத்திலே...

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி (2)

ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி (2)

ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )

மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் - அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

திரைப் படம்: பாக்யலஷ்மி
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
விரும்பிக்கேட்டவர்கள் : தம்பி
அனு

22 Comments:

ராஜ நடராஜன் said...

இந்தப் பாட்டு மனதில் பதிந்து பதிவிலும் பதிகிறீர்கள் என்பதை நம்பலாம்.காரணம் இசை வார்த்தைக்கு துணையாகவும் பாட்டும் உச்சரிப்பும் முன்னிலைப் படுத்தும் காலங்கள் அவை.தற்காலப் பாடல்களை எப்படி பதிவில் பதிகிறீர்கள் என்ற ரகசியத்தை சொல்லுங்கள்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராஜநடராஜன் .. ஒரு மனுசனுக்கு சந்தேகம் வரலாம்..சந்தேகமே மனுசனா இருப்பீங்க போலயே.. :)
சரி எனக்கு ஒரு சந்தேகம் .. நீங்க நான் பதிகிற எல்லா பாடல்களிலும் இதை கேக்கறீங்களே..நான் தரும்பதிலை படிக்கிறீர்களா இல்லையா என்பதே சந்தேகம் ஏன்னா அதே பதிலை இனி காப்பி செய்து ஒவ்வொரு பதிவுலயும் போடலாம்ன்னு நீங்க் கேக்கும் போது பேஸ்ட் செய்யலாம்ன்னு பார்க்கிறேன்.. :)

Anonymous said...

சவுகார் ஜானகி நல்லா உருக்கமா நடிச்சுருப்பாங்க இந்தப்பாட்டுக்கு, சூப்பரான பாட்டு

அபி அப்பா said...

சூப்பர் பாட்டு! இரவின் மடியில்ன்னு ஒரு நிகழ்ச்சி அப்போ இலங்கை ரேடியோவிலே. அதிலே இதுக்கு நிரந்தர இடம் உண்டு!!

சந்தனமுல்லை said...

நல்ல பாட்டு..பொதுவா பழைய பாட்டுன்னாலே அவ்வளவா ஆர்வம் காட்டாத நான் முகிலுக்காக கேட்க ஆரம்பிச்சு, மனசுல ஒட்டிக்கொண்ட பாட்டு!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சின்ன அம்மிணி வாங்க..சவுகார் அழகா இருப்பாங்க இல்ல..சின்னவயசா... :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமாம் அபி அப்பா நானும் இந்த பாட்டை இலங்கை ரேடியோவில்தான் அடிக்கடி இரவில் கேட்டிருக்கேன்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சந்தனமுல்லை,, பப்புவோட அப்பாவா முகில்... :)

வல்லிசிம்ஹன் said...

இனிய உருக்கமான பாட்டு முத்து.

இதுவும் காணவந்த காட்சியென்ன வெள்ளி நிலவே பாட்டும் எங்க பள்ளி நாட்களில் வெகு பிரபலம்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வல்லி வாங்க.. அந்தகாலத்துப்பாட்டுன்னா ஓடி வந்திருவீங்களே.. அந்தபாட்டையும் போட்டுறலாம். :)

சந்தனமுல்லை said...

முத்துலெட்சுமி..ஆமாப்பா ஆமா :-)!
மிஸ்டர். முகில்வண்ணன்!!

தோழி said...

ரொம்ப நன்றிங்க. பாடல் வரிகளும், இசையும், குரலும் எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்கள் பழைய பாடல்கள். நன்றி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றிங்க தோழி..இங்கே எல்லார் ரசனைக்கும் பாடல் கிடைக்கும்..

ராமலக்ஷ்மி said...

பிடித்த பாடல். பலமுறை கேட்டும் ரசித்திருக்கிறேன். பார்த்தும் ரசித்திருக்கிறேன். ஆனால் திரைப்படத்தை பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் இப்பாடல் ஒளிபரப்பாகக் காண நேருகையில் பாட்டின் பின்னணி அறிய ஆர்வம் ஏற்படும். யாருக்காவது தெரிந்திருந்தால் 4 வரியில் சொல்ல முடியுமா? (கூட 4 வரி இருந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை:) )

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சவுகார்க்கு ஜெமினிகூட...சின்னவயசில் கல்யாணம் ஆகி ..இறந்துட்டார்ன்னு நினைச்சு வெள்ளைச்சேலையொட இருப்பாங்க.. .. சவுகார் ப்ரண்டையே காதலிப்பாரு ஜெமினி.. ன்னு எதோ கொஞ்சம் நியாபக்ம் வருதுப்பா..ராமலக்ஷ்மி..அவங்க ரெண்டுப்பேருமா சேர்ந்து சவுகாரை பாடலைப்பாடச்சொல்லி கேட்கும் காட்சி இது..

தம்பி said...

நாந்தான முதல்ல கேட்டேன் இந்த பாட்ட... :(

ராமலக்ஷ்மி said...

விளக்கத்துக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ அப்படியா மன்னிக்கனும் , தம்பி உங்க பேரும் போட்டிரலாம்.. இலங்கை வானொலி மாதிரி ..அம்மம்மா .. சித்தப்பா, பெரியப்பான்னு எத்தனைபேரு வேணாலும் சேர்த்துக்கலாமே..

தம்பி said...

அப்டின்னா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ பாட்டு போடுங்க.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தேன்கிண்ணம் நட்சத்திரமல்லாத வேற நேயர்விருப்பங்கள்.. வார இறுதிகளில் போடுறோம் தம்பி..அப்ப அந்த பாடல் போட்டுடலாம் ..நல்ல பாடல்..

சதீஷ் said...

இசைஞானி அடிக்கடி பல பேட்டிகளில் இந்தப் பாடலைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் சினிமாவில் உதவி இசையமைப்பாளராய் இருந்த காலத்தில் "தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்" என்கிற வரிகள் அவரைப் பாதித்ததைப் பற்றி சொல்லி இருக்கிறார்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சுவையான தகவலுக்கு நன்றி சதீஷ்..

Last 25 songs posted in Thenkinnam