பெண்:
மயக்கும் மாலைப்பொழுதே நீ போ!போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா!வா!
இன்னலைத் தீர்க்கவா!( மயக்கும்மாலை)
ஆண்: பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்க பாய்போடுமே (பன்னீர்)
(மயக்கும் மாலை)
பெண் :பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே(பாலூட்டும்
கொன்றை மலர்கள் அன்பினாலே
போடும் பூவைத் தன்னாலே (மயக்கும் மாலை)
ஆண்: கனியிதழ் காதல் பசிதீர்க்குமே
பெண்:காண்போம் பேரின்பமே
ஆண்:வானிலும் ஏது வாழ்விதுபோலே
பெண்:வசந்தமே இனி எந்நாளும்
இருவரும்: மயக்குமாலை.....
விரும்பிக்கேட்டவர்: தம்பி கதிர்
திரைப்படம்: குலேபகாவலி
பாடியவர்கள்: ஜிக்கி ,ஏ.எம் ராஜா
பாடலை இயற்றியவர்:டி.எம்.ராமைய்யா தாஸ்
இசையமைத்தவர்கள்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
Saturday, August 23, 2008
657. மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:32 PM
வகை AM ராஜா, TN ராமய்யா தாஸ், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, ஜிக்கி
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ம்ம்ம்ம். அருமையான பாட்டு. ஜிக்கியும் ராஜாவும் இணைந்து இழையோடிப் பாடியிருக்கிறார்கள்.
முத்து,அது என்ன இந்த மாலை என்று பெயருடன் ஆரம்பித்தாலே அந்தப் பாடல்களுக்கு மயக்கம் வந்துவிடுகிறதே...கவனித்தீர்களா:)
நன்றி நன்றி நன்றி.
மாலை மயக்கம்.. ஆகா வல்லி ... என்ன ஒரு கண்டுபிடிப்பு.. மாலைமயக்கம் வச்சு நிறைய பாட்டு இருக்கு திரையிசையில்... மானாவுக்கு மானாவா எழுதி இருப்பாங்களோன்னு தோணுது...:)
நன்றி தம்பி.. உங்களைப்போன்ற ரசிகர்களின் நேயர்விருப்பங்கள் எங்கள் பலம்..
Post a Comment